தீவிரவாதிகளுக்காக ஒரு வங்கி


தீவிரவாதிகளுக்கு உதவும் HSBC தனியார் வங்கியின் சேவை.
 அம்பலம்
தீவிரவாதிகளின் பணப் பரிவர்த்தனைக்கு எச்எஸ் பிசி என்ற பன்னாட்டு தனி யார் வங்கி உதவி வருகிறது என்பது தற்போது அம்பல மாகியிருக்கிறது. 
சுரன்

இதையடுத்து அந்த வங்கியின் அனைத்து நடவடிக்கைகளையும் தீவிர மாக கண்காணிக்க அமெ ரிக்கா முடிவு செய்திருக்கிறது. 
எச்.எஸ்.பி.சி. வங்கி லண் டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை இயக்கி வருகிறது. குறிப்பாக உலக அளவில் மிகப்பெரிய வங்கி களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. அமெரிக்கா, இந் தியா, மெக்சிகோ, சவுதி அரேபியா உள்ளிட்ட பல் வேறு நாடுகளில் தனது கிளைகளை இயக்கி வருகி றது.
 இந்தHSBC வங்கி ஒரு நாட் டில் தனது கிளையை நிறுவு கிறது என்றால் அந்த நாட் டின் சட்டத்திட்டங்களுக்கு உட்படாமல் செயல் பட்டு வருவதாக புகார் எழுந்தது
 அமெரிக் காவில் உள்ள இந்த வங்கிக ளின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக அந்நாட்டின் செனட் சபை, கார்ல்வெவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு கடந்த ஒரு வருடமாக எச்.எஸ்.பி.சி வங்கியின் அனைத்து செயல் பாடுகளையும் ஆய்வு செய் தது. 
சுரன்

ஆய்வின் இறுதியாக அக்குழு 330 பக்கம் கொண்ட அறிக்கையை தயாரித்துள்ளது. அதோடு அந்த வங்கியின் பணப்பரி மாற்றம் சம்பந்தப்பட்ட நூறு ஆவணங்களையும் சேகரித்திருக்கிறது. இதில் எச்.எஸ்.பி.சி. வங்கி எப்படி தனது சுயலாபத்திற் காக தீவிரவாத மற்றும் பயங்கரவாதக் கும்பலின் பணப் பரிவர்த்தனைக்கு உதவியி ருக்கிறது என்பது தெரியவந் துள்ளது. இது அமெரிக்கா வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆய்வில் உலக அளவில் சட் டவிரோதமாக போதை மருந்து கடத்தும் கும்பல் மற்றும் தீவிரவாதக் கும்பல், ஆயுத விற்பனை கும்பல்கள் எச்எஸ்பிசி வங்கியின் மூலம் எவ்வித தடையும் இன்றி பணத்தை பரிவர்த் தனை செய்திருக்கின்றனர். 
சவுதி அரேபியா, மெக்சி கோ, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இதே வங்கி கிளைகளில் இருந்து அமெரிக்காவில் உள்ள கிளைகளுக்கு சட்ட விரோதமாக பல ஆயிரம் கோடி வந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இப்படி பரிவர்த் தனை செய்யப்படும் பணம் அமெரிக்காவின் டாலராக மாற்றப்பட்டு மீண்டும் அதே வங்கிகளுக்கு சென்றி ருப்பதும் தெரிய வந்திருக்கி றது. குறிப்பாக கருப்பு பணம் பதுக்குவோருக்கு சிறந்த வங்கியாக இந்த எச் எஸ்பிசி வங்கி செயல்பட்டி ருப்பதும் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 

அல் கொய் தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த சவூதி அரேபியாவின் அல் ராஜ்ஹி வங்கியுடனும் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. எச்.எஸ்.பி.சி. வங்கி, மற்ற நாடுகளில் உள்ள வங்கி களுக்கு டாலர் சப்ளை செய் வதற்காக, அமெரிக்காவில் உள்ள கிளைகளை நுழை வாயிலாகப் பயன்படுத்தி யிருக்கிறது. 
இது அமெரிக்க வங்கி விதிமுறைகளை மீறிய செயல் ஆகும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை அமெரிக்க செனட் சபை விவாதித்தது. முடிவில் இந்த வேலையை இதோடு நிறுத்திக் கொள் ளாவிட்டால் அந்த வங்கி யின் மீது கடுமையான நட வடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இது போன்ற இதர வங்கிகளின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை கண் காணிக்கவும் செனட் சபை தீர்மானித்திருக்கிறது. 
இந் நிலையில் எச்.எஸ்.பி.சி. வங்கி தவறுக்கு மன்னிப்புக் கேட் பதாக அறிவித்திருக் கிறது. இதே வங்கி இந்தியாவி லும் பல நகரங்களில் தனது கிளையை துவங்கி செயல் பட்டு வருகிறது. 

கருப்பு பணத்தை பதுக்கி வருபவர் களுக்கு இந்த வங்கி தற்போ தும் புகலிடமாக இருந்து வருகிறது. காரணம், அந்த வங்கியின் செயல்பாட்டை கண்காணிக்க இந்திய அர சிடம் போதிவிதிகளும்-வசதிகளும் இல்லை. மேலும் பன் னாட்டு தனியார் வங்கிக ளுக்கு அனுமதி கொடுப்ப தில் கடுமையான விதிமுறை களை வகுத்து முறைப்படுத் திட வேண்டும். இல்லை யென்றால் கருப்பு பண முத லைகளுக்கு புகலிடமாக பன்னாட்டு தனியார் வங்கி கள் செயல் படுவதை இன் றைய நவீன தாராளமயச் சூழலில் தடுக்க முடியாது என இந்திய பொருளாதார வல்லுநர்கள் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுரன்

தீவீரவாதிகள் இந்தியாவுக்கு பணத்தை கொண்டுவர இவ்வளவு எளிதாக இந்த வங்கி உதவும் போது அவர்கள் பணத்தை இதன் மூலமும் ஏ டி எம் மூலமே எடுத்து தங்கள் திட்டங்க்களை நிறைவேற்றிக்கொள்ள அழகாக இந்திய அரசே உதவுகிறது போல் உள்ளது.
இச்செய்கையானது தீவிரவாதிகள் இந்தியாவில் குண்டுகள் வைக்க இந்திய அரசே வெடிமருந்து கொடுப்பது போலான செய்கையாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?