பயிற்சி தர ஆயிரம் பேர் .....?

அண்ணன் எப்போ சாவான் ,திண்ணை எப்போ காலியாகும் .இதுதான் இன்றைய பாகிஸ்தான் நிலை.
 தாம்பரத்தில் சிங்களப்படையினருக்கு பயிற்சி அளிக்க ஒட்டு மொத்த எதிர்ப்பு காரணமாக இந்திய அரசு அவர்களை பெங்களூருக்கு அனுப்பி பயிற்சியை தொடருகிறது.
ஆனால் சிங்களப்படையினர் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டால் தான் பயிற்சி அளிக்க பயிற்சிதளத்துடன் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை அரசுக்கு தகவல் அளித்துள்ளதாம்.
சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிப்பதில் அப்படி என்ன போட்டி நிலவுகிறது.
சுரன்

இதை வைத்து இலங்கையில் தங்கள் காலை ஊன்றிக்கொள்ளலாம் என்ற ஆவல்தான்.
இலங்கைஒரு ராணுவ மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
இலங்கையில் தங்கள் நாட்டின் படைத்தளத்தை  நிறுவி விட்டால் இந்தியா போன்ற இந்து மாக்கடல் நாடுகள் அச்சுறுத்தலுக்கு பயன் படும் இந்த  காரணமும், மன்னார் வளை குடா பகுதி எண்ணை வளமும்தான் பெரும் நாடுகளின் கண்ணை உறுத்திக்கொண்டிருக்கிறது,
அதன் காரணமாகவே இந்தியாவும் இலங்கையுடன் ஒரு சமரச போக்கை கடை பிடிக்கிறது.
இலங்கையை தன் வசப்படுத்த ரஷ்யா,அமெரிக்கா,சீனா,பாகிஸ்தான்,இந்தியா போன்ற நாடுகள் முயன்று வருகின்றது.
சுரன்

அது தெரிந்தே ஈழத்தமிழர் பிரச்னையை இலங்கை தூசாக மதிக்கிறது.
இலங்கை சீனா,ரஷ்யா பக்கம் சாய்ந்து வரும் கோபத்தினால் தான் அமெரிக்கா ஐநாவில் அதற்கு எதிராக தீர்மான்ம் கொண்டு வரப்போவதாக பயமுறுத்தியது.
மற்றபடி மனித உரிமையாவது,தமிழர் நலமாவது அமெரிக்காவிடம் அதை எதிர் பார்க்கலாமா?
ஈராக்கில் அது செய்யாததா?இப்போது ஆப்கன்,பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் அது செய்துவராததா?
ஆனால் இலங்கைக்கு அமெரிக்கா பூச்சாண்டி பற்றி கவலை இருந்தாலும் பயம் இல்லை.
காரணம் ஐநா சபை ஒன்றும் செய்து விடப்போவதில்லை.அதிக பட்சம் கண்டனம்தான்.அதை வைத்து என்ன செய்ய?
பொருளாதாரத்தடை என்றால் இருக்கவே ,இருக்கிறது சீனா,ரஷ்யா ஆதரவும்,வீட்டோ அதிகாரமும் .இது போதாதா?
சுரன்

அமெரிக்கா தீர்மானத்தை நிறைவெற்றி இத்தனை காலமாயிற்றே .இலங்கையில் என்ன நன்மை தமிழருக்கு கிடைத்துள்ளது.
தமிழினத்தலைவர்கள் இது தொடர்பாக சீனா,ரஷ்யா,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஈழத்துயரை கூறி ஆதரவை திரட்டி அதன் மூல இலங்கையை ஓரளவு தமிழர் உரிமையை வழங்க செய்யலாம்.

இந்தியா உதவும்,அமெரிக்கா தீர்மானம் போட்டு விட்டதென்று நினைப்பதால் எந்த பயனும் கிடையாது.
தமிழ் நாட்டில் இலங்கை படையினருக்குபயிற்சி கொடுப்பதை எதிர்ப்பதன் மூலம் நமது தமிழுணர்வை காட்டலாம்.
சுரன்

ஆனால் இந்தியா பயிற்சி கொடுக்கா விட்டால் இலங்கைக்கு பாகிஸ்தான் இருக்கிறது.சீனா இருக்கிறது.ரஷ்யா இருக்கிறது.அதற்கு காரணமான எண்ணை வளமும் ,பாதுகாப்பு முக்கியத்துவமும் இருக்கிறது.
இது போன்ற சில காரணங்களால் வளைந்து போகும் இந்திய அரசும் இருக்கிறது.
தமிழனுக்குத்தான் நாதியில்லை.ஆனால் சிங்கள அரசுக்கு பலம் உலக அளவில் உள்ளது.
இப்போதைக்கு தமிழக மீனவர்-இலங்கை கடற்படையினர் பிரச்னையை கடிதம் எழுதுவதை யும்-கண்டனம் தெரிவிப்பதையும் தவிர தீர்க்க நம் அரசியல்வாதிகளாலும்,தமிழக அரசாலும் முடியவில்லையே.நம்மால் இப்போதைக்கு முடிந்தது வெறும் மாநாடு[டெசோ] நடத்தி நம் ஆவலை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஈழம் பெற ஆயுதப்போராட்டம் தணிந்த பின் வேறு முறைகளை கையாளவேண்டியதுதான்.அதற்கு சூடான்,பாலஸ்தீனம் போன்ற வழிகாட்டிகள் நிறைய உள்ளது,
குறிப்பு:இந்த இடுகையை படித்து விட்டு பலர் கோபத்துடன் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இன்றைய தமிழீழ கனவின் யதார்த்தத்தைதான் இந்த இடுகை பிரதிபலிக்கிறது.இந்தியா உட்பட ஒவ்வொரு நாடுகளும் ஈழப்பிரச்னையை எதிர் கொள்ளும் உண்மை நிலை இதுதான்.
அவரவர் நாட்டு நலன் அவர்களுக்கு முக்கியம்.இதனால் சீமான்,வைகோ,நெடுமாறன் போன்று வீர வசனங்கள் பேசுவதாலோ,-கருணாநிதி போல் டெசோ மாநாடு நடத்துவதாலோ-ஜெயலலிதா போல் கடிதங்களும்,கண்டனங்களும் எழுதுவதாலோ ஆகப்போவது எதுவும் இராது.இது எனது கருத்து.
ஈழப்போராட்டம் தனது ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின் வேறு வடிவம் அது அனைத்துலக ஆதரவுடன் மேற்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.சூடான் போன்று ஒரு தேர்தலை அனைத்து நாடுகள் மூலம் வற்புறுத்தி நடத்த வேண்டும்.
இந்தியா போல் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி இனவாரியாக அல்லது மொழி வாரியாக தேர்தல் மூலம் கிடைக்கச்செய்ய வேண்டும் அதுதான் இப்போதைய உண்மை நிலை.
சிங்கள படையினருக்கு இந்தியா பயிற்சி தராவிட்டால் பயிற்சி தர பலர் இருக்கிறார்கள்.அதற்கான காரணம் என்ன என்பதுதான் இப்பதிவின் நோக்கம்.
அதற்காக இந்தியாவில் பயிற்சி தருவதை ஏற்றுக்கொள்ள கூடாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?