இந்தியா காணப் போகும் வறட்சி,


பருவ மழை சரியாக பெய்யாததால் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முதல் தடவையாக வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக இந்திய அரசுஅலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பசுபிக் சமுத்திரத்தின் ''எல்லினோ தாக்கம்'' காரணமாக வரும் செப்டம்பர் மாதமும் மழை வழக்கத்தை விட மிகக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை துறைத் தலைவர் லட்சுமன் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.
சுரன்
இந்த எல்லினோ தாக்கம் உலகமுழுக்க காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இந்தியாவின் மழை வீழ்ச்சிக் குறைவு, ஆசியாவின் மூன்றாவது பெரிய  பொருளாதார நாடான இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.
இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி குறைவு, உணவு விலைகள்  அதிகரிப்பும் உண்டாகும்.ஏற்கனவே பொருளாதாரத்தில் வீழ்ந்து கோண்டிருக்கும் இந்தியாவுக்க்கு இது பெரும் கேடு.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
வால்மார்ட்டும் ஒபாமாவும்

எஸ்.ஏ.பெருமாள்


இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதது சரியல்ல என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, மத்திய அரசைக் கட்டாயப்படுத்தியிருக் கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒபாமா, அமெரிக்க அரசு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை இதற்காக இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார்.
ஹிலாரியும் வந்து, மம்தா பானர்ஜி முதல் ஜெயலலிதா வரை சில மாநில முதலமைச்சர்களைச் சந்தித்துவிட்டுப் போனார். பாச்சா ஒன்றும் பலிக்காததால், ஒபாமாவே களத்தில் இறங்கியுள்ளார். அவர் ஏற்கெனவே, அமெரிக்கத் தேர்தல் களத்தில் திணறிக்கொண்டிருக்கிறார்.
சுரன்

வால்மார்ட்டுக்கு 120 கோடிப் பேர் கொண்ட பிரம்மாண்ட மார்க்கெட்டைத் திறந்துவிட் டால், தனக்குப் பாராட்டுக் கிடைக்கும். மேலும் தேர்தலுக்கும் பயன்படும் என்று கருது கிறார்.அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் உரிமை பாராட்டத்தக்க மனிதர்கள் இருவர் உள்ளனர்.
ஒருவர், பிரதமர் மன்மோகன் சிங். மற்றொருவர் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா. இருவரும் உலக வங்கியின் முன்னாள் அதி காரிகள். ஓய்வூதியம் பெறுகிறவர்கள். ஹிலாரி கிளிண்டன் 1986 முதல் 1992வரை வால்மார்ட் நிறுவன இயக்குநராகப் பணியாற்றியவர். எனவே வால்மார்ட்டை நுழைக்க பலவித முயற்சிகள் தொடர்கின்றன.இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் கடந்த எட்டாண்டுகளாக வால் மார்ட் நுழைய முடியவில்லை. இல்லையேல் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நால ரைக் கோடி குடும்பங்களை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முன்பே நடுத் தெருவில் நிறுத்தியிருக்கும். ராட்சத நிறுவனமான வால்மார்ட்டின் கடந்த ஆண்டு வரு மானம் ரூ.25 லட்சம் கோடியாகும். இவர்கள் செய்வது சில்லரை வியாபாரமாம்.
சுரன்

இவர் களை இந்தியாவில் அனுமதித்து, சில்லரை வியாபாரிகளையும் விவசாயிகளையும் காவு கொடுக்கவே ஐ.மு.கூட்டணி அரசு விரும்புகிறது. நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பலைகளால் தயங்குகிறது.2005ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் ஒரு விவசாய ஒப்பந்தம் செய்தார். இந்தியாவில் விதைகள் சந்தையை மான்சான்ட்டோ நிறுவனத்திற்கும், தானியங்களின் சந்தையையும் சில்லரை வர்த்தகத் தையும் வால்மார்ட் நிறுவனத்திற்கும் வழங்க அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அன்று இடதுசாரி எம்.பி.க்கள் 63 பேரின் தயவில் மத்திய ஆட்சி இருந்ததால், அந்த ஒப்பந்தம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அந்த ஒப்பந்தம் இந்தியாவின் அரசியல் சட்டப் பிரிவுகள் -14, 19, 21ஐ மீறியதாகும். வால்மார்ட்டின் நேரடி வருகை தடுக்கப்பட்டதும் அது பின்வாசல் வழியே பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவன பேனரில் நுழைய முயற் சித்தது.வால்மார்ட் 27 நாடுகளில் 69 வேறுபட்ட பெயர்களில் இயங்கி வருகிறது. இருபது லட்சம் ஊழியர்கள் இவற்றில் பணிபுரிகிறார்கள். வால்மார்ட் வளாகத்தில் 60,000 வெவ் வேறு பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதில் சூப்பர் சென்டர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வால்மார்ட் நுழைந்தபின் உள்ளூர் வியாபாரிகளுக்கு வேலையோ, வியாபாரமோ இல்லை. இதனால் தானி யங்கள், காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வால்மார்ட்டின் பலி கடாக்களாய் மாறுகிறார்கள். அதிலும் சிறு விவசாயிகளுக்கு வால்மார்ட்டில் இடமே இல்லை. அவர்கள் கதி அதோ கதிதான்.2008ம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்தது. அமெரிக்கா தூக்கிநிறுத்த முடியாமல் தத்தளிக்கிறது. யார் மீது விழுவோம் என்று திரிகிறது.
சுரன்

ஐரோப் பிய நாடுகளும் கிரீஸ் முதல் ஸ்பெயின் வரை திவாலாகி வருகின்றன. இந்தியாகூட ஐரோப்பிய நாடுகளை திவால் நிலையிலிருந்து மீட்க ரூ.70 ஆயிரம் கோடி கடன் வழங்க முன்வந்துள்ளது என்றால், நிலைமை எவ்வளவு மோசம் என்பதை அறியமுடியும். அமெரிக்கா இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு குறைந்தது 25 ஆண்டுக ளாவது ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை தாக்குப்பிடிக்க வழிகள் எவை என்பதே அமெரிக்காவின் இன்றைய யோசனையாகும்.அமெரிக்கா செல்வாக்கோடு இருந்தபோது, அவர்களது டாலரும் தங்கத்துக்கு அடுத்தபடியான செல்வாக்குடன் இருந்தது. அந்தக் காலத்தில் உலக நாடுகள் டாலர் கரன்சியை தங்கத்திற்குப் பதில் தங்கள் கையிருப்பாக வைத்துக்கொண்டன. இப்படி உலக நாடுகள் தங்கள் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் 500 லட்சம் கோடி டாலர் களை இருப்பாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க வங்கிகளையும் தொழில்களையும் தக்கவைப்பதற்கு டன் கணக்கில் டாலர் கரன்சியை அச்சிட்டுக் கொடுப்பதாகவும் தெரிகிறது.இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா தங்கள் நாட்டு நிறுவனங்களின் பொருளா தார நிலை வலுவாக உள்ளது என்று உலகுக்குக் காட்ட வேண்டியுள்ளது.
சுரன்

அதற்கு வால் மார்ட் போன்ற ராட்சத நிறுவனங்களுக்கு சந்தைப் பிடித்துத் தரவேண்டியுள்ளது. இவ் வாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு வியாபாரம் செய்யும் உரிமையை பெற்றுவிட்டால், அமெரிக்கப் பங்குச்சந்தைக்கு ஏறுமுகம் ஏற்படும் என்று கருதுகிறார்கள்.வால்மார்ட்டை அனுமதித்தால் இந்திய விவசாயம் சீரழியும். இந்தியா வறுமைப்படு குழியில் தள்ளப்படும். பரந்து விரிந்த சந்தை அழிக்கப்படும். ஒரு ஏகபோகச் சில்லரை வணிகத்தின் கீழ் 120 கோடி மக்களும் விவசாயிகளும் வதைக்கப்படுவார்கள். மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் அனுமதிக் கப்படும் என்று அறிவித்துள்ளார்.

நன்றி:தீக்கதிர்
__________________________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?