முதலில் கூறையேறி .......

தேசிய கொடியேற்றி பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:"
சுரன்
 உணவு தானியங்கள் வீணாவது நாட்டின் முக்கிய பிரச்னையாக உள்ளது. உலக பொருளாதாரம் வறுமை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பருவ மழை குறைவான காரணத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடையும். அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மின் உற்பத்தி பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்தாண்டுகளில் மின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
சுரன்


செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக இந்தியா சார்பில் விண்கலம் செலுத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. "என்றுள்ளார்.
உணவு உற்பத்தி முதல் மின் உற்பத்தி வரை ஆண்டு தோறும் கொடியேற்றி பேசுகின்ற போது மறக்காமல் பேசுகின்ற பேச்சு.அதை வழமையாக எழுதி வைத்து பேசி,பேசியும் அதை கேட்டு,கேட்டும் புளித்து போய் விட்டது.
வீணாகும் உணவுதானியங்களை வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ளவர்களுக்கு கொடுக்க மறுக்கும் ஒரு அரசின் தலைவர் உணவுதானியங்கள் வீணாவதைப் பற்றி வருந்துவது நமக்கு வருத்தமாக உள்ளது.
உழைப்பாளி வேடம்?
    புதிதாக செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவது இந்தியா போன்ற மக்கள்தொகையுடன் முன்னேற தவிக்கும் நாட்டிற்கு தேவைதானா?
அதன் மூலம் நாம் சாதிக்கப் ப்போவது என்ன?
இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மை என்ன?மக்களுக்குத்தான் என்ன கிடைக்கும்.முதலில் பொருளாதார வீக்கத்தையும்,விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தப் பாருங்கள் .
அரசின் செலவினம் என்று உரத்துக்கு மானியங்களை வெட்டி வரும் அரசுக்கு இது போன்ற வான வேடிக்கைகள் அவசியம்தானா?
சுரன்
அனுப்பும் விண் கலம் போய் செவ்வாயை அடையும் உத்திரவாதம் உண்டா?இடையிலேயே சிவகாசி ராக்கெட்டாக மாறி வானில் வண்ணப்பூவாக சிதறினால் செலவிட்ட அனைத்து பணமும் தீவைத்து கொளுத்தப்பட்டதாகத்தானே ஆகும்.
செவ்வாயில் விண்கலம் இறங்கி விட்டால் மட்டும் அதனால் இந்தியாவின் வறட்சி நீங்கிடுமா?மின்சார -குடிநீர் பற்றாக்குறைதான் நீங்கிடுமா?
அது போன்ற ஆய்வுகள் வளர்ந்த நாடுகளில் செய்து கொள்ளட்டும்.
நீங்கள் அந்த பணத்தை வைத்து உரத்துக்கு மானியம் கொடுத்து வேளாண்மையை பெருக்குங்கள்.விவசாயிகளின் தற்கொலைகளை தடுங்கள்.
இந்தியாவை அவ்வப்போது உலக வரை படத்தில் இருந்து இருளச் செய்யும் மின் வெட்டுக்கு தீர்வு காணுங்கள்.
பாசன வசதி இன்றி ஒரு பக்கமும் வெள்ள வடிய மறுக்கும் ஒரு பக்கமுமாக இருக்கும் இந்தியாவை நதிகளை இணைத்து வெள்ளம் வடியவும் நீரில்லா பகுதிகள் வளம் பெறவும் வழி செய்யுங்கள்.
சுரன்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனைத்து பகுதிகளிலும் கிடைக்க உருதி செய்யுங்கள்.போலியோவை ஒளித்து விட்டதாக மார்பு தட்டும் பிரதமர்.
ஒழிக்கபப்ட்டதாக கூறப்பட்ட காச நோய்,மலேரியா பரவி வருவதை கண்டு கொள்ளவில்லை.மறைந்து வந்த தொழு நோய்  பாதிப்பாளர்கள் எண்ணீக்கை இந்தியாவில் தான் அதிகம் என்ற உலக சுகாதார நிறுவனஎச்சரிக்கையை மாற்ற முயற்சியுங்கள்.
முதலில் நிலத்தில் இந்தியாவை உயரச்செய்து விட்டு வானில் முன்னேறுவோம்.காலை முதலில் நன்கு பதித்து நிறகப் பாருங்கள்.
முதலில் கூறையேறி கோழி யை பிடிக்க முயற்சிப்போம்.வானில் ஏறி செவ்வாய் செல்வதை அப்புறம் பார்த்துக்கொள்வோம்.
வாழ்க சுதந்திர இந்தியா.


அடுக்கு மாடி வழியே பாய்ந்து வரும் வெள்ளம்.
சுரன்

65 வது சுதந்திரதின வாழ்த்துக்கள். 
சுரன்

இந்தியாவை ஒளிரச்செய்யும் பிரதமரின் கொடி வணக்கம் 


சுரன்

எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?