இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவல்துறை -மின் துறை

படம்
 மின்சாரம் இல்லாதது மக்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது .வடிவேலு கிணறு காணவில்லை கதையாகிவிட்டது. மிசாரம் அதிக உற்பத்திக்கு வழி இருந்தும் அது கருணாநிதி போட்ட திட்டங்கள் என்பதால் அதை கண்டு கொள்ளாமல் ,அதிக விலைக்கு மின்சாரத்தை வெளியில் இருந்தும் வாங்காமல் ,மத்திய அரசிடம் அதிகம் மின்சாரம் கேட்டு வாங்காமல்  இருக்க பிடிவாத குணம் படைத்த ஜெயலலிதா வாழ் மட்டுமே இருக்க முடியும். மக்கள் பற்றி அவருக்கு கவலை இல்லை.அவர்களுக்கு மறதி அதிகம்.அது போக இரட்டை இலை ,எம்ஜிஆர் இருந்தால் போதும் என்றும் எண்ணுகிறார். இதே மக்கள்தான் முன்பு 40க்கு 0 வை முன்பு தந்தார்கள் என்பதை மறந்து விட்டார். அப்போது இரட்டை இலையும்,எம்ஜிஆரு ம் கைகொடுக்கவில்லை என்பதை ஜெ நினைவில் கொள்ள வேண்டும். அதற்குள் பிரதமர் கனவில் மிதப்பது தவறு. உண்டான முதல்வரை தக்கவைக்கப் பாருங்கள் . இனி இன்றைய கதைக்கு வருவோம் : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையை கண்டித்து ஆர்பாட்டம், உண்ணாவிரதம், கஞ்சித்தொட்டி திறப்பு போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் , நம்பியூர் மக்கள் ஒருபடி

விலகினாரா? விலக்கி வைக்கப்பட்டாரா?

படம்
  2011ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அக்டோபர் மாதம்  தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார்.  இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியலில்  ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரச

பகத் சிங்

படம்
பகத்சிங் பிறந்த நாள் ஆன செப்டம்பர் 28 யை விட, அவரது வீரமரண நினைவு நாளான மார்ச் 23 க்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. 1870 செப்டம்பர் 28ல் பகத்சிங் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். லாகூரில் நடந்த ஊர்வலத்தின் போது லாலாலஜபதிராய் மீது தடியடி நடத்த காரணமாக இருந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்,  அக்காலத்தில் மத்திய சட்டசபை என அழைக்கப் பட்ட இன்றைய பார்லிமென்ட் கட்டடத்தின் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் என இரு சம்பவங் களுக்காக ஆங்கிலேய அரசு பகத்சிங்கை முதல் குற்றவாளி என அறிவித்து 1931ல் தூக்கு தண்டனை யை நிறைவேற்றியது.  பகத் சிங் தன்னை தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வேண்டிக்கொண்டார்.காரணம் தூக்கில் போட்டால் தான் சாகும் போது தனது கால்கள் இந்திய மண்ணை விட்டு பிரிந்திருக்கும் என்று கூறினார். ஆனால் ஆங்கிலேய அரசு அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றவில்லை. பகத்சிங்கிற்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக ஆங்கிலேய அரசு  காந்தியிடம் ஆங்கில அரசு கருத்து கேட்டது. தாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை என்று மட்டும் கூறி பகத் சிங்கிற்கு தூக்குத்தண்டனை கொடுக்க தனது ஆத

அதிகம் படிச்சவங்க ,

படம்
  அதிகம் படிச்சவங்க  உள்ள நாடுகள்  விபரம்: இது முதல் 10 நாடுகள் மட்டுமே,   1,கனடா  2,இஸ்ரேல்  3,ஜப்பான்  4,அமெரிக்கா  5,நியுசிலான்ட்  6,தென் கொரியா  7,இங்கிலாந்து  8,பின்லாந்து  9,ஆஸ்திரேலியா  10, அயர்லாந்து  கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்தியா பெயரைக் காணமுடியவில்லை. ______________________________________________________________________________________________ இறக்குமதி சவப்பெட்டி    ===================  தாராள மயமாக்கல் மூலம் எதுவெல்லாம் இறக்குமதி செய்யலாம் என்ற வரைமுறை இல்லாமல் போய் விட்டது. , கடந்த 20 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.இதனால் அமெரிக்கா ஒரு பக்கம் தனது பொருட்கள்-நிறுவனங்கள் என்று தாக்க  பக்கத்து  நாடான சீனா தனது, மலிவு விலை பொருட்கள்,மூலம்  இந்தியாவை ஆக்கிரமித்து  வருகினறது .  எதை எடுத்தாலும், சீனப் பொருள் என்று மாறி விட்ட நிலையில், சவப்பெட்டிக்கு மட்டும் என்ன விதிவிலக்கு, என்று நினைத்த கேரள வியாபாரிகள், சீனாவில் இருந்து இவற்றை வாங்கிக் குவிக்க ஆரம்பித்து விட்டனர்.  சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து 170 சவப் பெட்டிகள், ஆலப்புழை ம

ஆயுளா? ஆண்மையா?

படம்
ஏதோ அந்த காலத்து  கோபாலகிருஷ்ணன் படத்தின் பெயர் போல் இருக்கிறதா? ஆனால் இது இப்போதைய ஒரு சின்ன ஆய்வின் முடிவினால் வந்த கேள்விக்குறி?  ஆண்களின் ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன்களே, அவர்களின் ஆயுட்காலத்தை குறைப்பதற்கான காரனமாகவும்  இருக்கக்கூடும் என்று  சமீபத்தில் ஆய்வின் முடிவு ஒன்று  கோடிட்டு காட்டியுள்ளதாம்.  உலகம் முழுவதும் மனித இனத்தில் ஆண்களை விட பெண்களின் சராசரி வயது அதிகம்.  இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகில் நடக்கும் தொடர் ஆய்வுகளில், ஒரு பகுதி விஞ்ஞானிகள், ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் ஹார்மோன்கள், அவர்களின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றலாம் என்று சந்தேகிக்கிறார்கள். அதாவது ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் டெஸ்டஸ்ட்ரோன் என்கிற ஆண்களின் பாலின தன்மைக்கான ஹார்மோன்கள், ஆண்களின் விதைப்பைகளில் பெருமளவு உற்பத்தியாகிறது.  இந்த டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண்களின் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் ஆண்களின் இதயத்தை வலுவிழக்கச்செய்யக்கூடும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட வர்கள் சந்தேகம் வெளியிட்டுள்

வாடிக்கை,- போராட்டங்கள்,

படம்
வாடிக்கையாகி விட்ட போராட்டங்கள்,  ----------------------------------------------------------- இப்போது அதிகமாக  தமிழ் நாட்டில் உழைப்பவர்கள் ,அல்லது நொந்து போய் இருப்பவர்கள் மின் வெட்டால் ,தண்ணீர் இல்லாமையால் ,விவசாயம் செய்யாமல்  இருப்பவர்கள் அல்ல . அரசுக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆங்காங்கே நடக்கும் போராட்டத்தை சமாளிக்கும் காவல்துறையினர்தாம் . மின் வெட்டு ,குடிநீர் வழங்கப்படாததைக்கண்டித்து தங்களுடைய எதிர்ப்பைகாட்ட, சாலை மறியால்  போராட்டம் நடத்தும் மக்கள் அதிகமாகி  விட்டனர் . மி ன் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை இப்போது தமிழகத்தில் அதிகரித்து விட்டது.  பகல், இரவு பாராமல், இது போன்ற போராட்டங்களை அடக்க  காவல்துறை உழைக்கிறது. ஒரு காவல்துறை அலுவலர் கூறியதாவது :  "சமீப காலமாக, தமிழகத்தில் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.  சாதாரண பிரச்னைக்குகூ ட  மக்கள் , சாலையை மறித்து போராட்டத்தில்  ஈடுபடுகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், காவல் துறையினர்  திணற வேண்டியுள்ளது.  தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 3

இரண்டு மணி நேரம் மின் வெட்டு

படம்
தமிழகத்தில் மின் பற்றாக்குறை வர வர  மிகவும்  மோசமடைந்து வருகிறது.  சென்னையில் மட்டும் ஒரு  மணி நேரம் மின் வெட்டு மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு 12 மணிமுதல்  15 மணி நேரம் வரைமின் வெட்டு நடைமுறையில் உள்ளது. இதனால்  பாதிக்கப் படுவது மக்களும்-தொழிலாளர்களும் மட்டுமல்ல மின் வாரிய ஊழியர்களும்தான். தற்போது  தமிழம் முழுக்க  ஆங்காங்கே மின்வாரிய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்து  மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்படுவதாக  தெரிகிறது. . நேற்ற்றிரவு சென்னையை அடுத்த பொன்னேரியில் ஒரு ஊழியர் தாக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஏப்ரலில் கூட சோ ழிங்கநல்லூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. மின்வாரிய ஊழியர்கள் தங்களுக்குப் பாதுகாப்புவேண்டுமென்றும், தங்களைத் தாக்குவோர் மீது நடவடிக்கை வேண்டுமென்றும் கோருகின்றனர்.  ஆனால் தொடரும் மின்வெட்டின் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலையை மேலும் சிக்கலாக்க அரசு விரும்பவில்லை . நேற்றுதான் மின்பற்றாக்குறை குறித்து உயர் ம

நடிகர் திலகன் மறைவு ,

படம்
----------------------------------- பிரபல மலையாள நடிகர் திலகன். 77 வயதான இவர் 300-கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இவர் தமிழில் சத்ரியன், மேட்டுக்குடி, அலிபாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி திலகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு திருச்சூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. திலகன் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். மாரடைப்புடன் திலகனுக்கு பக்கவாத நோயும் ஏற்பட்டு அவரது மூளை நரம்புகளும் பாதிக்கப்பட்டு இருந்தது. மருத்துவர்கள் அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் நடிகர் திலகன் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை திருச்சூர் அருகே அரசு மரியாதையுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திலகன் மலையாள நடிகர்கள் சங்கத்தினருடன் மோதலில் இருந்தார். அதனால் பிரபல மலையாள நடிகர்களான மம்முட்டி ,மோகன்லால் ஆகியோருடன் பகிரங்கமாக கருத்து

மத்திய அரசின் கோயபல்ஸ் விளம்பரமும் - உண்மையும்

படம்
சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு   -எம்.கண்ணன் சில்லரை வர்த்தகம், விமானப் போக்கு வரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் ஆகிய துறைகளில் அந்நிய முதலீடுகளை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதித்து உத்தரவிட் டிருக்கிறது. இவை அவசரஅவசரமாக நடை முறைக்கு வந்துவிட்டதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.  பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்தி யாவை அடகு வைக்கும் காங்கிரஸ் தலை மையிலான கூட்டணி மத்திய அரசிற்கு பல்முனைகளில் இருந்தும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற மத்திய அரசின் தான்தோன்றித்தன மான முடிவிற்கு எதிராக இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் கடும் கண்டனங் களை தெரிவித்தும், கிளர்ச்சியில் ஈடு பட்டும் வருகின்றனர். இந்நிலையில் மத் திய அரசு இந்திய பத்திரிகைகளில் பக்கம் பக்கமாய் உண்மைக்கு மாறான விளம் பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது. குறிப்பாக கோய பல்ஸ் பாணியில் ஒரே பொய்யை திரும் பத் திரும்ப கூறி மெய்யாக்க முயல்கிறது. விவசாயிகளுக்கு நன்மையா ? அரசின் விளம்பரத்தில், மொத்த அந் நிய முதலீட்டில் குற

உடனே தூக்கிலிடுங்கள்-1,372 கடிதங்கள்

படம்
கசாப்பை உடனே தூக்கிலிடுங்கள்' என, வலியுறுத்தி சமூக சேவகர் ஒருவர், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜனாதிபதிக்கு ஒருநாள் விடாமல், கடிதங்கள் எழுதி வருகிறார். மும்பையில், 2008, நவம்பர் 26ம் தேதி, பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், வெளிநாட்டவர்கள் சிலர் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து, கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்திய, இந்த பயங்கரவாதிகளில் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால், சுட்டுக் கொல் லப்பட்டனர்.  அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான்.மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனுக்கு, அதே சிறையில், அமைக்கப்பட்ட சிறப்புக் கோர்ட், மரண தண்டனை விதித்தது. அந்த மரண தண்டனையை, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கசாப், கருணை மனு அனுப்பியுள்ளான். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தன் நெருங்கிய நண்பரை பறிகொடுத்த, சமூக சேவகர் நாராயண் பாட்டீல் என்பவர், "பயங்கரவாதி கசாப்பிற்கு உடனே தண்டனை கிடைக்கும்' என, நம்பினார். நாட்கள்தான் உருண்டோடின.

சட்டை=செய்யாததும்+கழற்றலும்,

படம்
அந்நிய சில்லரை வணிக மூதலீடு போன்றவைகளுக்கு மன்மோகன் சிங் கதவுகளை விரிய திறந்து வைத்ததனால் தன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கும் என்று தெரிந்தே அதை செய்துள்ளனர். அதானால் தன் ஆட்சிக்கு ஆபத்து உண்டாகலாம் என்று தெரிந்தே  அமெரிக்க கட்டளையை சிரமேற்கொண்டு சோனியா கட்சி அந்நிய வணிக அனுமதி கொடுத்திருக்கிறது என்றால் ,அதற்கு என்ன துணிச்சல் என்று வியக்க வேண்டாம். மம்தா முதலில் முரண்டு பிடிப்பார்,பின் பின்வாங்கி விடுவார்.அவர் அப்படி ஏதும்செய்யாவிட்டாலும் கூட முலாயம் -மாயாவதி கூட்டம் இருக்கும் தைரியம்தான். முலாயம் கண்டிப்பாக சிபிஐ பயத்தில் ஆதரிப்பார்.அவருக்கும் அமெரிக்காதான் ராஜகுரு.அந்த தைரியம்தான். திமுக கொஞ்சம் முணங்கும் பின் கூட்டணி,தர்மம் என்று சுணங்கி விடும் என்பதையும் மனமோகன் தெரிந்தே வைத்துள்ளார்.எவ்வளவு அடித்தாலும்,திமுக வில் உள்ள கருணாநிதியைத் தவிர மற்ற எவரை திகாரில் அடைத்தாலும் அது காங்கிரசுக்கு வால் பிடிப்பதை இப்போதைக்கு விடப்போவதில்லை. முலாயம்,மாயாவதி போல் சிபிஐ வழக்குகளை மிரட்டி நீர்த்துப்போக வைக்கு வித்தை கருணாநிதிக்கு தெரியவில்லை.பயந்தே வழிக்கு வந்து விடுவார் என்பது காங்கிரசுக்கு

சாத்தான் வேதம்

படம்
"உலகம் முழுவதும் அகிம்சை, சமாதானம், இரக்கக் குணத்தை பரப்ப வேண்டும்" என்று மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ராஜபட்சே அருள் வாக்கு அருளியுள்ளார். சாத்தான் வேதம் ஓதுவது என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இப்போது அர்த்தம் விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்று எண்ணுகிறோம்.  எப்படிங்க இப்படியெல்லாம் கூச்ச மின்றி ,வெட்கமின்றி பேசுகிறாரோ .அதை விட இவரை மனசாட்சியியே இல்லாமல் கூ ப்பிட்டு விருந்து வைத்த நம் இந்திய அரசை த்தான் சொல்ல வேண்டும் . சாத்தானை சிகப்பு கம்பளம் விரித்து கூப்பிட்ட மனிதாபிமானம் அற்ற அரக்கர்கள் அவர்கள்தானே .  ________________________________________________________________________________________________ சிரித்தார் ,வேலை இழந்தார்.  ------------------------------------------ சீனாவில் வாகன விபத்தொன்றில் 36பேர்கள்  கொல்லப்பட்டனர் . அந்த  வாகன விபத்தின் பொது மீட்புபணிக்காக இருந்த  பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சிரித்துக்கொண்டிருக்கும் படங்கள் சீன ஊடகங்களில் வெளியானது.  அந்த சிரிப்பு சம்பவம் சீனாவில் பொதுமக்கள