போபர்சும்-நிலக்கரியும்


இந்திய மக்கள் மீது நம் அரசியல்வாதிகளுக்கு மிக நம்பிக்கை.
அதற்கு மக்களின் மறதி மீதான நம்பிக்கைதான் காரணம்.
காங்கிரசுக்கு மற்ற கட்சிகளை விட அதிகம் இந்த நம்பிக்கை.
போபர்ஸ் விவகாரம் போன்று நிலக்கரி ஊழல் விவகாரத்தினை மக்கள் விரைவில் மறந்து போய்விடுவர் என மத்திய அமைச்சர் சுசில் குமார் சிண்டேகூறியுள்ளார். 

நாட்டை உலுக்கி எடுத்துள்ள நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இப்போது அவர் கூறியுள்ளதாவது:
"முன்னர் காங்கிரஸ் ஆட்சியின் ‌போது போபர்ஸ் ஊழலை எதிர்க்கட்சியினை பெரிய விவகாரமாக கையில் எடுத்தனர்.அது நாளாக, நாளாக மக்கள் மனதில் இருந்துநீர்த்து   ம‌றைந்து போனது.
இப்போது நிலக்கரி ஒதுக்கிய விவகாரத்தினை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர். 
இதுவும் சில நாட்களில் மக்கள் மனதில் இருந்து ஒரேடியாக மறைந்து போகும். "
-இவ்வாறு சிண்டே நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
 இவரது பேச்சு மற்றவர்கள் மட்டுமின்றி,காங்கிரசார் இடையேயும் கூடபரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சிண்டே நிலக்கரி விகாரத்தினை போபர்ஸ் ஊழலுடன் இணைத்து பேசியது போபர்ஸ் ஊழலை காங்கிரசாரே ஒப்புக்கொண்டது போல் உள்ளது.
இப்போதைய நிலக்கரி முறைகேட்டையும் காங்கிரசு ஒப்புக்கொண்டதுடன்,அதை விரைவில் மக்கள் மறந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பதையும் பகிரங்கப்படுத்தி விட்டது.
நிலக்கரி முறைகேடு,மற்ற செயல்படா தன்மையை போக்கத்தான்.இப்போது சில்லரைத் தன வியாபரத்தை காங்கிரசு இறக்கியுள்ளது.?
________________________________________________________________________
தமிழ்த் திரையுலக நடிகரும் காங்கிரசு கட்சி  பேச்சாளருமான லூஸ்மோகன்
காலமானார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவ‌ை நடிகர் லூஸ்மோகன் 84, இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் 1000த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவ‌ை வேடத்தில் லூஸ்மோகன் நடித்திருக்கிறார்.
 கடைசியாக 2008ம் ஆண்டு வெளிவந்த சுட்டபழம் படத்தில் நடித்தார்.பின்னர் இரு கன்னட மொழிகளில் நடித்தார். அதன் பின்பு இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
தனது ஒரே மகன் கார்த்திக் வீடு உள்ள ‌மைலாப்பூரில் வசித்து வந்தநிலையில் இன்று காலை அவர் காலமானார்.இவரது மனைவி பச்சையம்மாள் கடந்த 2004ம் ஆண்டு இறந்தார். 
________________________________________________________________________
இருக்கிற சில்லரை வியாபரத்தையும் புடிங்கி அந்நியர்களிடம் கொடுத்தாகி விட்டது.
இப்போ வேற வழி.......?


________________________________________________________________________





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?