ஹலோ'மை டியர் ராங் நம்பர்?

செல்பேசி மூலம் ஆண்கள் தான் பெண்கள் குரலை கேட்டு காதல் பேசி கடலை போடுகிறார்கள் என்ற அவப்பெயர் இருக்கிறது.
ஆனால் கேரளாவில் தற்போது நடந்த நிகழ்வு கற்பு என்பதை பொதுவில் வைப்போம் என்று மட்டுமின்றி காதலையும் பொதுவில் வைக்க வேணும் என்கிறது.
சொல்லாமலேயே காதல்,பேசாமலேயே காதல் ,காணாமலேயே காதல் வரிசையில் இது ஒருவகை .
 போத்தன்காடு ஊரைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணுக்கு, ஓரு ஆண்டுக்கு முன், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, அம்சா என்பவர், மொபைல் போன் மூலம் அறிமுகமானார். எம்.டெக்., பட்டதாரியான, அந்த இளம் பெண்ணும், அம்சாவும், அடிக்கடி மொபைலில் பேசினர்.இதில், இருவரும் காதல் வயப்பட்டனர். ஓராண்டாக, இருவரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, செல் பேச்சிலேயே தங்கள் காதலை வளர்த்தனர்.
காதலனை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அதற்காக, இம்மாதம், 9ம் தேதி இரவு, திருவனந்தபுரத்திலிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் நிலையம் சென்றடைந்தார்.
அங்கிருந்தபடி, பலமுறை காதலனை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. இதனால், நீண்ட நேரம் பேருந்து  நிலையத்திலேயே  சுற்றிவந்தார். 
அதைக்கண்ட சிலர், காவல்துறைக்கு  தகவல் கொடுத்தனர். 
அவர்கள்  அந்தப் பெண்ணை காவல்  நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.விசாரணையில், அவர் தன் காதலன் அம்சாவை தேடி வந்ததாக கூறி, அவரது மொபைல்போன் எண்ணை காவலரிடம் கொடுத்தார். 
காவல்துறையினர் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, இப்ராகிம் என்பவர் எடுத்தார்.
அவரை  உடனடியாக, காவல்  நிலையத்திற்கு வரவழைத்தனர். "இளம் காதலன் வருவார்' என, ஆவலோடு காத்திருந்தவர்களுக்கு 70வயது  இப்ராகிமை கண்டதும் வியப்பு  ஏற்பட்டது. அவரிடம் அவர் பேரன் யாரும் இப்படி பேசினார்களா என்று விசாரித்தபோது அவர் தான்தான்  இதுவரை செல்லில் பேசி வந்த காதலன் என, தெரிந்தது. அதிர்ச்சி அதிகமாக , அப்பெண் மயக்கமடைந்தார். 
அவர் மயக்கம் தெளிந்து எழுந்த அப்பெண், 
"இளம் வயதுடையவர், அம்சா தன் பெயர்' என, இப்ராகிம் தன்னிடம் பொய் சொல்லி, ஏமாற்றி விட்டதாக, காவல்துறையில் புகார் செய்தார்.


அவர்கள் நன்றாக  விசாரணைய செய்ததில் , இதுவரை ஒரு முறை கூட, இராகிம் அப்பெண்ணை அழைத்து பேசியதில்லை என்றும், இளம்பெண்ணுக்கு சொந்தமாக, செல்பேசி  இல்லை என்பதும், அவரது உறவினர்களின் செல்பேசி  மற்றும் தரைவழி தொலைபேசி மூலம், இப்ராகிமை, அவர்தான்  தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளார் என்பதும் ,இப்ராகிம் வயதை அவர் விசாரிக்கவில்லை என்பதும் அந்த பெண்தான் காதல் அயக்கத்தில் பேசி வந்ததும் தெரிந்தது..இதையடுத்து, அந்த இளம் பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லி  உறவினர்களை ர் வரவழைத்து, அவர்களிடம், அப்பெண்ணை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
செல்பேசி அழைப்புகள் என்னவெல்லாம் செய்கிறது பார்த்தீர்களா? 
ஆண்கள்தான் செல்பேசி மூலம் திருவிளையாடல் செய்கிறார்கள் என்பதில்லை.சில பெண்களும் அது போல் வரும் அழைப்புகளுக்கு காத்திருக்கிறார்கள் என்பதுதான் இதன் மூலம் தெரியவரும் செய்தி.
சொந்த அனுபவத்திலும் அது போல் நடந்துள்ளதே இதை எழுத காரணம்.
தி டீ ரென ஒரு நாள் செல்பேசி அழைப்பு .
அறிமுகம் இல்லாத பெண் மறுமுனையில்."நீங்கள் யார்?'என்றது.
'நீங்கள்தானே அழைத்தீர்கள்?'
'இல்லை இந்த என்னில் இருந்து குறுஞ்செய்தி[]வந்தது'
உங்கள் எண்ணுக்கு மட்டுமல்ல யாருக்கும் நான் அனுப்புவதில்லை.எனக்கு அதற்கு நேரம் கிடையாது'
'இல்லை .அவ்வப்போது வரும்'
நான் அனுப்புவதில்லை.என் பேசி மூலம் யாராவது அனுப்பியிருக்கலாம்.சத்தம் போடுகிறேன்.'
'பரவாயில்லை.உங்கள் செய்திகள்.நன்றாக இருக்கிறது .தொடர்ந்து அனுப்புங்கள்.பேசுங்கள்'
-இதென்ன வம்பு.நான் அனுப்பா செய்திகளுக்கு ஒரு ரசிகையா.அத்துடன் அதை மறந்து விட்டேன்.
சில நாட்களில் மறுபடியும் அழைப்பு.
'செய்திகள் வருகிறது .அதை வீட்டில் பார்த்து சத்தம் போட்டார்கள்.இனி பேசமட்டும் செய்யுங்கள்.செய்தியாக அனுப்பவீண்டாம்'
நான் மேலே பேசும் முன் அழைப்பு துண்டிக்கப் பட்டது. மீண்டும் இதென்ன வம்பு  ?
அதையும் சில நாட்களில் வழக்கப்படி மறந்து விட்டேன்.
மீண்டும் அதே என்னில் இருந்து அழைப்பு.
சலிப்புடன் எடுத்த என்னை ஆண் குரல் மிரட்டியது.
'நீங்கள் யார்?'
 நான் யாரென்பது இருக்கட்டும் .நீங்கள் யார்?எதற்காக அழைத்தீர்கள்?
'நீங்கள் அனுப்பிய செய்திகளால் குடும்பத்தில் பிரச்னை.என் தங்கச்சி தற்கொலைவரை போய் விட்டாள் '
'அடப்பாவமே.ஆனால் நான் அனுப்பவில்லை .வீட்டில் யாரும் உங்களுக்கு அனுப்பவில்லை.'
'உங்கள் முகவரியை சொல்லுங்கள் .நான் நேரில் பேசுகிறேன்.'
எனக்கு பயம்"நான் சென்னையில் எழும்பூரில் இருக்கேன்.'
'சரி.நான் மாம்பலம்தான் .முகவரியை சொல்லுங்கள்'
மனதில் தோன்றிய ஒரு எண்ணை சொல்லிவிட்டு பேசியை அணைத்தேன் .அந்த முகவரியில் இருப்பவர்களுக்கு ஒரு ஐயோ பாவம் சொல்லிக்கொண்டேன்.
நான் பல கி.மீ ,க்கள் தள்ளி பத்திரமான நகரில் இருந்தேன்.இனி இந்த எண்ணை கண்டாள் யாரும் பேசியை எடுக்க கூ டா து என்று ஆணையிட்டேன்.
அதன் பின் அழைப்பு வந்ததுபோல் தெரிய வில்லை.
ஆனாலும் அந்த எண்ணுக்கு செய்தி எப்படி போனது?செல்லை குறைந்த போது ,என் மகன் சென்னையில் உள்ள என் உறவினருக்கு செய்திகளை அனுப்பி வந்துள்ளான்.அவர் எண்ணுக்கும் -மேற்படி எண்ணுக்கும் கடைசி ஏன்தான் வேறு.அதில் சரியாக என்மகன் தவறை செய்திருந்தான்.
உறவினருக்கு போனதாக எண்ணப்பட்ட செய்திகள் சில அதிர்வுகளை ஏற்படுத்தி விட்டது.
நான் பெருந்தன்மையுடன் அவர்களுக்கு பேசி அதை சொல்லிவைக்க எண்ணி பின் சொல்ல வில்லை.
திட்டுவார் என்ற பயம்தான்.

_____________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?