சில சோதனைகள்...,

விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக இப்போது யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.
இதேபோல் வேறு சில தலைவர்களின் உடல்கள் வேவ்வேறு காரணங்களுக்காக கல்லறைகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
அதில் சிலவற்றை இங்கு காண்போம்.
சுரன்
சே குவேரா
அர்ஜென்டினாவில் பிறந்த கியுப நாட்டுப் புரட்சியாளரான சேகுவேரா 1967ஆம் ஆண்டு போலிவியாவில் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக பல ஆண்டுகள் ரகசியம் காக்கப்பட்டது.
 சே சுடப்பட்டதில் தொடர்புடைய ஒரு பொலிவிய இராணுவ ஜெனரல் 1995ஆம் ஆண்டில் சேகுவேராவின் உடல் ஒரு விமான நிலையத்தின் ஒடு பாதை அருகே புதைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கப் பிறகு அவரின் உடல் எடுக்கப்பட்டு கியுபாவுக்கு கொடுக்கப்பட்டது. சேகுவேராவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தில் அவ்வுடல் தற்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தோண்டி எடுக்கப்பட்டது சேவின் உடலா என்பது குறித்து இன்னமும் சந்தேகம் இருக்கிறது.

ஆலிவர் கிராம்வெல்
இங்கிலாந்தில் முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை ஒரு குறுகிய காலத்துக்கு கொண்டு வந்தவர் ஆலிவர் கிராம்வெல். படை வீர்ராகவும், ராஜ தந்திரியாகவும் திகழ்ந்த இவர் 1658 ஆம் ஆண்டு மரணித்தார். அரச மரியாதையுடன் அவரது உடல் புகழ் பெற்ற வெஸ்ட்மினிஸ்ட்டர் தேவாலயத்தில் புதைக்கப்பட்டது.
 ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு முடியாட்சி மீண்டும் கொண்டுவரப்பட்ட பிறகு இவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தலை வெட்டி சிதைக்கப்பட்டது. பிறகு அவரின் உடல் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் ஒரு கொலை களத்தின் அருகே வீசப்பட்டது.
ஆலிவர் கிராம்வெல்லின் தலை ஒரு கம்பில் கட்டப்பட்டு வெஸ்ட்மினிஸ்டர் ஹாலின் மாடியில் வெளியில் தெரியும் படி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலை 1815 இல் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இது ஆலிவர் கிராம்வெல்லின் தலை என்றே உறுதிப்படுத்தப்பட்டது.

சார்லி சாப்ளின்
புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட நடிகர் சார்லி சாப்ளின் தனது வாழ்வின் கடைசி 25 ஆண்டுகளை சுவிட்சர்லாந்தில் கழித்தார்.
அவர் இறந்த பிறகு கோசிய சூர் வேவி என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டார். இரண்டு திருடர்கள் 1978ஆம் ஆண்டு அவரின் உடலை அங்கிருந்து தோண்டி எடுத்துச் சென்றனர்.
பெரும் பணம் கொடுத்தால்தான் உடலைத் தர முடியும் என்று அவர்கள் சார்லி சாப்ளினின் வழக்கறிஞர்களோடு பேரம் பேசினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு போலந்து மற்றும் பல்கேரியாவில் இருந்து அகதிகளாக வந்திருந்த அந்த இரு திருடர்களும் பிடிபட்டனர். 
சார்லி சாப்ளினின் உடல் மீட்கப்பட்டது அதே இடத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது. ஆனால் இரவில் யாரும் திருடிச் சென்று விடக் கூடாது என்ற நோக்கில் சார்லி சாப்ளினின் கல்லறை இம்முறை கான்க்ரீட்டால் மூடப்பட்டது.
கிறிஸ்டபர் கொலம்பஸ்
அமெரிக்க கண்டத்துக்கு கடல் வழி கண்டு பிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் நிலை இன்னமும் மோசமானது. தனது உடலை அமெரிக்காவில் புதைக்க வேண்டும் என்று உயில் எழுதிவிட்டு கொலம்பஸ் 1506ஆம் ஆண்டு இறந்துபோனார்.
ஆந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் தகுந்த தேவாலங்கள் இல்லை. எனவே அவரது உடல் ஸ்பெயின் வல்லாடோலிட்டில் புதைக்கப்பட்டது. அதன் பிறகு சிவைல் மாடாலயத்துக்கு அது மாற்றப்பட்டது. 1542 ஆம் ஆண்டு அந்த உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டு ஹிஸ்பனியோலா என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டது.
அதன் பிறகு அது தற்போது டொமினிகன் குடியரசின் தலைநகராக இருக்கும் சான்டோ டொமின்கோவில் புதைக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் முடிவில் ஸ்பெயின் ஹிஸ்பானியோலாவின் மேற்குப் பகுதிகளை பிரான்சிடம் இழந்தது. அதன் காரணமாக கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் உடல் கியூபாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கியுபா 1898ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு கொலம்பஸ் அவர்களின் உடல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடைசி முறையாகக் கடந்து சேவைலில் இருக்கும் தேவாலயத்துக்கு கொண்டு வந்து புதைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் உடல் குறித்த அதிகார பூர்வ வரலாறு இப்படி இருக்க – டொமினிகன் குடியரசின் தலைநகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் இருந்து சில எலும்புகள் எடுக்கப்பட்டன.
அவை அங்கே கொலம்பஸ் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் சீவைலில் அருகே புதைக்கப்பட்ட கொலம்பஸ்சின் சகோதரர் டிகோவின் டி என் ஏவும் அங்கே புதைக்கப்பட்ட கோலம்பஸ்சின் உடல் என்று கருதப்படும் உடலின் டி என் ஏவும் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேரி கியுரி
இயற்பியலுக்கு ஒன்று வேதியலுக்கு ஒன்று என இரண்டு நோபல் பரிசுகளை வென்றவரான மேரி கியுரி மற்றும் அவரது கணவரின் அஸ்தி பிரான்சின் உள்ள ஒரு சாதாரண கல்லறையில் இருந்து எடுக்கப்பட்டு பாரிஸில் உள்ள பான்தியன் என்ற இடத்துக்கு 1995 ஆம் மாற்றப்பட்டுள்ளது.
நன்றி:பி.பி.சி.
---------------------------------------------------------------------------------



குப்பை வானம்

உலக நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சி காரணமாக நச்சுத்தன்மை கொண்ட கழிவுப்பொருட்களின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்களில் இருந்து, மக்கிபோகாத நெகிழிப் பொருட்கள் வரை, பயன்படாத கணினிகள், அவற்றின் உதிரிபாகங்கள் என பல வகையான மின்னணு சாதனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் மலைமலையாக குவியத் துவங்கியுள்ளன. 
இந்த கழிவுகளை வெற்றிகரமாக கையாளும் வழிகளை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் வாங்குகின்ற பொருட்களில் பலவற்றை, பயன்படுத்திய பின்னர் காயிலாங் கடையில் போட்டு சிறுதொகையாவது பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அவற்றை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என பிரித்து கையாளும் முறைகள் நிறையவே உள்ளன. தொழில் நுட்பவளர்ச்சில் மேம்பாடு அடைந்துள்ள இன்றும், கழிவுப்பொருட்களை கையாளும் வசதியில்லாமல் பல நாடுகள் அல்லல் படுகின்றன.
 புவியிலேயே இப்படியிருக்க விண்வெளியில் குவிந்துள்ள குப்பைகளை பற்றி என்ன சொல்வது?
விண்வெளியில் குப்பைகளா? என்று வியப்படைய வேண்டாம். விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் விண்வெளியில் தான் உள்ளன. இப்படி மனிதரால் தேவையின்றி விண்வெளியில் விடப்பட்ட பொருட்களை தான் விண்வெளி கழிவுகள் அல்லது விண்வெளி குப்பைகள் என்று கூறுகின்றோம். ராக்கெட்டை முன்னோக்கி தள்ளுகின்ற எரிபொருள் கலன்கள், செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள்களிலிருந்து வெடித்து சிதறிய பகுதிகள், துண்டுகள், துகள்கள், ராக்கெட் இயந்திர பட்டைகள், சிறிய திருகாணி, குறடு மற்றும் பிற சிறிய பொருட்கள் அனைத்தும் விண்வெளிக்கழிவுகளே.
முன்னாள் சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கியது முதல், எண்ணிக்கையில்லா கழிவுகள் அல்லது குப்பைகள் பரந்த விண்வெளியில் கொட்டப்பட்டுள்ளன என்று தான் குறிப்பிட வேண்டும்.
 இவ்வாண்டு தொடக்கத்தில் கண்களால் காணக்கூடிய அளவில் 17,000 கழிவுகள் விண்வெளியில் உள்ளதாக Houston னிலுள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின், நாசாவின் விண்வெளிக்கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியியலாளர் நிக்கோலாஸ் ஜான்சன் தெரிவித்தார்.
 அப்படியானால் கண்காணிப்பு கருவிகளால் பார்க்க முடியாத கழிவுகளின் எண்ணிக்கை தெரியவில்லை. கடந்த எப்ரல் திங்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்க சமூக மாநாட்டில் பங்குபெற்ற அறிவியலாளர்கள் 150 மில்லியன் துண்டுகளுக்கு மேலாகவே விண்வெளியில் கழிவுகள் உள்ளதாக குறிப்பிட்டனர். இவற்றில் பெரும்பாலானவை விண்வெளி வீரர்களால் வீசப்பட்டவை. இதற்கு முந்தைய புள்ளிவிபரங்கள் 45 விழுக்காடு விண்வெளி கழிவுகள் அமெரிக்காவாலும், 48 விழுக்காடு ரஷியாவாலும் குவிக்கப்பட்டவை என்று தெரிவிக்கின்றன. 1.2 விழுக்காடு மட்டுமே சீனாவால் உருவாக்கப்பட்டது.
அண்டவெளி, வானியல், வானிலை, அறிவியல் ஆராய்ச்சிகள் என மட்டுமே செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட காலம் மலையேறிபோய்விட்டது. இன்றைய நவீன தொழில்நுட்ப புரட்சியாய் உருவாகியுள்ள தகவல் தொடர்பு வசதிகளை வர்த்தகமாக மாற்றும் வகையில் பல செயற்கைக்கோள்களை எல்லா நாடுகளும் போட்டிப்போட்டு கொண்டு அனுப்பிவருகின்றன. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த செயற்கைக்கோள்கள் செயலிழந்து கழிவுகளாகிவிடுகின்றன. இவை சுற்றுவட்டப்பாதையில் இயங்கி ஆய்வுசெய்துவரும் செயற்கைக்கோள்களோடு மோதினால், அதன் செயல்பாட்டைப் பாதிப்பது மட்டுமல்ல அதிக விண்வெளிக்கழிவுகளையும் உருவாக்கும். கடந்த வாரத்தில் ஏற்பட்ட இரு செயற்கைக்கோள் மோதிக்கொண்ட விபத்தை இங்கே குறிப்பிடலாம்.

 அமெரிக்க Iridium 33 வர்த்தக செயற்கைக்கோளும், ரசியாவின் செயலிழந்த செயற்கைக்கோளும் ஒன்றொடொன்று மோதி சிதறியது என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெப்ரவரி 11 ஆம் நாள் தெரிவித்தது. இந்த செயற்கைக்கோள் மோதல் சம்பவம் சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக, மிதந்து கொண்டிருக்கும் விண்வெளிக் கழிவுகளின் சராசரி வேகம், நொடிக்கு 10 கிலோமீட்டராகும். அதிகபட்ச வேகம் நொடிக்கு 16 கிலோமீட்டர். சீருந்திலோ, பேருந்திலோ செல்லுகின்றபோது 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாக சொன்னால் ஒரு மணிநேரத்திற்கு 80 கிலோமீட்டர் என்று பொருள். இந்த வேகத்தில் சென்றாலே பறந்து போகிறார் பாருங்கள் என்று கூறுவதுண்டு. அப்படியானால் ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக 57,600 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவரும் விண்வெளி கழிவுகள், ஒன்றோடு ஒன்று மோதினாலோ அல்லது ஆராய்ச்சிகளை மேற்கோண்டிருக்கும் செயற்கைக்கோளோடு மோதினாலோ ஏற்படும் விளைவை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
 10 கிராம் எடையுள்ள சிறிய கழிவுப்பொருள் மோதினாலே, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சீருந்து மோதினால் ஏற்படுகின்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீன விண்வெளி கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியலாளர் Du Heng கூறியுள்ளார்.

எனவே விண்வெளி ஆய்வில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு நாடுகள் விண்வெளியில் பெருகி வரும் கழிவுகளை பற்றி அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. விண்வெளிக்கழிவுகளை குறைக்கும் சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அறிவியலாளர்கள் மாநாடு அறிவுறுத்தியது. செயலிழக்கின்ற பல்வேறு செயற்கைக்கோள்களால் தான் அதிகளவில் விண்வெளிக்கழிவுகள் ஏற்படுகின்றன. எனவே அவை செயலிழக்கும் முன்பே மிகவும் அதிக உயரத்திற்கு அனுப்பிவிடுவது மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முன்னேறிய மாற்றங்களை புகுத்துவது ஆகியவை விண்வெளிக் கழிவுகளை குறைக்கும் வழிமுறைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு அதிக செலவு ஆகும். புதிய தொழில்நுட்ப மாற்றங்களை செயல்படுத்தவும் பல ஆண்டுகள் தேவைப்படும். 
சர்வதேச அளவில் ஒரு கட்டுப்பாடோ அல்லது விதிகளோ பெரிய அளவில் இல்லாததால் கழிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு நாடுகள் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. 

இழப்பீடு கோரும் வரையறைகளும் இதுவரை இல்லை. இவ்வாறே நீடித்தால் பல கோடி செலவிட்டு செயற்கைக்கோள்களை அனுப்பும் வளரும் நாடுகளுக்கு இத்தகைய செயற்கைக்கோள் மோதல் பெரும் இழப்பாக போய்விடும்.
பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் எச்சரித்த செயற்கைக்கோள்கள் மோதிக்கொள்ளும் சாத்தியக்கூறு முதல் முறையாக நிகழ்ந்துள்ளது. இனிமேல் விண்வெளி விதிமுறைகளின் உருவாக்கத்தை பற்றி சர்வதேச நாடுகள் சிந்திக்க தொடங்கும் என்பதில் ஐயமில்லை.
. தலைக்கு மேல் கத்தி தொங்கும் இக்கட்டில் இருக்கிறேன் என்றால் இனிமேல் விண்வெளி கழிவுகளை எண்ணிக்கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------------
கணினிச் சேமிப்பு சாதனங்களாக பயன்படும் வன்தட்டு, பென்டிரைவ் போன்றவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை சில சமயங்களில் தவ்ருதலாக அழிபட நேரலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை மீட்டுக் கொள்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவற்றின் வரிசையில் Easy Photo Recovery மென்பொருளும் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.
இதன் மூலம் Compact Flash, SD, MMC, Memory Stick போன்ற சேமிப்பு சாதனங்களிலிருந்து இழக்கப்பட்ட புகைப்படங்களை அவற்றின் தரம் சிறிதளவும் குறையாது அதே பெயருடன் மீட்டுத்தருகின்றது.
தரவிறக்க சுட்டி

\சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?