பத்து கேள்விகள்.

1. தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசிய முதல்வர், 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத மின்வெட்டே இருக்காது என்றும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் 2 மணியாக குறைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டாகி விட்ட நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திக்கிறதே ஏன்?
2. 2012, பிப்ரவரி மாதம் சட்டசபையில் பேசிய முதல்வர், 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5 மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு 2550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மின்தடை நீக்கப்படும் என்று முதல்வர் கூறினார். ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

3) மின் திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

4) மேட்டூர் அனல் மின்திட்டத்தின் பணிகள் முடிவடைந்து விட்டதால் கடந்த மார்ச் மாதம் மின் உற்பத்தி துவக்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்த முதல்வர், இப்போது அடுத்த மாதம் தான் அங்கு உற்பத்தி தொடங்கும் என்று கூறுவது ஏன்?

5) தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?

6) தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 4 மணி நேரம் மின்சாரமும், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படுவதாக கூறியிருக்கும் முதல்வரால் அதனை நிரூபிக்க முடியுமா?

7) சிறு தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை சாதனையாக கூறும் முதலமைச்சர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எத்தனை மணி நேரம் மின்சாரம் வழக்கபடுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?

8) தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டும் முதல்வர், இதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? பிரதமருக்கு இதுவரை 58 முறை கடிதம் எழுதியுள்ள முதல்வர் இந்த பிரச்சினைக்காக இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்?

9) மின்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறும் ஜெயலலிதா, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளையும், மக்களையும் திரட்டி தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்?

10) தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் முதல்வர், அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா?

இவை எல்லாம் முதல்வருக்கு நினைவுபடுத்தி அவதூறு வழக்கில் உள்ளே செல்ல நம்மால் முடியாது.
இவை பா.ம.கட்சித்தலைவர் ராமதாஸ் கேட்ட பத்து கேள்விகள்.
பார்ப்போம்.இந்த கேள்விகளுக்கு பதில் வருகிறதா?அல்லது வழக்கமான அவதூறு  வழக்கு வருகிறதா என்று?  
_______________________________________________________________________________________________



 இவர் வேறு யாருமில்லை.
அமெரிக்கா கருத்துக்களை உலகமெங்கும்
பறந்து சென்று திணிக்கும் கிலாரி கிளிண்டன் இளம் வயது படம்தான்.[1969]







______________________________________________________________________________________________
மின் வெட்டை அதிகமாக்க ஒப்பந்தம்?

"இந்தியாவில் தமிழகத்தை, அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றுவதை அரசின் நோக்கமாகும். தொழில் துறை வரலாற்றில் இன்று எழுச்சி மிக்க நாள். இந்த ஒப்பந்தம் மூலம் 36,850 பேருக்கு நேரடியாகவும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு அரசும் ஒரே நாளில் 12 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது இல்லை. கடந்த மே மாதம் 5 ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இதன் மூலம் 9 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அ.தி.மு.க.வால் தமிழகம் வாகன உற்பத்தி துறையில் முக்கிய இடம் பிடித்துள்ளது."
      இப்படி சொல்லியே தமிழகத்தை நாசமாக்கி விட்டார்கள் .ஸ்டெர்லைட் ஆலையை முந்தைய ஆட்சியில் அம்மாதான் அடிக்கல் நாட்டி வழிகோலினார்.
இப்போது தூத்துக்குடி மாவட்டம் மழை இல்லாமலும்,இருக்கும் குடிநீரையும் ஆலைக்கு தாரை வார்த்து விட்டு தவித்துக்கொண்டிருக்கிறது.ஆலையை சுற்றிலும் உள்ள விளை நிலங்கள் நச்சாகி அதில் உள்ள புல்லை தின்றும் ,அங்குள்ள நீரை குடித்தும் கால்நடைகள் தினமும் செத்து விழுந்து கொண்டிருக்கின்றன .
சரி அங்கு சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு வேலை கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை.
இதே நிலைதான் ஹுண்டாய் ,நோக்கியா போன்ற நிறுவனங்களாலும்.நோக்கியா விபத்தை மறந்திருக்க மாட்டீர்கள்.
இவர்களை இப்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உள்ளே கொண்டு வந்துதான் தமிழகத்தில் மின் பற்றாக்குறையை கருணாநிதி  தனது ஆட்சிக்காலத்தில் உண்டாக்கி இப்போது அம்மா ஆட்சியில் தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கி வைத்துள்ளது.
ஜெ ,மின் வெட்டை போக்க ஒன்றும் செய்யாமல் இருப்பதோடு இப்போது கொஞ்ச -நஞ்ச ம் இருப்பதையும்  இவர்களுக்கு  தடையற்ற மின்சாரமாக கொடுத்து தமிழ் நாட்டில் விளக்கேற்றி வைக்கப் போகிறார?
இவர்கள் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை தருவார்கள் என்று வடக்கு பார்த்து உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.
அங்கே சென்னையில் உள்ள இது போன்ற நிறுவனங்களில் வேலை பார்ப்போரில் எத்தனை பேர் தமிழ் நாட்டை சார்ந்தவர்கள் என்று முதலில் கணக்கெடுத்து முதல்வர் பார்க்கட்டும் .
இப்பொது தமிழக தேவை மின்சாரம்தான்.மின்சாரத்தை  தடையின்றி தின்றுதீர்க்கும் பேருந்தும் தொழில்கள் அல்ல.ஏற்கனவே உள்ள பெருந் தொழில்களால் தமிழகம் மாசு பட்டும்-சுற்று சூழல் கேட்டும் முழித்துக்கொண்டிருக்கிறது.அதை செய்து விட்டு பெருமை பேச்சு  பேசட்டும்.
பெருந் தொழில்களால்  தமிழ் நாட்டுக்கு இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லை.அதில் கூ லி  வேலை மட்டும்தான் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைத்துள்ளது.
வசதி வாய்ப்புகள் அதிகார அளவில் மட்டுமே கிட்டியுள்ளது.வரிப்பணமும்,மின்சாரமும் ,குடிநீரும் வீணானதுதான் இதுவரை கண்ட மிச்சம்.
ஒரு சிறு நிகழ்வு .
கருணாநிதி ஆட்சியில் ஹுண்டாய் தனது தயாரிப்பான கார்கள் 100 ஐ தமிழக அரசுக்கு இலவசமாக வழங்கியது.அதை காவல்துறை பயன்பாட்டிற்கு அரசு கொடுத்தது.100 சிறிய கார்கள் விலை அதிக பட்சம் 5 லட்சம் என்றாலும்.5கோடி  ஆகும்.ஆனால் அதை கொடுத்து விட்டு தனது தயாரிப்புகளுக்கு விற்பனை வரி தள்ளுபடி ஓராண்டுக்கு சலுகையாக பெற்றுக்கொண்டதாம். அதன் மூ ல ம் அதற்கு  500 கோடிகள் வரை அனாமத்து லாபம்.தடையற்ற மின்சாரம்.அதுவும் குறைந்த கட்டணம்.தடையற்ற குடிநீர் மலிவு விலையில்  மானிய விலையில் நிலம்.தொழிற் சங்க உரிமை கிடையாது .வரிகளில் சலுகை இவைகளைக்கொடுத்து சுற்று சுழலை கெடுக்கும் அந்நிய தொழிற்சாலைகள் தேவையா?
இச்சலுகைகளை நமது தொழில் முனைவோ ருக்கு  கொடுத்தால் எத்தனை புதிய  தொழில்
உருவாகியிருக்கும்.இதன் லாபமும் நமது நாட்டிலேயே முடக்கப்படும்,வேலை வாய்ப்புகளும் உண்டாகும்.
மொத்தத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இப்படி முதல்வர் புரிந்துணர்வு கையொப்பங்கள் போட்டுக்கொண்டே போவதால்  மின்வெட்டு இன்னமும் அதிகமாக எதிர் கொள்ள தமிழக மக்கள் தயாராக வேண்டும் .
அடுத்த ஜுன் அல்ல.2017 வரை [அடுத்த அரசு வரும் வரை]மின்வெ ட்டுக்கடலில்  மக்கள் நீந்திக் கழிக்கத்தான் வேண்டும்.
முக்கியமாக சுரன் தொழிற்சாலைக்கு -தொழில் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல.அதை விட மக்கள் நலத்தை விரும்புகிறவன்.
கண்ணை விற்று தான் ரசிப்பதற்கு  ஓவியம் வாங்குவதை முட்டாள்தனம் என்பவன்.
_____________________________________________________________________________________________
 நவம்பர்-7

1917 நவம்பர் 7 உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமுடைய நாள். அன்று தான் ரசியாவில் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கி எறியப்பட்டு உலகிலேயே முதல் முறையாக தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் முதல் அரசு ரசியாவில் அமைக்கப்பட்டது. ஆண்டைகளின் வரலாற்றை புரட்டி போட்டு அடிமைகள் என்று கருதப்பட்ட உழைக்கும் மக்களும் ஆட்சி அமைக்க முடியும்  என்று உலகுக்கு காட்டிய நாள். கூலிகளாகவும், பஞ்சப் பராரிகளாகவும் ஆளும் வர்க்கத்தால் ஏய்க்கப்படிருந்த கூட்டம் சொந்த நாட்டை ஆட்சி செய்வதை உலகுக்கு அறிவித்த நாள். 

தோழர் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அமைத்தவுடன், அதுவரை உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. முதல் உலகப்போரால் பாதிக்கப்பட்டு அச்சத்திலிருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை தந்தது. ஜாரினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறு சிறு அண்டை நாடுகள் அனைத்திற்கும் அன்று முதல் விடுதலை வழங்கப்பட்டது. ரசியா முழு சுதந்திர நாடாக, சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.
இன்று நவம்பர் 7, ரசிய புரட்சி நாள். அந்த ரசியப்புரட்சியின் 92வது நினைவு நாள். நவம்பர் 7 புரட்சி  தின வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்ததாக நவம்பர்-7 


"நம்மவர் கமல்ஹாசன் "பிறந்த நாள்.

 வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்  
=========================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?