டிஜிட்டல் கடிதம்


suran

அரசு கேபிள் நிறுவனத்திற்கு [Digital Addressable System] டாஸ் முறையில் ஒளிபரப்ப மத்திய அரசு உரிமம் வழங்கவேண்டுமென வலியுறுத்தி-வற்புறுத்தி முதல்வர் ஜெயலலிதா  பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் அரசு கேபிள் நிறுவனம் சென்னை இல்லங்களுக்கு ஒளிபரப்ப செட் டாப் உள்ளிட்ட உபகரணங்களை 50 கோடி ரூபாய் செலவில் பெறத் திட்டமிட்டிருக்கிறது.
'இது தொடர்பாக உரிமம் கோரி கடந்த ஜூலை முதல் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைக்கு பலமுறை எழுதியும், மீண்டும் மீண்டும் அ இஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் உட்பட பலரிடம் வலியுறுத்தியும் இன்னமும் உரிமம் வந்தபாடில்லை' என்று வருந்துகிறார் தமிழக  முதல்வர் ஜெயலலிதா .
சென்னை உயர்நீதிமன்றம் அரசு கேபிள் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்படலாம் என்று கூறியும், மத்திய அரசு இன்னமும் உரிமத்தினை வழங்கவில்லை எனச் சுட்டிக்காட்டி, ஜெயலலிதா இவ்விஷயத்தில் பிரதமர் தலையிட்டு உடனடியாக தகவல் ஒலிபரப்புத்துறை தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கு டிஏஎஸ் உரிமம் வழங்குமாறு உத்திரவிடவேண்டுமென
  மத்திய அரசை வற்புறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
suran
இதுதான் இன்றைய தமிழக மக்களின் முக்கிய அத்தியாவசிய தேவை ?
வீடும்-தமிழ் நாடும் இருண்டு கிடக்கிறது.இதில் டிஜிடல் ஒளிபரப்புதான் மக்களின் அடிப்படை தேவை என முதல்வர் எண்ணுகிறார்.
இதே வற்புறுத்தலை தமிழகத்திற்கு மின்சாரம் பெறுவதிலும்.தண்ணீர் பங்கீட்டை கேட்பதிலும்  மீண்டும்,மீண்டும் இந்த வற்புறுத்தலை அதிமுக உறுப்பினர்களும் -தமிழக முதல்வரும் செய்திருக்கலாமே ?
அப்படி முதல்வர் பாடுபட்டு டிஜிடல் கேபிள் ஒளிபரப்பை கொண்டு வந்தாலும் தமிழக மக்கள் அதை பார்க்க மின்சாரம் வேண்டுமே?அதற்கு முதல்வர் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
இனி தமிழகத்திற்கு மின்சாரம் வந்தாலும் அது கருணாநிதி கால திட்டத்தின் பலனாகத்தானே இருக்கும்.
தலைமைச்செயலகம்,அண்ணா நூலகம் போல் அந்தமின்  திட்டங்களையும் ஒரு வழி பண்ணி விடாதீர்கள்.
இதுவரை தமிழக மின் தட்டுப்பாட்டை போக்க மின் உற்பத்திக்கு முதல்வராக ஜெயலலிதா ஒரு சிறு சைக்கிள் டைனமோ கூட எற்பாடு செய்யவில்லை என்பதுதான் உண்மை.அதனால்தான் மின் சாரம் பற்றி வெள்ளை அறிக்கை அரசு வெளியிட கருணாநிதி தைரியமாக கேட்கிறார்.
suran
 முதல்வருக்கு திமுக வினர்,விஜயகாந்த் மீது அவதூறு,நிலமோசடி வழக்குகள் போடவும்-அரசு அதிகாரிகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றவுமே நேரம் சரியாக உள்ளது.
கர்நாடகாவில் காவிரி பிரச்னைக்கு மூன்று முறை அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது.ஆனால் தமிழகத்தில் அதைபற்றி முதல்வர் கண்டு கொள்ளவே இல்லை.காவிரி படுகை விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்ட போதும் இவர் அசைய வில்லை.
ஆனால் கேபிள் தொலைக்காட்சி டிஜிடல் ஆவதுதான் இன்றைய முக்கிய பிரச்னையாக அவருக்கு தெரிகிறது. 
 ----------------------------------------------------------------
கடவுள்  பக்கம் 600 கோடிபேர் 
உலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களாக இருப்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் சுமார் 600 கோடி பேர் மதநம்பிக்கையுடன் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
உலகில் உள்ள  200 நாடுகளில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகள், கருத்துக்கணிப்பு மற்றும் பிறப்பு இறப்பு பதிவேடுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
suran
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது சுமார் 230 கோடிப் பேர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.
இஸ்லாத்தை பின்பற்றுவோர் 160 கோடிப் பேர் ஆவர்.
இந்துக்களின் எண்ணிக்கை 100 கோடியாக உள்ளது.
புத்த மதத்தை பின்பற்றுவோர் 50 கோடியாகவும், பழங்குடி- நாட்டுப்புற மரபுகளைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை 40 கோடியாகவும் உள்ளது.
யூதர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சமாக உள்ளது.
இவர்கள் தங்கள் துயரங்களுக்கும்,தங்களுக்கு வரும் பிரச்னைகளையும் தீர்க்கவே இந்த மத நம்பிக்கையை கைக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
பெரும்பாலும் சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கை திணிக்கப் பட்டதால் மட்டுமே தங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை கொஞ்சம் இருப்பதாக இந்த 80 %இல் 60% பேர்கள் கூறியுள்ளனர் .
suran
அதுவும் ஏதாவது இக்கட்டு- துன்பம் வரும் போது மட்டுமே இவர்களில் பெரும்பாலோ ர்களுக்கு கடவுள் கவனத்திற்கு வருவதும் தெரிகிறது. 
கடவுளை நம்பும் 80% போக மீதம் உள்ள 20 சதவீதத்தினர் மட்டுமே மனசாட்சியை மட்டும் நம்புகிறவ்ர்களாக இருப்பதாக தெரிகிறது?
---------------------------------------------------------------------------------------------------------- 

பாகிஸ்தானில்  "விஸ்வரூபம்" பற்றிய செய்திகள் ,

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் "விஸ்வரூபம்". இந்தப் படம் ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. 
இந்தத் தொழில்நுட்பத்தில் ஆசியாவில் வெளியாகும் முதல் படம் என்பதால் தமிழ்திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகத்தின் எதிர்பார்ப்பும் தற்போது விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றியதுதான்.
suran
 இந்நிலையில் அதற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது பாகிஸ்தானின் பிரபல டெய்லிடைம்ஸ் நாளிதழ். அதன் இணையதளத்தில் விஸ்வரூபம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் படம் குண்டுகளால் துளைக்கப் பட்ட காட்சி ரொம்பவே கவர்ந்து விட்டது பாகிஸ் தானிகளை. 
அதோடு கமல் ஹாசனின் ஆன்லைன் பேட்டி ஒன்றும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  
--------------------------------------------------------------------------------------------------------  

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?