உலகத்தமிழ் இணைய மாநாடு


suran

செல்பேசிகள், Tablet Computers எனப்படும் பலகைக் கணினிகள், ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு இயங்கு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல் குறித்து விவாதிப்பதற்கான உலகத்தமிழ் இணைய மாநாடு சிதம்பரத்தில் வரும்  28 -ம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்கள்  நடக் கிறது.

உத்தமம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற சர்வதேச அமைப்பும், தமிழ்நாட்டின் அண்ணாமலைப்பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பதினோறாவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் மொழியியலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

துறைசார் வல்லுநர்களுக்கான ஆய்வரங்கம், தமிழ்கணினி குறித்து மாணர்வகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்குவதற்கான மக்கள் கூடம், தமிழ் கணினி மென்பொருட்களை பார்க்கவும் வாங்கவுமான கண்காட்சி என்று மூன்று பிரிவுகளாக இந்த மாநாடு நடக்கவிருக்கிறது.

மின் இதழ்கள் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களை கைக்கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், இயன் மொழிப்பகுப்பாய்வு, பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தமிழில் தேடு பொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

 தமிழ் இணையத்தின் தற்போதைய நிலைமை, வலைப்பதிவு, சமூகவலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல்வலை, தமிழ் தரவுத்தளங்கள், கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள், தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள், கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------
 2012-இல் சில முக்கியவான்கள்,
 முதலில் நிலவில் கால் வைத்த  பெருமைக்குரிய நீல் ஆர்ம்ஸ்டாரங்க் தனது 82 வயதில் 
காலமானார் .
 கடவுள் துகள் எனும் ஹிக்ஸ்  போசான் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான பீட்டர் ஹிக்ஸ் .
 ஜெம்ஸ் காம்ரூன்[,டைட்டானிக் புகழ்.] உலகிலேயே மிக ஆழமான கடல்பகுதியில் சென்று தனியே ஆய்வு சாதனை நடத்தி திரும்பியவர்.[தனது அடுத்த படத்துக்காகத்தான்].
 உலகப்புகழ் இயற்பியலாளர்.70 வயது ஸ்டீபன் ஹாவ்கிங் .தனது இயற்பியல் ஆய்வுக்காக 3 மில்லியன் டாலர் பரிசை வென்றவர்.
 இணையம் வழி தொழிலில் பங்கு சந்தையில் 19 பில்லியன் டாலர் திரட்டிய முகனூல்[பேஸ்புக்]

308 பேர்களை பலி வாங்கிய நிலநடுக்கம்[2009].இதை கணிக்கத் தவறிய 8 அரசு புவியலாளர்களை இப்போது இத்தாலிய அரசு உள்ளே தள்ளியுள்ளது.
                                கடவுள் துகள் கண்டு பிடிக்க உதவிய எந்திரம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?