பேய்கள் நடமாடுகின்றன,

                                                                                                                                         -அருந்ததிராய்
‘அன்தில்லா’ என்பது இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான வளமனையாகும். இதுவரையில் இவ்வளவு பெருந் தொகையைச் செலவிட்டு வேறு எவரும் இதுபோன்ற வீட்டைக் கட்டவில்லை. 27 அடுக்கு மாடிகள் கொண்ட இம்மாளிகையில், மூன்று சிறிய விமானதளங்கள், ஒன்பது மின் தூக்கிகள், தொங்குத் தோட்டங்கள், நடன அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஆறு தளங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் முதலானவை உள்ளன. 600 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். 27 அடுக்குகளின் உயரத்திற்கும் இரும்புச் சட்டகங்கள் மீது புல்வெளி அமைக்கப் பட்டுள்ளது.
சுரன்
120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 விழுக்காடு மதிப்பு அளவிற்கான சொத்து இப்படி 100 பெரும் கோடீசு வரர்களிடம் இருக்கிறது.
இவ்வளவு பெரிய மாளிகையில் அம்பானி குடும்பம் வாழவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது எவர்க்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆயினும் அந்த மாளிகைக்கு வாஸ்து சரியில்லை; அதில் பேய்கள் நடமாடுகின்றன; அது ‘அதிர்ஷ்டம்’ இல்லாதது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
பன்னாட்டு நிதியத்தால் திணிக்கப்பட்ட புதிய தாராளமயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், தற்போது இந்தியாவில் 30 கோடி நடுத்தர மக்கள் இருக்கின்றனர். இவர்களின் அருகிலேயே அவலமான இந்தியாவும் இருக்கிறது. வளங்களை இழந்து கிடக்கும் ஆறுகள், வறண்டுவிட்ட கிணறுகள், மொட்டையாகக் காட்சி தரும் மலைகள், கொள்ளை யடிக்கப்பட்ட காடுகள், கடன் சுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 2,50,000 உழவர்களின் ஆவிகள், ஒரு நாளைக்கு இருபது உருபாய்க்கும் குறைவாகவே செலவிடக் கூடிய வறிய நிலையில் வாழும் 80 கோடி மக்கள் என்று பட்டியல் நீள்கிறது.
முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 20 பில்லியன் டாலர் (1 பில்லியன் - 100 கோடி). ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் முகேஷ் அம்பானியிடம் உள்ளன.
சுரன்
பெட்ரோலியப் பொருள்கள், எண்ணெய், இயற்கை எரிவளி, செயற்கை இழை, சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், உணவுப் பொருள் சில்லறை வணிகம், கல்வி நிறுவனங்கள், உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஈடுபட்டுள்ள ரிலை யன்சு நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 47 பில்லியன் டாலர். அண்மையில், செய்திகள் மற்றும் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் (சேனல்கள்) 27 கொண்டிருந்த இன்போடெல் நிறு வனத்தின் 95 விழுக்காட்டுப் பங்குகளை ரிலையன்சு வாங்கியது.
ரிலையன்சைப் போல இந்தியாவில் டாடா, ஜிண்டால், வேதாந்தா, மிட்டல், எஸ்ஸார், முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம் ஆகியவை முதன்மையான முதலாளிய நிறுவனங்களாக உள்ளன. இந்நிறுவனங்களின் கிளைகள் அய்ரோப்பா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் உள்ளன. இந்நிறுவனங்களின் வலைப்பின்னல்கள் கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் - வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உள்ளன. டாடா நிறுவனத்துக்கு 80 நாடுகளில் 100 கம்பெனிகள் உள்ளன. இந்தியாவில் மிகவும் பழமையான பெரிய மின் உற்பத்தி நிறுவனங்களுள் டாடா நிறுவனமும் ஒன்று.
 டாடா நிறுவனம் சுரங்கங்கள், எரிவாயு வயல்கள், எஃகு ஆலைகள், தொலைபேசி, கேபிள் டி.வி. மற்றும் அகண்ட அலைவரிசை வலைப்பின்னல், நகரியங்கள் அமைத்தல் ஆகிய தொழில்களைச் செய்கிறது. மகிழுந்துகள், சரக்குந்துகளைத் தயாரிக்கின்றது. பல தாஜ் ஓட்டல்கள் உள்ளன. தேயிலை நிறுவனம், புத்தக வெளியீட்டு நிறுவனம், நூல் விற்பனை மய்யங்கள், புகழ்பெற்ற டாடா உப்பு, லேக்மி அழகு சாதனங்கள் தயாரிப்பு முதலானவற்றையும் நடத்து கின்றது.
 ‘எங்களுடைய பொருள் இல்லாமல் நீங்கள் வாழ முடியாது’ என்று விளம்பரம் செய்யக் கூடிய அளவுக்கு டாடா நிறுவனம் எல்லாத் தொழில்களிலும் - துறைகளிலும் ஈடுபட்டுள்ளது.
சுரன்
எல்லாவற்றையும் தனியார் மயமாக்குவது என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு உலகிலேயே பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்தது. ஆயினும் பழைய காலனி நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது போலவே, இந்தியாவின் கனிம வளங்கள் முதன்மையாக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நிலத்தடியின் ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் கனிமங்கள் கொள்ளைப் பணத்தை அள்ளிக்கொடுக் கின்றன. அதனால் இத்தொழிலில் டாடா, ஜிண்டால், எஸ்ஸார், ரிலையன்சு, ஸ்டெர்லைட் போன்ற முதலாளிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பணம் கொடுத்து வாங்காத ஒரு பொருளை விற்பது போன்ற சுரங்கத் தொழில் - வணிகனின் பெருங் கனவு நனவானது போன்றதல்லவா!
அடுத்ததாக, பெருமுதலாளியக் குழுமங்களுக்குப் பெருமளவிலான வருவாய், மனை-நில வணிகத்தி லிருந்து கிடைக்கிறது. உலகில் பல நாடுகளிலும் உள்ள ஊழல் அரசு ஊழியர்களின் உதவியால், வால் ஸ்டிரீட் தரகர்களும், வேளாண்-வணிகப் பெருங்குழுமங்களும், சீனாவின் பில்லியனர்களும் பல நாடுகளில் பெரும் பரப்பளவு கொண்ட நிலங் களைக் கைப்பற்றியுள்ளனர்.
 இந்தியாவில் அரசு பல இலட்சம் ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து, ‘பொது நன்மைக்காக’ என்று கூறி, தனியார் முதலாளிகளுக்குக் கொடுத்து வருகிறது. சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், அடிப்படையான கட்டு மானத் திட்டங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், மகிழுந்து செய்யும் தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்கூடங்கள், ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ஆகியவற்றுக்காக முதலாளிகளுக்கு அரசு நிலங்களை அளிக்கிறது. (சொத்துரிமைச் சட்டம் ஏழைகளுக்குச் செல்லாது போலும்).
எப்பொழுதும் போல, தம் நிலங்களிலிருந்தும், வாழ்வாதாரங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் மக் களுக்கு மறுகுடியமர்த்தலும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என்று உறுதிமொழி மட்டும் அளிக்கப் படுகிறது.
சுரன்
 நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் ஒட்டுறவே இல்லை என்பது இப்போது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. 20 ஆண்டுக்கால ‘வளர்ச்சிக்கு’ப்பின், உழைக்கும் வயதி னருள் 60 விழுக்காட்டினர் சுய தொழில் செய்வோராக இருக்கின்றனர். நாள் / வார / மாதக் கூலிக்கு (சம்பளத் துக்கு) வேலை செய்யும் உழைப்பாளர்களில் 90 விழுக்காட்டினர் அமைப்புச்சாராத் தொழிலாளர்களாக - எத்தகைய பணிப்பாதுகாப்பும் உதவியும் அற்ற வர்களாக இருக்கின்றனர்.
சுதந்தர இந்தியாவில், 1980கள் வரையில், நக்சலைட்டுகள் இயக்கம் முதல் செயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் முழுப்புரட்சி இயக்கம் வரை பல்வேறு இயக்கங்கள், பெருநிலப் பண்ணையார் களிடம் உள்ள நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்துத் தர வேண்டும் என்று போராடின. ஆனால் இன்று, நிலத்தையோ அல்லது சொத்தையோ பிரித்தளிக்க வேண்டுமென்று யாரேனும் பேசினால், அது சனநாயகத்துக்கு எதிரானது என்றும், அவ்வாறு கூறுபவர் பைத்தியம் என்றும் கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆயுதமேந்திக் கடுமையாகப் போராடும் இயக்கங்கள் கூட, மக்களிடம் குறைந்த அளவில் எஞ்சியுள்ள நிலத்தைப் பாதுகாப்பதற்காகவே போராடும் நிலை உள்ளது.
சுரன்
 நிலமற்ற பல இலட்சம் மக்கள் - இவர்களில் பெரும் பகுதியினர் தலித்துகள், பழங்குடியினர் - அவர்கள் காலங்காலமாக வாழ்ந்த சிற்றூர்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, தற்போது சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் எத்தகைய அடிப்படை வசதிகளுமில்லாத குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் இழிந்த-இரங்கத்தக்க வாழ்நிலை பற்றி எவரும் பேசுவதில்லை.
2005ஆம் ஆண்டு சத்தீஷ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மாநில அரசுகள் பல முதலாளியக் குழுமங்களுடன் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம், பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பாக்சைட், இரும்புத் தாது மற்றும் பிற கனிமங்களை அற்பத் தொகைக்கு விற்கப்பட்டன. தாராளமயச் சந்தையின் விதிப்படி, கனிமங்களின் மதிப்பு மீது 0.5 விழுக்காடு முதல் 7.00 விழுக்காடு வரையிலான உரிமைப் பங்கீட்டுத் தொகையை (ராயல்டி) அரசுக்கு அளிக்க வேண்டும் என்பதுகூட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இடம் பெறவில்லை.


                                                                                                                  மேலும் படிக்க----->

சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?