இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் நிதி,

படம்
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மீண்டும் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகிவிட்டார்.இதனால் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சில அமைச்சர்களை மாற்றியமைத்திருக்கிறார். உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஷி்ண்டே வகித்து வந்த மின்சாரத்துறை, பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் மூன்றரை ஆண்டுக்குப்பின் மீண்டும் நிதியமைச்சராகியுள்ளார்.  2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலக்குப்பின் உள்துறை அமைச்சராக்கப்பட்டார். நாட்டின்  பொருளாதார வளர்ச்சி பயப்படும் நிலையில் அதை சரி செய்யும் சவால் அவருக்குக் காத்திருக்கிறது. சிதம்பரம் சவாலை சரி செய்வாரா? தற்போது, சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ___________________________________________________

சைதை துரைசாமிக்கு வந்த காபரா

படம்
வாந்தி, பேதியால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குள்ளம்மாள் என்ற பெண், கடந்த 21ம் தேதி இறந்தார். அவர், காலராவால் இறக்கவில்லை, சிறுநீரக பாதிப்பால் இறந்தார் என, மருத்துவமனை நிர்வாகம் மறுத்து உள்ளது.  அதே மருத்துவமனையில் வாந்தி, பேதியால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பாஞ்சாலி என்ற பெண் சிகிச்சை முடிந்து, கடந்த 21 ம் தேதி வீடு திரும்பினார்.  ஆனால் பேதி தொடர்ந்த நிலையில் அவர், 24 ம் தேதி மாலை மரணம் அடைந்தார். அவரும் சிறுநீரகக் கோளாறால் இறந்ததாக மாநகராட்சி தெரிவித்தது. ஆக சென்னையில் சிறு நீரகம் திடீரென பலருக்கு பழுதாகியுள்ளது தெரிய வருகிறதா?அதுவும் சைதையார்நிர்வாகம் ஆரம்பமானது முதல் இவ்வாறு நடப்பதற்கு திமுக வின் சதி வேலை தான் காரணமா? சென்றநான்கு வாரங்களாக, சென்னையில், வாந்தி, பேதி பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை கிட்டத்தட்ட, 300 பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இவர்களில், நான்கு பேருக்கு காலரா என,வேண்டா வெறுப்பாக அல்லது வேறு வழியின்றி மருத்துவமனை  உறுதி செய்துள்ளது. காலராவை மறைப்பது மாநகராட்சி வேலையா? அதை பற்றி எச்ச்சரிக்கை செய்வதும் -தடுப்பு நட

32 -பேர்கள்

படம்
உயிரை பலி வாங்கிய தீ டெல்லியில் இருந்து சென்னை வந்த கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 32 பயணிகள் உயிரிழந்துதுள்ளனர். 25 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று அதிகாலை4.20 மணிக்கு, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்தைக் கடந்து வந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், மின்சாரக் கோளாறு விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டாலும் பெட்டியில் வெடிமருந்து வாடை காணப்பட்டதால் யாரேனும்  வெடிமருந்து பொருளை மறைவாகக் கொண்டு வந்தபோது மின்கசிவால் பெரும் சேதம்  ஏற்பட்டிருக்கலாம் என  சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விபத்தால்நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே,பயத்தில் ஓடும் ரயிலில் இருந்து சில பயணிகள் குதித்துவிட்டார்கள்.  மேலும், விபத்துக்குள்ளான எஸ் 11 பெட்டியில் இருந்து 28 பயணிகள் காயங்களுடன் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய பெட்டி முழுமையாக தீயில் எரிந