மேட்டை நோக்கி பாய்ந்தோடும் தண்ணீர்


                                                                                                                                                                                            -என்.பகத்சிங்
மனிதனுக்கும் தண்ணீருக்கும் காலங் காலமாக நெருங்கிய உறவு இருந்து வருகிறது. வரலாற்றின் பக்கங்களை புரட்டினால், மனித நாகரிகம் நீரை அடிப்படையாக கொண்டே வளர்ந்துள்ளது. எகிப்து நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் நைல் நதிக்கரையோரம் தான் வளர்ந்துள்ளது. இதுபோல் பல நாட்டு மக்க ளின் கலாச்சாரம் அந்தந்த பகுதிகளின் நதி கள், ஆறுகளுடன் பின்னிப் பிணைந்தவை. இனுயிட், மொசடோமிய சமுதாயங்கள் நீருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தன. 
 நீரைப் பொதுவில் வைத்து கடவுளாகவே வணங் கின. மனிதனுக்கும், நீருக்குமிடையே ஆரம்ப காலந்தொட்டே இருவிதப் போராட்டங்கள் இருந்து வருகின்றன. வெள்ளத்திலிருந்தும், அதன் அழிவிலிருந்தும் தன்னைப் பாதுகாத் துக் கொள்ள போராடுவது ஒருபுறம், மறுபுறம் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும், பொருட் களை உற்பத்தி செய்வதற்கும் பயனுள்ள வழி களில் நீரை சேகரித்து மேலாண்மை செய் வது என அந்த போராட்டங்கள் தொடர்ந்தே வருகின்றன.

பூமிப்பந்தில் நீரின் அளவு

உலகின் மொத்த நீரின் அளவு மாறாமல் உள்ளது. 
மற்றப் பொருட்களைப் போன்று நீரை உற்பத்தி செய்ய இயலாது.
 நீர் சுழற்சியினால் கடல்நீர் சூரிய வெப்பத்தில் ஆவியாகி பின்னர் மழையாக பொழிகிறது. நாம் வாழும் பரப்பில் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதில் 97 சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2 சத வீதம் பனிக் கட்டியாக உறைந்துள்ளது. 1 சத வீதம் தண்ணீ ரைத்தான் மனிதனும், ஏனைய ஜீவராசிகளும் குடிநீராகவும், விவசாயத்திற்கும், மற்ற தேவை களுக்கும் பயன்படுத்த முடியும்.

உலகமயமாதலின் விளைவாக இயற்கை வளங்கள் யாவும் முதலாளிகளின் லாப வேட் டைக்கு பலியாகியுள்ளன. இன்று நீர் பல கோடி டாலர்கள் புழங்கும் பெரிய வர்த்தகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிக அதிகலாபம் ஈட்டும் துறை என்று கூறப்படுவ தால் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் அதில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளன.

இந்தியாவில் தனியார்மயம்

நீர் தனியார் மயமாவதால் பொது மக்க ளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். வடக்கே கங்கை, தெற்கே காவிரி, பவானி, சிறுவாணி, தாமிரபரணி என இந்திய ஆறுக ளின் மீது பன்னாட்டுநீர் வணிகர்களின் கண் பார்வை விழுந்து வெகு நாட்களாகிவிட்டன. நமது ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணை களின் நீரை பன்னாட்டு நிறுவனங்கள் பாட்டி லில் அடைத்துக் கொள்ளை லாபமடிக்கின் றனர். கங்காஜல்.காம் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உலகிற்கு கங்கையின் புனிதத்துவம் பற்றி போதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பவானி ஆற்றை கீன்லீ கம்பெனிக்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. தினசரி 1 லட்சம் லிட்டர் நீர் கோவை நகருக்கு விநியோகம் செய்ய வெறும் 4 லட்சம் ரூபாய் மட்டுமே அரசுக்கு செலுத்தப்படும் என்பதே ஒப்பந்தத்தின் அடிப்படை. கிட்டத்தட்ட 3 லட்சம் தொழிலா ளர்களை கொண்ட திருப்பூர் நகருக்கு நீர் விநி யோகம் செய்ய மூன்று தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. பெக்டெல் (யு.எஸ்), யுனைடெட் யூடிலிட்டீஸ் (பிரிட்டன்), மஹீந்திரா அன் மஹீந்திரா (இந்தியா) ஆகிய பகாசுர நிறுவனங்கள் தான் அவை. மூன்று நீர் வியாபாரிகளும் திருப்பூர் வளர்ச்சிக் கழகம் என்ற பெயரில் அந்நகரில் நீர் விநியோகத் தை தனியார் மயமாக்கியுள்ளன. 
ராட்சச குழாய் களை அமைத்து பவானி ஆற்றின் நீரை திருப்பூர் மக்களுக்கு விநியோகிக்க 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண் டுள்ளன.
 இதனால் பவானி ஆற்றை நம்பி வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ் வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் நகர் வாழ் மக்களும் நீருக்காக அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவில் நீரை தனியார் மயமாக்கிய திட்டம் முதன் முதலில் சத்தீஸ்கரில் தான் அமல்படுத்தப்பட்டது. திருப்பூர் திட்டத்திற்கு முன்பே கங்கை நீர் பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டெக்ரிமாண்ட் டிடம் ஒப்படைக்கப்பட்டது.
 தில்லி நகருக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யவே, இந்த ஒப்பந்தம் என்று தெரிவிக்கப்பட்டது. கங்கை நீரை சுத்தப்படுத்தும் பணியை வேறு யாரும் செய்ய முடியாதா? கடுமையான எதிர்ப்பை மீறி கங்கை நீர் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.

பெப்சியும், கொக்ககோலாவும் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவின் நீர்வளங் களை சுரண்டி வருகின்றன. கோக்கின் மொத்த வருவாய் 27,458 பில்லியன் டாலர்கள் என்றும், பெப்சியின் வருவாய் 31,372 பில்லியன் டாலர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்திலும், கேரளத்திலும் இவற்றை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன. இயற்கையின் கொடை எப்படி வணிகமயமாக் கப்படுகிற தென்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டு. இந்த நீர் கம்பெனிகள் நீரைச் சுரண்டி உலகின் பல நாடுகளை பாலைவனமாக்கு வதுடன், தரம் குறைந்த நீரின் மூலம் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கின்றன. 
நீர் தனியார் மயமாகும் போது நீரை பயன்படுத்தும் முறையும் ஏழைகளுக்கு எதிராகவே உள்ளது. வசதி படைத்தவர்கள் மனமகிழ நீர் ராஜ்யங் களும், நீர் பூங்காக்களும் அமைக்கப்படுகின் றன. மும்பையில் 28 நீர் பூங்காக்கள் உள்ளன. 
தினசரி இவற்றிற்கென 52 பில்லியன் லிட்டர் நீர் விரயமாகிறது. ஒரு கோல்ஃப் மைதானத் திற்கு 18 முதல் 23 மில்லியன் லிட்டர் நீர் தினசரி தேவைப்படுகிறது. நம் நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 6.9 சதவீதம் மட்டுமே உள்ள வசதி படைத்தவர்களுக்கென எவ்வளவு நீர் செலவாகிறது?
 ஒரு கோல்ஃப் மைதா னத்தில் பயன்படுத்தப்படும் நீர் லட்சத்திற் கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கோடைகால நீர்தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்பது அரசுக்கு தெரியாதா? ஏழைகளுக்கு குடிக்க நீர் இல்லாத போது வசதி படைத்தவர்கள் கோக் அருந்துவதும், நீர் பூங்காக்களுக்கு சென்று இளைப்பாறுவதும் எவ்வளவு மோச மான முரண்பாடு.

நீர் வளக் கொள்கை 2012

பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நீரின் தேவையும் அதிகரித்துள்ளது. வேகமாக குறைந்துவரும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. நீரை சிக்கன மாகவும், முறையாகவும் பயன்படுத்தவே நீர்க் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக மையஅரசு தெரிவித்தாலும் உள்ளீடாக தண்ணீரை வர்த்தகப் பொருள்களில் மிக முக்கியமான தாக மாற்றும் தந்திரம் ஒளிந்துள்ளதாக தெரி கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய நீர்வள கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் தேசிய நீர் சட்ட வரைவு உருவாக்கப் பட்டு 2015 ம் ஆண்டு முதல் அமலாக்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங் களாவது:

* நீரை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பை உரு வாக்க வேண்டும். பயன்பாட்டுக்கேற்ப நீருக்கு கட்டணம் வசூலிக்கவேண்டும்.
* இந்தக் கட்டணம் ஆண்டுதோறும் மாற் றியமைக்கப்படவேண்டும். நிலத்தடியிலி ருந்து எடுக்கப்படும் நீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

* அந்தந்த பகுதிகளில் தண்ணீர் பயன் படுத்துவோர், சங்கங்கள் உருவாக்கப் பட்டு, இந்த அமைப்புகள் தண்ணீருக்கான கட்டணங்களை வசூலிக்க வேண்டும். அவரவர் எல்லைக்குள் தண்ணீர் வழங் கும் முகமையாக இவர்கள் செயல்பட வேண்டும்.

* ஆற்றுப் படுகைகள், நீர்நிலைகளின் கட் டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் உள்ள எல்லா ஆக்கிர மிப்புகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.

* நீர் மாசுபடுவதை தவிர்க்கவேண்டும். தண்ணீரின் நீரோட்டக் கோணத்தை மாற் றக் கூடாது. நிலத்தடி நீர்மட்டம் உயர் வதை உறுதிசெய்ய வேண்டும். அணை களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும். அதற்கான சரியான திட்டமிடல்கள் இருத்தல் வேண்டும்.
 வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் விநி யோகம் போன்றவற்றில் தனியாரை அனு மதிக்க வேண்டுமென 2012ன் சட்ட வரைவு உள்ளது. 
தண்ணீர் குறித்து சட்டம் இயற்றும் அதி காரம் அந்தந்த மாநிலங்களுக்கு இருப்பதாக தெரிவித்தாலும், தேசிய அளவிலான பொதுநீர் கொள்கை உருவாக்கப்படும் என்ற மைய அர சின் அதிகார இரும்புக்கரம் திரைமறைவில் நீண்டுள்ளது. இந்த சட்டமுன்வரைவுகள் அமலானால் நாம் பயன்படுத்தும் எல்லாவித மான நீருக்கும் பணம் கட்ட வேண்டும். நீர் விநியோகம் முற்றிலும் தனியார்மயமாகிவி டும். 
இந்த முடிவு விவசாயத்திற்கு பலத்த அடியாகவும் இருக்கும். ஒவ்வொரு மாநில அரசுகளும் தண்ணீர் ஒழுங்குமுறை ஆணை யம் என்ற அமைப்பை உருவாக்கினாலும், நீர் விநியோகம், பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனங்களிடமே தாரை வார்க்கும். 
 அவர் கள் தண்ணீர் ஆணைத்திற்கு பெயரளவுக்கு சில கட்டணங்களை செலுத்திவிட்டு கொள் ளை லாபமடிப்பர். மற்ற துறைகளின் அனு பவங்களும் அதுவே.

நீர் அனைவருக்கும் பொதுவான சொத்து. எனவே நீரை பாதுகாத்து விநியோகிக்க வேண்டியது அரசின் கடமையாக கருத வேண்டும். 

நமது இயற்கை வளங்கள் தொடர் பாக அரசுகள் எந்தவிதமான ஒப்பந்தம் செய்து கொண்டாலும் மக்கள் மத்தியில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பின்பே ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இன்று நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்த வேண் டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக் கும் உள்ளது. 
நாம் இந்தப் பொறுப்பை தட்டிக் கழித்தால் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் மோசமான உலகைத்தான் விட்டுச் செல்வோம்.
 

"என் தாத்தா ஆற்றில் நீரைப் பார்த்தார்

என் தந்தை கிணற்றில் நீரைப் பார்த்தார்

நான் குழாயில் நீரை பார்த்தேன்

என் மக்கள் பாட்டில்களில் பாக்கெட்டு களிலும் பார்க்கின்றனர்.

எனது பேரக் குழந்தைகள்???"
 
[கட்டுரையாளர்; அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர், சங்கத்தின் முன்னணி ஊழியர். 
நன்றி:தீக்கதிர்  ]
 =================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?