விஸ்வரூபம் எடுக்கிறது விஸ்வரூபம்.

மீண்டும் இதுவும் விஸ்வரூப செய்திதான்.
ஆனால் இது நமது தினகரனில்  வெளியான  செய்தி .
"அமெரிக்கா, துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கேரளா, ஆந்திரா மற்றும் பெங்களூரிலும் விஸ்வரூபம் படம் நேற்று திரையிடப்பட்டது.
 ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் மிகவும் சிறப்பாக இந்த படம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழ் திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றும் படத்தை பார்த்தவர்கள் ஒருமனதாக பாராட்டுகின்றனர்.
suran
க மல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் தமிழகத்தில் 500 தியேட்டர்களில் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. படம் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானது எனக்கூறி சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. படத்தை திரையிட விடமாட்டோம் என்று அறிவித்தன. அதை தொடர்ந்து தமிழக அரசு படத்துக்கு தடை விதித்தது.

தடையை எதிர்த்து கமல் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்தார். ‘26,ம் தேதி  படத்தை பார்த்து விட்டு 28,ம் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்Õ என்று அவர் உத்தரவிட்டார். தடை நீக்கப்படாததால் தமிழகத்தில் படம் வெளியாகவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் கர்நாடகாவில் பெங்களூரிலும் படம் திட்டமிட்டபடி நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. திரையிடப்பட்ட  தியேட்டர்களில் காலையிலேயே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ஐதராபாத் நகரில் காவல்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க  ஒருநாள் நிறுத்தி வைக்கப்பட்டது. 
திருப்பதியில் 3 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

அண்டை மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக ஊர்களில் வசிக்கும் கமல் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டி சென்று அங்குள்ள தியேட்டர்களில்  படத்தை பார்த்து வருகின்றனர் .
 
பெங்களூரில் படம் பார்த்த ஷங்கர் என்ற ரசிகர்,  ‘‘ஹாலிவுட் தரத்தில் படம் சிறப்பாக உள்ளது. இந்த படத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை யாரும் புண்படும் வகையில் படத்தில் எந்த காட்சியும் இல்லை’’ என்றார்.

மகேஸ்வரி என்பவர் கூறும்போது, ‘‘தொழில்நுட்ப ரீதியிலும் காட்சிகள் வடிவமைப்பிலும்  படம் சர்வதேச தரத்தில் வந்திருக்கிறது. தமிழில் இப்படியொரு படம் வந்திருப்பது எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்’’ என்றார். திருவனந்தபுரம் கைரளி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த ராமநாதன், ‘‘படத்தில் தீவிரவாதத்தை பற்றிதான் காட்டுகிறார்கள். எந்த மதத்துக்கும் எதிரான காட்சிகள் எதுவும் இல்லை. தனக்கு மதமே கிடையாது என்பவர் ஒரு மதத்தை எதற்காக விமர்சிக்க போகிறார்? இந்த மாதிரி சிறப்பான படத்தை கொடுத்த கமலை  பாராட்டுவதுதான் சரி’’ என்றார்.

‘‘படத்தில் எந்த பிரச்னையும் இல்லை. சில அமைப்புகள் தேவையில்லாமல் இதில் அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றன. தீவிரவாதம் பற்றியும் தீவிரவாதிகளை பற்றியும்தான் படம் சித்தரிக்கிறது. அதை தவறாக புரிந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்து தடையெல்லாம் விதிக்கப்பட்டதால் இப்போது எதிர்பார்ப்பு எகிறிவிட்டது’’ என்று திருவனந்தபுரத்தில்  தமிழக ரசிகர் உதயகுமார் சொன்னார்.

அமெரிக்காவில் படத்தின் பிரீமியர் ஷோ நேற்று நடந்தது. ஏராளமான ஹாலிவுட் கலைஞர்கள் படம் பார்த்தனர். ‘ஒரு இந்திய படம் இவ்வளவு சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது’ என்று வியப்புடன் தெரிவித்தனர். கமலின் திறமையை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வெளிநாடுகளில் படம் பார்த்தவர்கள், படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ‘ஏதாவது ஒரு காரணத்தை வைத்து ஒவ்வொருவரும் தடைகேட்டால் யாரும் எதையும் சொல்ல முடியாத சூழல் ஏற்படும். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல’’ என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
 
இது இவர்களின் கருத்து:

மனீஷ் திவாரி: சென்சார் போர்டு அனுமதி அளித்த பிறகு மாநில அரசு தடை விதிப்பது சரியல்ல. அந்தந்த பணியை அவரவர் பார்க்க வேண்டும். தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கி.வீரமணி: இரு சாராரும் சந்தித்து உணர்வுகளை பகிர்ந்து  புரிந்து கொண்டு நட்புறவும், பல்வேறு சமூகத்தவர்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படும்படி செய்வதுதான் சரியாக இருக்கும்.

மதூர் பண்டார்கர்: சென்சார் அனுமதித்த பிறகு அரசு விதித்த தடை திகைப்பாக இருக்கிறது. கலைஞர்கள் யாருக்குமே எதிரியாக இருக்க மாட்டார்கள்.

பிரகாஷ் ராஜ்: விஸ்வரூபத்துக்கு தடை விதித்தது ஏற்கத்தக்கது அல்ல. கலாசார தீவிரவாதம் தடுக்கப்பட வேண்டும் என்று   கமல் சொல்வதில் நான் உடன்படுகிறேன்.

இல. கணேசன்: அமெரிக்காவில் ஒரு குறும்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தூதரகத்தை தாக்க முயற்சி நடந்தது. ‘துப்பாக்கி’ படம் திரையிட்ட தியேட்டர்கள் தாக்கப்பட்டன. இப்போது ‘விஸ்வரூபம்’ படத்துக்கு எதிர்ப்பு வந்து தடை விதித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. "

நன் றிதினகரன்[26-01-2013]
 
அமெரிக்காவில்  
மற்றும் சாலமன் ருஷ்டி ,சர்மிளா தாகூர்,ரஜினிகாந்த்,பாரதிராஜா ஆகியோரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் நடிகர்களுக்கு என்று சங்கம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு பிழை ப்பு நடத்துபவர்கள்தான்  வாயில் பிளாஸ்திரி [அம்மா ஜால்ரா என்ற கம்பெனி தயாரிப்பு ]போட்டுக்கொண்டு திரு,திரு வென்று முழித்துக்கொண்டு அடுத்ததாக" சங்கத்தின்  எந்த நிலத்தை குத்தைகைக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்? என்று யோசனையில் இருக்கிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?