அவதூறு வழக்குகள்

அவதூறு வழக்குகளில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோர், ஏப்ரல் மாதம்,தீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி, சென்னை, முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வார இதழ் ஒன்றில், தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி, "முரசொலி' பத்திரிகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கடிதம் வெளியானது. இதனால் , கருணாநிதி மீது, அவதூறு வழக்குகளை, ஒவ்வொரு அமைச்சராக,வரிசையாக  சென்னை முதன்மை நீதிமன்றத்தில்  தாக்கல் செய்து வந்தனர்.
இதேபோல் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "கேப்டன்' "டிவி'க்கு அளித்த பேட்டியில், ""மக்கள் பணத்தை பாழாக்கி, ஜெயலலிதாவின் விளம்பர வெறி; ஒரே நாளில் பல கோடி நாசம்,'' என, கூறியிருந்தார். இதற்காக, விஜயகாந்த் மீது, அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
.தமிழக காங்கிரஸ் கட்சியின், முன்னாள் தலைவர் இளங்கோவன், "புதிய தலைமுறை' "டிவி'யில், "நேர்பட பேசு' நிகழ்ச்சியில், ""உள்கட்டமைப்பு வசதிகளுக்கு, மத்திய அரசு நிதி தந்தும், தமிழகத்தில் பணிகள் நடக்கவில்லை; மாநில அரசு, 12 சதவீதம் கமிஷன் கேட்கிறது,'' என, கூறியிருந்தார். இதற்காக, இளங்கோவன் மீது, அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தவிர பல பே ச்சுகள்,கட்டுரைகள் ,செய்திகள் என கருணாநிதி மீது பல்வெறு அவதூறு வழக்குகள் தமிழக அரசால்  தொடரப்பட்டுள்ளன.
கடைசியாக "விஸ்வரூபம்"படத்திற்கு தடை விதித்தது தொடர்பாக பேசியதற்காக கருணாநிதி,விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கு போடுவதில் கின்னஸ் சாதனை செய்து விடுவார்கள் போலிருக்கிறது.
எதிர் கட்சிகள் என்றால் ஆளுங்கட்சியை-அதன் செயல் பாடுகளை விமர்சிப்பது இதுவரையிலான நடைமுறைதான்.
அதற்கு தக்க பதிலை தர இயலாமல் ,அல்லது பதில் இல்லாமல் தப்பித்திடத்  தான் இவ்வாறு அரசு மூலம் அவதூறுவழக்குகளை பேசுபவர்கள் மீதும்,எழுதுபவர்கள் மீதும்,செய்தி இதழ்கள் மீதும் போட்டு ஆளுங்கட்சி தாக்குகிறது போலும்.
கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் ஜெயலலிதா தாக்கி பேசாததா?வெளியிடாத அறிக்கைகளா?
அவற்றில் பத்தில் ஒரு பங்கு கூட இப்போது எதிர்கட்சியிலிருந்து கருணாநிதி பேசியதாக தெரியவில்லை.
கருணாநிதி ஆட்சியி விஜயகாந்த் அவரை தாக்காத தாக்கா?அதற்கு கருணாநிதி அவதூறு வழக்குகள்  ஜெ மேலும்,விஜயகாந்த் மேலும் போட்டிருந்தால் ஆயிரத்துக்கு மேலாகியிருக்கும்.
அரசும்-ஜெயலலிதாவும்-அமைச்சர்களும் இப்படி அவதூறு வழக்காகப் போ ட்டுக்கொண்டிருந்தால் எதிர் கட்சியினர் கூறும் குற்ற சாட்டுகள் அது பற்றி அறியாத  மக்கள் மத்தியில் பரவலாக பரவும்.அதற்கு பதிலளிக்க முடியாமல்தான் வழக்குகள் போட ப்படுகின்றன என்பதும் புரிந்து விடும் அபாயம் உள்ளது. 

 இதற்கு மேல் ஒன்று சொல்ல முடியவில்லை.அவதூறு நம்ம பக்கம் வந்திடக்கூடாது. பயம்தான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜூலியா பாஸ்ற்றனா 1834 -இல் மெக்சிகோ நாட்டில் பிறந்தவர் .இரு வேறு அபூர்வ வியாதிகளால் பாதிக்கப்பட்ட இவர் உடல் முழக்க முடி வளர்ந்து அவதி பட்டார்.மேலும் உடல் முகம் அமைப்பு குரங்கின் வடிவில் மாறியது.

 இதானால் இவரை குரங்குப்பெண்  என்று அழைத்தனர்.வேறு வழியின்றி இவர தனது உடலமைப்பை ஊர் ,ஊராக சென்று வேடிக்கை காண்பித்து அதன் மூலம் பிழைப்பை நடத்தினார்.
இவருக்கு திருமணமும் ஆனது.
ஒரு குழந்தை பிறந்து அது இளமையிலேயே இறந்தும் விட்டது.
ஜூலியாவும் தனது 26வது வயதிலேயே 1860ஆண்டில் மரணம் அடித்து விட்டார்.
இவரது உடலை பாதுகாப்பாக வைத்து வேடிக்கை காட்டியதுடன் சில ஆய்வுகளும் செய்து வந்தனர்.

கடைசியாக இப்போது 150 ஆண்டுகளுக்குப்பின் முறைப்படி ஜூலியா உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இனி அவர் உடலை  வேடிக்கை பார்க்க தோண்டி எடுக்க மாட்டார்கள் என்று  உறுதி அளிக்கப் பட்டுள்ளது.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தைவானை சேர்ந்த  " Polytron " நிறுவனம் முழுதாக ஒளி ஊடுருவிச்செல்லக்கூடிய  (Transparent)  தொழில்நுட்பத்தினை உட்புகுத்தி புதிய ஸ்மார்ட் செல்பேசிகளை  முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
2013ம் ஆண்டின் இறுதியில்  இச்செல்பேசிகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இசெல் பேசிகளின் மூலத்தளம்  தாய்ப்பலகை (Mother Board), மெமரி கார்ட், மற்றும் கமெரா ஆகிய துணைச்சாதனங்கள் மட்டும்  கண்ணுக்கு தெரிய க்கூடியதாகக் காணப்படும். எனவும் ஏனைய பகுதிகள் முற்றுமுழுதாக விசேட கண்ணாடியினால் ஆனதால் கண்ணுக்கு தெரியாது என Polytron நிறுவனம் தெரிவித்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?