"டோபல்" தேர்வு?



ஏறக்குறைய 50 வருடங்களாக, ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, டோபல் தேர்வு என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
 ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.
ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம். டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்குத் தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்களை எவை என்பதைப் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
மேலும், குடியேற்ற ஏஜென்சிகள்(United Kingdom Border Agency போன்றவை) மற்றும் உதவித்தொகை ஏஜென்சிகள்(Fulbright போன்றவை) ஆகியவற்றால், ஒரு மாணவரின் மொழித்திறனை சோதிக்க, இத்தேர்வு பயன்படுகிறது. டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் முழு பட்டியல் http://www.ets.org/Media/Tests/TOEFL/pdf/univo708.pdf என்ற வலைதளத்தில் கிடைக்கிறது.

உலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் பல்கலைகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது.
மொத்தம் 165க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவுசெய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.
சர்வதேச மதிப்பில் 165ம், இந்திய மதிப்பில் ரூ.7,500ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
 தேர்வுக்கு தயாராகும் வழிமுறை.
டோபல் தேர்வுக்கான கையேட்டின் 4ம் பதிப்பு, மாணவர்களுக்கு அதிக பயனளிக்கும் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கையேட்டில், 3 முழு நீள தேர்வுகளும், நூற்றுக்கணக்கான தேர்வு கேள்விகளும், essay தலைப்புகளும், பல ஆலோசனைகளும் அடங்கியுள்ளன. இதன்மூலம், இந்த கையேடு, மிகவும் பயனுள்ள ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கையேட்டை, ETS வடிவமைத்துள்ளது. ETS என்பது டோபல் தேர்வு மேம்படுத்துனர் ஆகும்.
டோபல் ப்ரோகிராமானது, எந்த பயிற்சி வகுப்புகளையும் தற்சமயம் வழங்கவில்லை. மாறாக, பலவிதமான தயாராதல் உபகரணங்களை வழங்குகிறது. இந்த தயாராதல் உபகரணங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு ;

இந்தியாவில், மூன்றாவது ஆண்டாக, டோபல் உதவித்தொகை ப்ரோகிராமை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2013 டோபல் உதவித்தொகை ப்ரோகிராம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
கடந்த நவம்பர் மாதம், TOEFL iBT வாசித்தல் பகுதியானது, சுருக்கப்பட்டது. இதன்மூலம், அப்பகுதியானது, 5 பத்திகளுக்கு பதில், 4 பத்திகளையேக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து ரீடிங் பத்திகள் மற்றும் கேள்விகள், மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, மாணவர்கள் தங்களை சிறப்பாக தயார் செய்துகொள்ள முடியும்.
இவைத்தவிர, ஒரு கேள்வியை விட்டுவிட்டு, அடுத்தவற்றுக்கு சென்று, பின்னர் மீண்டும் விடுபட்டவற்றுக்கு விடையளிக்க முடியும் மற்றும் தங்களின் பதிலையும் மாற்ற முடியும். இந்த மாற்றம், தேர்வர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. மேலும், மதிப்பெண்களை, எலக்ட்ரானிக் முறையில், 10 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும்.
IELTS-Pearson Test of English = டோபல் தேர்வு மாறுபாடு ?
டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் summarising passage போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, testing மற்றும் marking process போன்ற செயல்பாடுகளை தனிப்படுத்துகிறது. இதன்மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதிசெய்யப்படுகிறது.
மதிப்பெண் செயல்முறையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரேமாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான rater -களை பயன்படுத்துகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவுசெய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.
இத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் automated மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன்மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.
ஒரு மாணவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்து, டோபல் தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட TOEFL India customer support centre உங்களுக்கு துணை புரியும். தொலைபேசி வாயிலாக, திங்கள் முதல் வெள்ளி வரையில், காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அதற்கான இலவச எண் 000-800-100-3780.
 TOEFL support4India@ets.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவைத்தவிர, இந்திய மாணவர்களுக்கு உதவ, TOEFL program resource centre என்ற மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை 919711237111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:தினமலர். 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சவுக்கின்  கேள்வி இது.
"விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட்டால் வன்முறை ஏற்படும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று வார்த்தைக்கு வார்த்தை, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும், வன்முறையாளர்கள், சட்டத்தை கையில் எடுப்பவர்கள் என்று கிட்டத்தட்ட சமூகவிரோதிகள் போல சித்தரித்த ஜெயலலிதாவை கண்டிக்க வேண்டிய இஸ்லாமியர்கள், அவருக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் வன்முறையாளர்கள் அல்ல... அவர்கள் அமைதியை விரும்புவபர்கள் என்று நீதிபதி வெங்கட்ராமன் வழக்கு விசாரணையின்போது பல முறை சொன்னார். ஆனால் ஜெயலலிதாவோ, வன்முறை ஏற்படும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை, எங்களை அப்படிச் சொல்லியது தவறு என்று ஜெயலலிதாவைக் கண்டிக்க ஒரு இஸ்லாமிய அமைப்பும் முன்வராதது, எதை உணர்த்துகிறது ?"
   -"சவுக்கு "தளத்தில் இருந்து 
நியாயம்தானே.இசுலாமிய தலைவர்கள் இதற்கு என்ன பத்தி கூறுகிறார்கள். 
 ------------------------------------------------------------------------------------
வருகிறது புதிய பாடத்திட்டம். 
தற்போதுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றி, அடுத்தாண்டு முதல் புதிய பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 அதற்கான மாதிரி பாடதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களுடன் கருத்துகள் கேட்க கூட்டம் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேல்நிலைப் பள்ளிகளில்  கூட்டம் நடத்தி கருத்துக்கள் கேட்கப்படுகின்றன.

 இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மனையியல், ஊட்டசத்து, கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கருத்துகள் கேட்கப்பட்டுவருகின்றன.
மாதிரி பாடதிட்டத்தை கல்வியாளர்கள் படித்து பார்த்து, அதில் சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள், நீக்கப்பட வேண்டிய பகுதிகளை குறிப்பெடுத்து கொடுத்து வருகின்றனர். கல்வியாளர்கள் கொடுக்கும் குறிப்புகளை கொண்டு, வரைவு பாட திட்டம் உருவாக்கப்பட்டு, அவற்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், புள்ளியியல், வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், இந்திய பண்பாடு, கலாச்சாரம், கணக்கு பதிவியல், வணிகவியல், சிறப்பு தமிழ், புவியியல் ஆகிய பாடங்களுக்கு கருத்து கேட்கப்படுகிறது.
விரைவில் பாடத்திட்டங்கள் மாறலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈரானில் இசுலாமிய குழுக்களிடையே நடந்த மோதலில் ஆசிட் வீசப்பட்ட பெண்ணும்-குழந்தையும்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?