கண்டிப்பான அன்பு வேண்டுகோள்...,



நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர் கமல் எழுதி இயக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான எதிர்ப்பு ஆரம்பம் முதலே கடுமையாக இருந்துவரும் நிலையில்,தடை பல கடந்து பிப்-7ம் தேதி வெளிவரம்  நிலையில் தெருத்தெருவாக விஸ்வரூபம் திரைப்பட சிடியை பத்து ரூபாய்க்கும்,ஐந்து ரூபாய்க்கும் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.
வழக்கமாக வெறும் டப்பா படத்தை கூட 40அல்லது 50 என்று விற்கும் நேரம் விஸ்வரூபம் சிடியை வெறும் 5,10 க்கு விற்பது மிகப்பெரிய சதி இதில் கலந்திருப்பதாக தெரிகிறது.

இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சென்சார் செய்யப்படாத சி.டி.,என்று வேறு சொல்லி கொடுக்கின்றனர். சி.டி.,கொடுப்பவர்கள் பணத்தை குறிவைத்து கொடுக்கவில்லை, இது பலருக்கும் போய்ச்சேரவேண்டும் தியேட்டருக்கு வருபவர்கள் கூட்டத்தை குறைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருந்துள்ளது.

இந்த படம் வெளியாவது தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும் நான் ஒரு சொத்தை இழந்துகொண்டிருக்கிறேன் என்று கமல் உருக்கமாக சொன்னபிறகும் கூட திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக செயல்பட்ட குழு - திரைப்படம் வெளிவந்தாலும் அது ஒடக்கூடாது என்பதற்காக இந்த மட்டமான காரியங்களில் இறங்கியுள்ளனர்   என்பதில் சந்தேகம் இல்லை.
பவர்ஸ்டார் நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளிவந்து பல நாளான பிறகும் பொலிசார் அப்படத்தின் திருட்டு  சி.டி.,யை பிடித்துக்கொண்டு  பத்திரிகையில் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கண்எதிரே இன்னும் வெளிவராத விஸ்வரூபம் பட சி.டி.தெருத்தெருவாக சும்மா கொடுப்பது போல் 5க்கும்,10க்கும் விற்பதை  வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவையும் தாண்டிதான்  தியேட்டர்களில் படம் ஒட  வேண்டிய கட்டாயம்.
ஆனால் இப்படம் திரையங்குகளில் பார்த்தால்தான் படம் பார்த்த உணர்வைத்தரும் காரணம்.அதன் ஒலி -ஒளி  அமைப்பு.மற்றும் பிரமாண்டம்.
அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கை நிர்மூலமாக்கும் பயங்கர வெடிகுண்டை, வெடிக்கவிடாமல் தடுக்க ,உயிரை பணயம்வைத்து போராடும் வீர,தீரமிக்க இந்தியனின் கதைதான் விஸ்வரூபம். கதையும்,கதை சொல்லும் பாணியும் மிக ஹைடெக்காக இருக்கிறது.  
கதக் நடன கலைஞராக கமல் வரும்காட்சி,எதிரிகள் முகாமில் நடத்தும் சண்டைக்காட்சி ஆகிய இரண்டு காட்சிகளுக்காகவே   கமல் ரசிகர்கள் இந்த படத்தை பல முறை பார்ப்பார்கள்.
படத்தில் ஆன்ட்ரியா ஒருமுறை சொல்வார்.
  இங்கே எல்லாமே டபுள் ரோல்தான் என்று. 
அதை இங்கேயுள்ள ஆளுங்கட்சியினர் செய்வது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
முன்பு  "முதல்வன்"திரைப்படம் மதுரையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் இலவசமாகவும்,5,10க்கும் விற்கப்பட்டது.காரணம் அப்போதைய அஞ்சாநேஞ்ச அரசியல் .
அதே குழுவினர்  உள்குத்தாக  உதயநிதி ஸ்டாலின் ஒ.க,ஒ.க. படத்தின் சிடியை ஒவ்வொரு வீடாக இலவசமாக கொடுத்தனர்.
ஆனால்  அந்த இரண்டு படங்களுமே திரையரங்குகளில் ஓடின.
இலவச சிடி.அந்த படங்களின் விளம்பரமாக அமைந்து விட்டது.கமல்ஹாசன் ஹாலிவுட் தரத்தில் அல்ல ஹாலிவுட் படமாகவே எடுத்து இருக்கிறார்.வித்தியாசமான படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் .
இ றுதியாக -கண்டிப்பான அன்பு  வேண்டுகோள் இந்த படத்தை பார்ப்பவர்கள் தயவுசெய்து தியேட்டரில்தான் போய் பார்ப்பேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.
அது கமல்ஹாசன்  போன்ற வித்தியாசமான கலைஞனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல உலகத்தரத்திற்கு தமிழ் படம் போவதற்கும் செய்யக்கூடிய உதவியாகும்.
அது மட்டுமல்ல திரைப்படங்களில் அரசியல் செய்வோருக்கும்-கலாச்சார தீவிரவாதத்துக்கும் எதிராக மக்கள் இருப்பதை உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்தும். 

-------------------------------------------------------------------------------------------------
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?