இதற்கு பெயரும் ஆப்பு.



ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ல் நடந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனியாக விசாரணை நடத்துகிறது.
இதன் தலைவராக காங்கிரசை சேர்ந்த பி.சி.சாக்கோ இருக்கிறார். காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி எம்.பி.க்கள் இந்த கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கூட்டுக்குழுவின் முன், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், தற்போது அட்டர்னி ஜெனரலாகவும் உள்ள வாகன்வதி சமீபத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

 அப்போது ‘‘2ஜி தொடர்பான ஒரு பத்திரிகை செய்தி குறிப்பில் இருந்த அறிக்கையின் ஒரு பாராவை ஆ.ராசா நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறு பேனாவால் சில வரிகளை எழுதியிருக்கிறார். இதன் மூலம் அவருடைய செயலுக்கு நான் உடன்பட்டது போன்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறார்' என்று கூறினார்.
 அவர் கூறியது முற்றிலும் 2ஜி முறைகேடு நடைபெற்றதற்கு ஆ.ராசாவே  பொறுப்பு என்பது போல் இருந்தது.
ஏற்கனவே  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போதுதான் அவர்பிணையில்  வெளி வந்துள்ளார்.

அவர் விசாரணை நடக்கும் போதெல்லாம் இந்த விவகாரத்துக்கு நான் பொறுப்பல்ல நிதியமைச்சர் ப.சிதம்பரம்,பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வழிகாட்டலில் அவர்களுக்கு தெரிவித்தே நடவடிக்கைகள் எடுத்து ஈழம் விடப்பட்டது.அதனால் இதில் அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கூறிவந்தார்.ஆனால் சிபிஐ மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் இவர்களை விசாரிக்க மறுத்ததுடன்,அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என தன்னிச்சையாக நற்சான்று வழங்கி அவர்களை காப்பாற்றி வந்தது.
இப்போது தன்னை மட்டுமே பலிகடா ஆக்குவதால் ,வாகன்வதி சாட்சியம் தன்னை மட்டுமே குற்றம் சாட்டுவதால் தனது தரப்பை தெரிவிப்பதில் ஆ.ராசா முனைப்பு காட்டுகிறார்.
 இதற்கு பதில் அளிப்பதற்காக தன்னையும் பாராளுமன்ற கூட்டுக்குழு முன் சாட்சியம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆ.ராசா வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டு தலைவர் பி.சி.சாக்கோவுக்கு கடிதம் அனுப்பினார். பின்னர் சபாநாயகர் மீரா குமாருக்கும் ஆ.ராசா கடிதம் எழுதி இருந்தார்.

அதில் ‘‘இந்த விவகாரத்தில் உண்மைகள் அனைத்தும் அவசரமாகவும், ஒரு சார்பாகவும், தவறான விசாரணை முறைகளாலும் நசுக்கப்பட்டுள்ளன. எனவே பாராளுமன்ற கூட்டுக்குழு முன் நான் சாட்சியம் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

சபாநாயகர் மீராகுமார் இந்த கடிதத்தை கூட்டுக் குழு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். இது பற்றி கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில், ‘‘குழுவின் மற்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்ட பிறகே ஆ.ராசாவை சாட்சியம் அளிக்க அழைப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
 ஆ.ராசா கூட்டுக்குழு முன்பு தனது தரப்பை கூற விட்டால் அது சோனியா,மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் போன்ற மலை முழங்கி மகாதேவன்களுக்கு  ஆபத்தை தந்து விடும்.அவர்களின் முகமூடிகள் கழன்று விடும்.பலிகடா ஆ.ராசா.தப்பிவிடுவார்.காங்கிரசு கதர்சட்டைகள் மாட்டிக்கொள்வார்கள் .
எனவே இதுவரை ஆ.ராசாவுக்கு சாட்சியம் அளிக்க அனுமதி கிடைக்கவில்லை.
இந்த மாத இறுதிக்குள் கூட்டுக்குழு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.
பொறுத்து பார்த்த ஆ.ராசா கடைசியில் தனது காந்திய ஆயுதத்தாலே காங்கிரசின் மீது தாக்குதல் துவக்கி விட்டார்.
  "தன்னை சாட்சியம் அளிக்க அனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தின் 1-வது வாசல்  காந்தி சிலையின் அடியில் உண்ணாவிரதம் இருப்பேன் "
- என்று ஆ.ராசா அறிவித்துள்ளார்.
இது போல் நடக்கலாம்.ஆ.ராசா சாட்சியத்தை காங்கிரசு தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.என்றுதான் சுப்பிரமணியன் சுவாமி "ராசா உயிருக்கு ஆபத்து.அவருக்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.திகாரில் இருப்பதே நல்லது "என்று முன்பு கூறியிருந்தார்.ராசா சாட்சியத்தை காங்கிரசு தலைமை விரும்பாது.அதை எப்பாடு பட்டாவது தடுக்கப் பார்க்கும்.
ஆ.ராசா இப்போது தனது கட்சியின் ஆலோசனையின் பேரிலே இந்த உண்ணா விரதத்தை ஆரம்பிப்பார் என்று தெரிகிறது.
இது அன்னை சோனியா,வருங்கால பிரதமர் ராகுல் காந்தி,தற்பொதைய பிரதமர் மண் மோகன் சிங்,நிதியமைசர் ப.சிதம்பரம்  போன்றோர்களுக்கு வைக்கப்படும் ஆப்பு.
கருணாநிதி பொறுத்தது போதும் என  பொங்கி எழ தீர்மானித்து விட்டார் போல் தெரிகிறது.


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?