"வியர்வை "சிந்த எண்ணியவை

ரொம்ப நாட்களுக்குப்பின்னர்  நேற்று ஊர்  மக்கள்    ஒன்று சேர்ந்து பேருந்துகளை சிறை பிடித்துள்ளனர்.
அதிகாரிகளும்-காவல்துறையினரும் வந்து அதை வழக்கமான் பேச்சு வார்த்தைகளை நடத்தி பேருந்துகளை விடுவித்துள்ளனர்.
சிறை பிடிக்க காரணம் .18 மணி நேர மின்தடைதான் .இலங்கை பிரச்னையை முடக்கி விடும் வலிமை வாய்ந்ததாக மீண்டும் வந்துள்ளது.சிறை பிடித்த ஊரில் ஒன்றரை நாட்களாக மின்சாரம் தலையை காட்டவில்லையாம்.
இப்போதுதான் கோடை தலையை காட்டுகிறது.அதற்குள் தமிழகம் எங்கும் மின்தடை நேரம் 12 முதல் 18 மணி நேரம் என்றாகி விட்டது.
இன்னமும் காலமிருக்கிறதே .
வரும் வெயிற்கால இரவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது.
ஆனால் இதை கண்டு தமிழக அரசு மிரளவில்லை என்பதோடு.அதை பற்றிய கவலையும் கொண்டதாகவோ ,அதை தீர்க்க வழி செய்வதாகவோ தெரியவில்லை.
இந்த வரவு-செலவு அறிகையில் கூட  அத ற்காக ,மின் உற்பத்திக்கு புதிய திட்டங்களுக்காக ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை.
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் நடக்கும் மின்தடை பற்றியோ,மக்கள் படும் அவதியை பற்றியோ ,அதனால் எழும் போராட்டங்களை பற்றியோ இதுவரை பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
ஒரு வேளை தமிழகத்தில்  மின்தடை இருப்பதே அல்லது மின் வெட்டு இவ்வளவு கொடுமையாக மக்களை வியர்வை சிந்த துன்பப்பட வைப்பதையும் ,அதனால் பலர் வேலையை இழந்திருப்பதுமே அவருக்குத் தெரியாதோ?
அவர்தான் தான் செய்தித்தாட்களையே  படிப்பதில்லை என்று பெருமையாக சொல்லியிருக்கிறாரே. அப்படி அவர் தவறி படிக்கும் செய்திதா ட்களான தினமலர்,தினமணி களில் இந்த தடை பற்றிய செய்திகள் அதிகமாக தலை காட்டுவதில்லையே.
முன்பு மைனாரிட்டிக்காரர்கள் ஆட்சிகாலத்தில் காலை இரண்டு மணிநேரம் மின்தடை சொன்ன காலத்தில் வந்து சென்றதுக்கு மக்கள் எழுப்பிய போர் குரல் இப்போது மங்கி ஒலிப்பதும் காரணமாக இருக்கலாம்.
ஆற்காடு வீராசாமி என்றால் மின்துறை அமைச்சர் என்று ஊரெல்லாம் தெரிந்து அவரை திட்டியவர்கள் ,அன்றைய முதல்வரையும்  திட்டியவர்கள் இன்று காணாமல் போனதுக்கு காரணம்  தினம் மாறும் அமைச்சரவையில் இன்று மின்துறை அமைச்சர் யார் என்று திட்ட தெரியாமல் விழிப்பது கூட காரணமாக இருக்குமோ?
ஜெயலலிதா ஆட்சியில் ஏறியதும்  கூறியவைகளில் ஒன்று."வெளி மாநிலங்களில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி கருவூலத்தையே  காலி செய்து விட்டார்.மைனாரிட்டி முதல்வர் கருணாநிதி.அதில் ஊழல் நடந்திருக்கலாம்."என்பது.
இப்போது இன்றைய நிலவரப்படி மின்துறை அமைச்சராக இருப்பவர் நத்தம் விசுவநாதன் [என்று நினைக்கிறேன் ]கூறியதாக செய்தி தாளில் வெளியான செய்தி "அரசு மத்திய அரசிலும்,வெளி மாநிலங்களிலும் அதிக விலையில் மின்சாரம் வாங்கி இந்த மின்தடையை சரி செய்ய எண்ணுகிறது.ஆனால் மின்சாரம் கொண்டு வர மின் தடம் வழி அமைக்கப்படவில்லை.விரைவில் சரி செய்ய திட்டமிட்டுள்ளோம்.அப்போதும் திட்டம் மட்டும்தான் போட்டுள்ளார்களா?சரி செய்ய ஆரம்பிக்க வில்லையா?
இன்று மின்சாரம் கொண்டு வர தடம் இல்லை என்கிறார் மின் அமைச்சர் .அப்படி என்றால் கருணாநிதி அவர் ஆட்சிகாலத்தில் முறைகேடாக அதிக விலையில் வெளியெ வாங்கி மின்சாரத்தை எப்படி தமிழகத்திற்கு கொண்டு வந்து ஊழல் செய்தார்?
கண்டெய்னர் லாரிகளிலா?பெட்ரோல் டாங்கர் போன்ற லாரிகளிலா?
எப்படியோ அடுத்த தேர்தல் நெருங்கும் வரை இப்படியே சமாளித்து கடைசி நேரங்களில் மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்கி இந்த ஏமாளி மக்களிடம் வாக்குகளை பிடுங்க்கிக்கொள்ளலாம் என்ற ஒரே நோக்கம்தான் இன்றைய ஆட்சியாளர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.

மின் உற்பத்திக்கு மைனாரிட்டி கருணாநிதி ஆரம்பித்த திட்டங்கள் 14 வரை இருப்பதாகவும் அதில் இப்போது மூன்று திட்டங்கள் செயல்படுவதால்தான் கொஞ்சம் மின்தடை குறைகிறது.
மற்றவற்றை இந்த ஆட்சியாளர்கள் கருணாநிதி மீதுள்ள தீண்டாமையால் ஒதுக்கி குப்பையில் போட்டு விட்டதாகவும் தெரிகிறது.இப்போது செயல் படும் திட்டங்கள் 95% முடிந்ததால் வேறு  வழி  இல்லாமல் செயல்படுகிறது என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிகிறது.
 மத்திய அரசுடன் இணைந்து உடன் குடியில் செயல் பட வெண்டிய திட்டத்தை ஆட்சிக்கு வந்த உடன் நிறுத்தி தமிழக  அரசு மட்டும் செயல்படுத்தும் என்றும் அதற்கு 300 கோடிகள் ஒதுக்கப் படும்   என்று கூறிவிட்டு இன்றுவரை இரண்டாண்டுகளாக ஒரு பைசா கூட ஒதுக்காததும்.உடன் குடியில் இந்த திட்டத்துக்காக எடுக்கப்பட்ட-சீர் செய்ய ப் பட்ட நிலம் தற்போ து பழையபடி உடங்காடாக மாறி விட்டது என்றும் தெரிகிறது.இன்னும் சில நாட்களில் சிங்கம் புலி புகலிடமாக மாறி விடலா ம் என்றும் அஞ்சப்படுகிறது .
என்ன செய்தாலும் -எப்படி அடித்தாலும் இவர்கள் தாங்கிக் கொண்டு பழைய படியும் நமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்களிடம் மித மிஞ்சி இருக்கிறது.அது ஒரு வகையில் உண்மையும் கூட.பொடாவில் பிடித்து சிறையில் அடைத்து அசிங்கப்படுத்தினாலும்  தோட்டத்தின் வாசலில் பூச்செண்டுடன் நிற்பவர்கள்  நிறைந்த "வை"யம்தானே இது.
இரவுமுழுக்க  மின்தடையால் வியர்வை சிந்த  எண்ணியவை [மின்தடை நேரத்தையும்தான்.]
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?