"தூங்காதே தம்பி தூங்காதே...,!

"13-4-1930 "அன்று பிறந்தவர் மக்கள் கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.  அந்த மக்கள் கவியின் பிறந்த தினம் இன்று .
 வாழ்ந்தாலும் இளமையைத்தாண்டாமல் மறைந்தாலும்.பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலகள் இன்றும் அவரின் பெருமையை-திறமையை சொல்லிக்கொண்டிருக்கிறது.
"தூங்காதே தம்பி தூங்காதே "பாடல் வாழ்வின் முன்னேற்றத்தை எப்படி  எதிர் கொள்ளவேண்டும் என்று சொல்லியது.'சின்னப் பயலே ,சின்னப் பயலே சேதி கேளடா "
பாடல் இளம்தலைமுறையினர் வாழ்வுக்கு வழி காட்டியது.மூட நம்பிக்கைகளை தூக்கி எறிந்து விட்டு வெற்றி நடை போட செய்தது.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்களை தனது படத்தில் தவறாமல் இடம் பெறச்செய்து பெருமை தேடிக்கொண்டார் அன்றைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.


இனி - மதுக்கூர் இராமலிங்கம் பட்டுக்கோட்டையார் பற்றி எழுதியவை.
"1930ம் ஆண்டு பிறந்த அவர் 1959ம் ஆண்டில் இயற்கை எய்தினார். வாழ்ந்தது என்னவோ 29  வயதுவரைதான்.
அதற்குள் வறுமையின் காரணமாக 21 வேலைகளை பார்த்துள்ளார்.
 1951ம் ஆண்டு ‘படித்த பெண்’ என்ற திரைப்படத் திற்கு முதன்முதலாக பாட்டு எழுதி னார். திரையுலகில் இவர் பணியாற் றிய காலம் ஒன்பது ஆண்டுகள் தான். எழுதிய பாடல்கள் இரு நூறுக்கும் குறைவுதான்.
ஆனாலும் இன்று வெள்ளமென திரண்டுவரும் திரையிசைப்பாடல்களுக்கு மத்தியில் அவரது பாடல்கள் தனித்த இடத்தை பிடித்துள்ளன.
எதையும் தாங்கும் இதயம் என்ற படத்தில் “சின்ன சிறு சிட்டுகளேசிங்காரப் பறவைகளேதெம்மாங்கு குயில்களேசிவந்த மூக்கு கிளிகளேதேனெடுக்கும் வண்டுகளே ஓடிவாங்கநா சேதி ஒன்னு சொல்லப்போறேன் சீக்கிரம் வந்திடுங்க”என்று பறவைகளையும் வண்டு களையும் அழைத்து அவர் கூறும் செய்தி மனிதகுலம் மறக்கக் கூடாதது.ஓங்கி வளரும் மூங்கில் மரம்ஒண்ணேயொன்னு புடிச்சுருக்குஒழுங்காக குறுக்கிட்டுகௌகௌயா வெடிச்சிருக்குஒட்டாம ஒதுங்கி நின்னா உயர முடியுமா?எதிலும் ஒத்துமை களஞ்சதுன்னா வளர முடியுமா?என்று ஒற்றுமை கீதம் பாடிய கவி ஞர் அவர்.
 ஒருநாள் கவிஞர் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருக்கும் போது சாலையில் பள்ளம் ஒன்று வெட்டப் பட்டு எச்சரிப்பதற்காக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருக்கிறது. பொது வுடைமை இயக்க கவிஞரான அவர், எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வு இருக்கிறதோ அங்கெல்லாம் செங் கொடி பறக்கும் என்று அந்த இடத்தி லேயே ஒரு பாடலையும் பாடியிருக் கிறார்.“போக்குவரவை எச்சரிக்கும் செங்கொடிஅங்கே ரோட்டின் ஓரம் காற்றில் ஆட பாருங்கள்!பழுதுபார்க்கும் தொழிலாளரைப் பாருங்கள்ஏற்றத்தாழ்வை இருக்கும் இடம் எங்குமேமாற்றம் காணவே பறக்கும் செங்கொடி”என்று பாடியிருக்கிறார்.
சக்கரவர்த்தி திருமகள் படத் தில் வரும் ‘உறங்கையிலேயே பானை களை உருட்டுவது பூனை குணம்’ என்ற பாடலில் முதலில் “குத்துக் கல்லை தெய்வம் என்று சொன் னால் - நம்பி ஒத்துக்கொள்ளும் மூடருக்கு முன்னால் உளறி என்ன கதறி என்ன தோழா” என்றுதான் மக்கள் கவிஞர் எழுதிக் கொடுத்தி ருக்கிறார்.
பிறகு தயாரிப்பாளர் கேட் டுக் கொண்டதற்கேற்ப “உப்புக் கல்லை வைரம் என்று சொன் னால்” என்று வரிகளை மாற்றி எழுதிக்கொடுத்திருக்கிறார். அர்த் தம் என்னவோ ஒன்றுதான். நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சும்மா கிடந்த நிலத்தை கொத்தி’ என்ற பாடலை கவிஞர் ஏற்கெனவே நாடகத்திற் காக எழுதிக்கொடுத்திருக்கிறார். அதில் ‘மாடா உழைச்சவன் - வீட் டினிலே பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்?’ என்ற கேள்விக்கு, ‘அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே சேர்வதனால் வந்த தொல்லையடி’ என்று இடம்பெற் றுள்ளது. ஆனால் திரைப்படத்தில் வரும்போது, ‘அவன் தேடிய செல் வங்கள் வேறு இடத்தினில் சேர்வத னால் வரும் தொல்லையடி’ என்று மாற்றப்பட்டுவிட்டது.
திரைத்துறையில் பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில்தான் அவர் பணியாற்ற வேண்டியிருந்தது. ஆனாலும் கூட கடவுள் வாழ்த்துப் பாடலிலும் ஏழைகளை பாடியவர் அவர்.
கல்யாணப் பரிசு படத்தில் தேனீர் விற்பவர் பாடுவதுபோல ஒரு காட்சி. பட்டுக்கோட்டை இப்படி ஆரம்பித்தார். ‘பாட்டாளித் தோழ ருக்கும், பல தொழிலாளருக்கும் கூட்டாளியாயிருக்கும் டீ’ போகிற போக்கில் “பலருக்கு சாப்பாடு கூட இந்த டீ “ என்று போட்டாரே ஒரு போடு அதுதான் பட்டுக்கோட்டை.ஒன்றுபட்டால் உண்டு என்ற படத்திலும் டீயைப் பற்றி ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
ஆனால் இதில் சாயா என்று வரும். “கொழுந்து தேயிலே குளிரும் பனியிலே, கொழுக் கும் மழையிலே வெளஞ்சது- குறை ஞ்ச வெலையிலே மிகுந்த சுவை யிலே குணமும் மணமும் நிறைஞ் சது” என்று எழுதியிருக்கிறார்.
தாயத்து என்பது பில்லி சூனியம் மூடநம்பிக்கையை சார்ந்தது. ஆனால் பட்டுக்கோட்டையின் தாயத்து பகுத்தறிவை வளர்த்தது. வசியம் பண்ண தாயத்து உண்டா என்று கேட்பவரிடம் உடம்ப வளைத்து உழைத்து பாரு என்றும், பெண்ணை மயக்க தாயத்து உண்டா என்று கேட்பவருக்கு கண்ணும், கருத் துமே பெண்ணை கவர்ந்திடும் என்று சொன்னவர் பட்டுக்கோட்டை.
 தாலி கட்டாயம் என்று சொன் னால் இரண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் என்ற மக்கள் கவிஞர், உலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக் கணும் என்று எழுதியிருக்கிறார். காதலை பாடினாலும் அதில் சமத்துவம் நாடிய உள்ளம் அவருக் குச் சொந்தம். ‘நான் வேண்டுமா? இல்லை தேன் வேண்டுமா?’ என்று மக்கள் கவிஞர் தமிழ் மக்களை கேட்ட போது, மக்கள் நீதான் வேண் டுமென்று அவரை கொண்டாடி னார்கள். சாதாரண டூரிங் கொட்ட கையில் ஒரு பாடலாசிரியரின் பெயர் போட்டபோது அவருக்குத்தான் முதன் முதலாக மக்கள் கைதட்டி னார்கள். அந்த ஓசை இன்னமும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
இந்த நாள் பட்டுக்கோட்டையின் சார்பில் பாட்டுக்கோட்டை கட்டிய அவரின் எழுது கோலையும் அவரின் முற்போக்கான மக்கள் நல எண்ணங்களையும்  நினைவில் கொள்வோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
  • அய்யாவின் தமிழ்ப்புத்தாண்டு  "தை"யில்  மின்தடை [அதிக]இன்றி கொண்டாட முடிந்தது.
  • அம்மாவின்  தமிழ்ப்புத்தாண்டு  மின்தடை சித்திர[வதை]யிலேயே    பிறந்து கடுப்படிக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வெயில் தாக்குகிறதா?

அதிகமாக காய்கறிகள், கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
 கோடை காலத்தில் உடலில் உள்ள இடுக்குகளில் எல்லாம் வியர்வை சேர்ந்து, பாக்டீரியா உற்பத்தியாகும்.வியர்வை போக  கோடையில் தினமும் இரண்டு வேளை குளியுங்கள்.தண்ணீர் இல்லையே என்று சால்ஜாப்பு சொல்ல வேண்டாம் .
எல்லோரும் இருமுறைதான் வியர்வை போக குளிக்கச் சொல்லுகிறார்கள்.
 
 குளித்து முடித்ததும் முன்பு அணிந்த ஆடைகளையே மீண்டும் அணியாதீர்கள்.
  கோடைக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள்.
பருத்தி  ஆடைகளை அணியுங்கள்.கதர் கடையில் 200 ரூபாய்க்கு நல்ல சட்டை விற்கிறார்கள்.
கேலி செய்வார்களோ என்று சட்டை செய்யாமல் வாங்கி அணியுங்கள்.
 
 மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்தால் வியர்வை ஆடையிலேயே தங்கி, நாற்றமடிக்கும்.
எனவே தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்.உடல் வெப்பத்தை சரியாக வைப்பதுடன் நீர்க்கடுப்பு வராமல் தடுக்கும்.

வெயிலில் அலையும் போதோ அல்லது அலைந்து வீடு வந்த வுடனே  யே குளிர் பானங்களை குடிக்காதீர்கள் .கொஞ்சம் நேரம் கழித்து உடல் வீட்டின் வெப்பநிலைக்கு வந்தவுடன் அருந்தலாம்.
குளிர் பானம் என்றதும் கோகோ கோலோ ,பெப்சி க்கு போய் விடாதீர்கள்.எலுமிச்சை,நெல்லி சாறு ,போன்றவை உங்கள் உடலுக்கு நல்லது செய்யும்.ரசாயன சுவை நீர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் வேண்டாம்.
நீர் மோர் ,அதும் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது கண்கண்ட அமிர்தம் பழைய சோற்று நீர் சிறு வெங்காயத்துடன் அருந்துங்கள்.
உடலுக்கும்-மனதுக்கும் மகிழ்வாக உணர்வீர்கள்.வயிற்றையும் நிரப்பிவிடும்.
suran
கோடை வெப்பத்தை குறைத்திட இப்படத்தை பாருங்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?