மாணவர் பலி



மாணவர்களால் இப்போது ஆளுங்கட்சிகளுக்கு போதாத காலம் போலும் .
மேற்கு வங்க மாநிலத்தில்  மாணவர் சங்க தேர்தல் நடத்தும் முடிவினை மம்தா பானர்ஜி  அரசு தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தது.
 காரணம் அங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான SIF[இந்திய மாணவர் சங்கம்] வலுவாக உள்ளதும்திரினாமுல் கட்சியின் மாணவர் சங்கம் வலுவற்று இருப்பதும்தான்.
தேர்தல் நடத்தாதற்கு மாணவர்கள் சங்க கூட்டமைபினரிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதானால் நேற்று மாணவர்கள் கூட்டமைப்பினர் (எஸ்.எப்.ஐ.) சார்பில் கோல்கத்தாவில் பேரணி நடந்தது.
அப்போது மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டும் என கோரியும்,மம்தா பானர்ஜியை கண்டித்தும்  குரல்கள்  எழுப்பினர்.
 திடீரென காவல்துறையினர் மாணவர்கள்  மீது தாக்குதல் நடத்தினர் .அவர்களுடன் மம்தா கட்சியினர்களும் சேர்ந்து தாக்கினார்கள் .
கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கியதில்  சுதீப்தா குப்தா  என்ற கல்லூரி மாணவர் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த அவரை உடனே மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்க்காமல் கைது செய்தனராம்.அப்போது அதிக ரத்தம் வெளியேறிய மாணவர் சுதீப்தா மயங்கி விட்டார் .சுய நினைவு இழந்த பின்னரே காவல்துறையினர் அவரை  எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்ல அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டா ர்.
 மாணவர் சுதீப்தா குப்தாஇறந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது.

 சம்பவம் நடந்த போது உடன் இருந்த  உடன் படிக்கும்  மாணவர் :-
" போலீசார் சுதீப்தா குப்தாவை தலையில் லத்தியால் தாக்கினர்.  பலத்தகாயத்துடன் ரத்தம்வடிந்து கொண்டிருக்கும் போதும் அவரை  போலீஸ் தங்கள் காவலில் தான் வைத்திருந்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதில் தாமதம் ஏற்பட்டதாலும்,பலத்த காய்த்தாலும்தான் சுதீப்தா இறந்து விட்டான்"
என்றார்.
                                   
இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி  மம்தாவின் சில தேவையற்ற கருத்தை கூறியுள்ளார்.அந்த கருத்திற்கு   மாணவன் சுதீபதாவின் தந்தையும் -எதிர்க்கட்சிகளும்  கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம்கொல்கத்தா வில்  பூதாகரமாக வெடித்துள்ளது. அங்கு மட்டுமின்றி மேற்கு வங்கம் முழக்க மாணவர்கள் கண்டனப்பேரணி மம்தா அரசுக்கு  எதிராக நடத்தி வருகின்றனர்.
மாணவர் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து டில்லியிலும்  மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையிலும் சில மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
இந்தியா முழுக்க மாணவ்ர்கள் போராட்டம் பரவி வருகிறது.திரினாமுல் ஆட்சிக்கு இது ஒரு தலை வலி யாக உள்ளது.
இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டின் முன்பு கட்சியினர், பொதுமக்கள் , மாணவர் அமைப்புகள் குவிந்து வருகின்றனர்.
மாணவர் இறந்தது குறித்து நீதி விசாரணை வேண்டும் என  மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மாணவர் இறந்தது குறித்து 'மனித உரிமை ஆணையம்'  விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
 
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இயேசு படமா?

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும், அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது. 14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இதில் காணப்படுகிறது.
1988ஆம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ஆம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தினர். 
 கார்பன் டேட்டிங் உள்பட பல நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முந்திய ஆய்வில் பயன்படுத்தப்பட்ட துணியின் பகுதி, கிழிசலை சரி செய்வதற்காக தைத்த ஒட்டுத் துணியாக இருந்திருக்க வேண்டுமென இந்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் ஜூலியோ கூறினார்.
" துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்,ஆனால் படம் பற்றி உறுதியாக சொல்ல முடியாது.வரையப்படிருக்கலாம்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுபற்றி கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது. இயேசுவின் உயிர்ப்பின் போது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டுமென்று கூறிவருகின்ற னர்.
அதாவது புகைப்படம் எடுக்கும்போது உருவாக்கும் ஒளி[பிளாஷ்]போல.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?