பலிகடா ஆக்கப்பட்டு விடுவோமோ?


suran

மிகப்பெரிய அளவிலான ஸ்பெக்ட்ரம் 2ஜி  ஊழல் அதைத் தொடர்ந்து வெளியான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு ஆகியவைகளால் மத்திய அரசுக்கும் காங்கிரசுக்கும்   நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி சி.பி.ஐ.யும், காங்கிரஸ் எம்.பி. பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனித்தனியாக விசாரித்து வருகிறது.
கூட்டுக்குழு முன் இப்போது குற்றவாளியாக கூறப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு சாட்சியம் அளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காதது மிகப்பெரிய முறைகேடு.யாரையோ காப்பாற்ற செய்யும் முயற்சிதான்.
 இதனால் தி.மு.க.- காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் கூட்டுக்குழு சாக்கோவுக்கு எதிராக பேசி வருகிறது.அவரை தலவைர் பதவியில் இருந்து நீக்கவும் கோருகின்றன.

இதற்கிடையே பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையின் ஒரு பகுதி பத்திரிகைகளில் வெளியானது. அதில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமருக்கும், நிதி மந்திரிக்கும் தொடர்பு இல்லை என்று ஒருதலைப்பட்சமாக கூறப்பட்டுள்ளது .
முழு அறிக்கை வெளியாகும் முன் காங்கிரஸ் தனக்கு சாதகமான பகுதியை மட்டும் முன்கூட்டியே பத்திரிகைகளுக்கு கசிய விட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதற்கு காரணமான பி.சி.சாக்கோவை கூட்டுக்குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இந்த நெருக்கடியால் கடந்த வாரம் நடைபெற இருந்த பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் மத்திய சட்ட மந்திரி அஸ்வின் குமார் தன கைப்பட சில  திருத்தங்கள் செய்ததாக தகவல் வெளியானது.
அதை சிபிஐ அதிகாரியும் ஒத்துக்கொண்டார்.
இந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள்பூதாகரமாக  கிளப்பி வருவதால் பாராளுமன்றம் நடைபெற முடியாமல் முடங்கி கிடக்கிறது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் நிலக்கரி சுரங்க விசாரணை தொடர்பான பிரமாணபத்திரம் ஒன்றை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதில் சுரங்க முறைகேடு விசாரணை அறிக்கை சட்ட மந்திரிக்கும், பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளது. இது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சனையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சட்டமந்திரி அஸ்வினி குமாரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
ஆனால் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என்று  வழக்கம் போல் பிரதமர் மன்மோகன்சிங்தெரிவித்துள்ளா ர்.

  பிரதமர், சட்ட மந்திரி ராஜினாமா செய்யும்வரை பாராளுன்றத்தை நடத்தவிட மாட்டோம் என்றும் பாரதீய ஜனதா எச்சரித்துள்ளது.

பாராளுமன்றம் செயல்பட முடியாத நிலை தொடர்ந்தால் நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும்.
 நிதி மசோதா இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவில்லை என்றால் மத்திய அரசு கவிழ்ந்து பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

மத்திய அரசின் நெருக்கடி பற்றி தேசியவாத காங்கிரசை சேர்ந்த மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் கூறுகையில், பாராளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் தொடர்ந்து பாராளுமன்றம் முடக்கப்பட்டு வருவதால் நிதி மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் முன்கூட்டியே தேர்தல் வருவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்றார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், 2013-ல் பாராளுமன்ற தேர்தல் வரும் சூழ்நிலை இருப்பதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா தனது கட்சி தேர்தலில் வெல்லும் வாய்ப்புகள் மக்கள் மத்தியில் குறைவதாக கவலை அடைந்துள்ளார். மேலும் சோனியாவுக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விவகாரத்தில் பி.சி.சாக்கோவுக்கு எதிராக பிரச்சினை எழுப்பும் எதிர்க்கட்சிகளை சமரசம் செய்துவிடலாம் என்று காங்கிரஸ் மேலிடம் இன்னமும்  நம்பி வரு கிறது.
 நிலக்கரி சுரங்க விவகாரத்தில் வருகிற 30-ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அப்போது சட்டமந்திரி அஸ்வினி குமாரின் செயலை நீதிமன்றம்  கண்டித்தால் அவரை பதவி விலகக்கோரும் எதிர்க்கட்சிகளின் வாதம் மேலும் வலுவடையும் என்று  தெரிகிறது.


 சி.பி.ஐ. தவறாக பயன்படுத்தப்பட் டு வருகிறது  என்ற எண்ணம் தற்பொது பொதுமக்களிடம் உண்டாகி விட்டது என்று காங்கிரஸ் நினைக்கிறது.2ஜி விவகாரத்திலும் சிபிஐ தவறான நடவடிக்கையை எடுத்துள்ளதுஅதற்கு சாக்கொவும்  துணையாக அறிக்கை தருகிறாருண்மை குற்றவாளிகள் மன்மோகன் சிங்க்சொநியாபசிதம்பரம்  தான் என்ற மனப்பான்மை மக்களிடம் உருவாக்கி வருவதை காங்கிரசு உண்ர்ந்து வருகிறது.ஆனால் சாக்கோ ,அஸ்வினிகுமார் பதவி விலகாவிட்டால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் சேர்த்து பிரச்சினையை உருவாக்கும்.
ஆனால் அஸ்வினிகுமார் ராஜினாமா செய்ய பிரதமர் ஒப்புக்கொள்ளாததால் என்ன முடிவு எடுப்பது என்ற தடுமாற்றத்தில் சோனியா உள்ளார்.
2ஜி,நிலக்கரி சுரங்க விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் சரியான முடிவு  எடுக்க முடியாமல் தள்ளாட  மன்மோகன்சிங்-சோனியா இடையே நிலவும் கருத்து வேறுபாடும் ஒரு  காரணம்.
அதற்கு தானும் சக அமைச்சர்களும் சோனியா-ராகுல் குடும்ப முறைகேடுகளுக்கும் ,ஊழல்களுக்கும்,அதிகார துர்பிரயோகங்களுக்கு  பலிகடா ஆக்கப்பட்டு விடுவோமோ? என்று பயம் மன்மோகன் சிங்குக்கு  வந்துள்ளதுதான்  காரணம்.
==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?