கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி


suran

"2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தயாரிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு  அறிக்கை முன்கூட்டியே வேண்டுமென்றே கசியவிட்டதற்கு  கண்டனம் தெரிவித்த  முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, இந்த விவகாரத்தில் நான் குற்றமற்றவன் என நிருபிப்பேன்" என கூறியுள்ளார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தி வந்தது. ஏறத்தாழ இறுதி கட்டத்தை, இந்தக் குழு அடைந்துள்ள நிலையில் விசாரணை அறிக்கை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
காரணம் விசாரணை ஒரு சார்பு நிலையிலேயே காங்கிரசுக்கு ஆதரவாக அக்கட்சியை சார்ந்த சாக்கொவால் தயாரிக்கப்பட்டுள்ளது பகிரங்கமாக தெரிகிறது.
மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் போன்றொருக்கு 2ஜியில் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதுபோல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.முற்றிலும் ஆ.ராசா தான் இக்குற்றம் புரிந்தவர் என்று தலைப்பா கட்டும் படி அறிக்கை உள்ளது.
ஆ.ராசா தனது பக்க நியாயங்களை சொல்ல பல முறை குழு தலைவர் சாக்கோவுக்கு வேண்டுகோள் விடுத்தும் அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை.பல கட்சியினரும் குழு உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டும் சாக்கோ ஆ.ராசாவை விசார்க்க மறுத்து விட்டார்.இதில் இருந்தே இந்த அறிக்கை உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே தயாரா கியுள்ளது தெரிகிறது.
suran
தப்பிக்க முடியுமா?
குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காமல் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது .
, சில நாட்களுக்கு முன் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கை விவரங்கள், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
"ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இல்லை. பிரதமரை, தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா தவறாக வழி நடத்தினார்' என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதனால், முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாமே, "கூட்டுக் குழுவின் அறிக்கை, எப்படி ஊடகங்களுக்கு கசிந்தன. வேண்டுமென்றே, காங்கிரஸ் இவ்வாறு செய்கிறது. பார்லிமென்ட் நடைமுறைகளை, காங்கிரஸ் அர்த்தமில்லாமல் செய்வது கண்டிக்கத்தக்கது' என கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா "எல்லா முடிவுகளையும், பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுத்தான் எடுத்தேன். எல்லா விவரங்களும் அவருக்கு தெரியும். எனது  200 பக்க ஆதாரங்கள் அடங்கிய வாக்குமூலத்தை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப உள்ளேன்.ஆனால் அதை அக்குழு கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறது.இது ஜனநாயக படுகொலை " என்றார். 
  ஜே.பி.சி., தலைவர் சாக்கோவுக்கு ராஜா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில்

"ஜே.பி.சி., அறிக்கை முன்கூட்டியே வெளியானதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஜே.பி.சி., முன்பு ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்பு தர வேண்டும். எனது நேரடி விளக்கத்தை கேட்காமல் வரைவு அறிக்கை தயாரித்திருப்பது சரியல்ல. வாகன்வதி அறிக்கையை இதுவரை தமக்கு தரப்பட வில்லை.
 நான் பிரதமரை தவறாக வழிநடத்தியிருந்தால், என்னை மீண்டும் அமைச்சராக நியமித்திருக்கமாட்டார். 2ஜி ஏலம் தொடர்பாக பிரதமர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை 2ஜி ஏலம் தொடர்பாக பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக  எனது வீடு, உறவினர்கள் வீடுகளில் சோதனை பல முறை நடந்துள்ளன.
 ஆனால் இதுவரை லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை. என் மீதான குற்றங்கள் தவறு என நிருபிப்பேன். ஜே.பி.சி.யில் ஏன் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை?.
எனது வி ளக்கத்தை கேட்டிருந்தால் வாதங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். இதில் இருக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறு. எனது நிலை வேறு அமைச்சருக்கு வரக்கூடாது. குற்றமற்றவன் என நிருபிபேன்.'"
என்று எழுதியுள்ளார்.
என்னை விட்டுடுங்களேன்.
ஆனால் சாக்கோ தனது காங்கரசு கட்சிக்கு ஆதரவான நிலையில் இருந்து விலக்கிக்கொள்வதாக தெரியவில்லை.மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் இருவரையும் மறைமுகமாக இவர்களை இயக்கியவர்களையும் காப்பாற்றும் முயற்சியில் பகிரங்கமாகவே செயல் படுகிறார்.
2ஜி யை பொறுத்தவரை விவகாரம் இப்போது மக்களவையில் அவையை ஒத்தி வைக்கும் அளவில் உள்ளது.
2ஜி விவகாரத்தில்ஆ.ராசா,திமுக போன்ற  மற்றவர்களை  மாட்டி விட நினைத்தவர்களே இப்போது மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி கதைதான் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?