ஸ்பாட் பிக்சிங்


'மேட் ச் பிக்சிங் " அடிக்கடி அடிபடும் வார்த்தை.
இப்போது  இந்த "ஸ்பாட் பிக்சிங்' பற்றி கொஞ்சம் விபரம்.
புக்கிகளின் உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட வீரர், குறிப்பிட்ட ஓவரில் "நோ-பால்; வைடு அல்லது பவுன்சர்' வீசுவது, அல்லது அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பர்.
பேட்ஸ்மேன்கள் என்றால்  சரியாக விளையாடாமல் விரைவில் அவுட்டாவது, பவுண்டரி, சிக்சர் அடிப்பது என, சூதாட்டத்தில் ஈடுபடுவர்.
 இதில், "மேட்ச் பிக்சிங்' போல, போட்டிகளின் முடிவு நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, ஏதாவது ஒரு ஓவரில் மட்டுமே தவறு நடக்கிறது.
 தங்களது செயலை செய்யும் முன், மைதானத்தில் அல்லது வேறிடத்தில் உட்கார்ந்து, தங்களை பார்த்துக் கொண்டிருக்கும் புக்கிகளுக்கு, ஏற்கனவே செய்யப்பட்ட முடிவின் படி, "சிக்னல்' கொடுக்கின்றனர்.இதற்காக, வீரர்கள் லட்சக்கணக்கில் பணம் பெறுகின்றனர்.
 கடந்த ஆண்டு, பிரீமியர் தொடரில் சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஷ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய, ஐந்து வீரர்கள் பிடிபட்டனர்.
 இப் போது  ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் சிக்கினர். ஆறாவது தொடரில் மட்டும், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, சூதாட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
 இந்த வகையில், 12 ஆட்டங்களில், சூதாட்டம் நடந்ததாக தெரிகிறது.
ஐ.பி.எல்., தொடரில், "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்தது. இவர்கள் லட்சக்கணக்கில், சூதாட்டக்காரர்களிடம், பணம் பெற்று வேண்டுமென்றே, "நோ-பால்' வீசியது, ரன்களை வாரி வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. ஆறாவது, ஐ.பி.எல்., என்ற இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடர் தற்போது நடக்கிறது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், கோல்கட்டா உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. மும்பையில் நேற்று முன் தினம், நடந்த லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் மும்பை, ராஜஸ்தானை, 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் அன்கித் சவான், தனது, 2வது ஓவரில், 13 ரன்களுக்கு மேல் கொடுத்து, "ஸ்பாட் பிக்சிங்' செய்துள்ளார். அதன் படி இவர், இந்த ஓவரில், 2 சிக்சர் உட்பட, 15 ரன்களை வழங்கியுள்ளார்.இந்த சூதாட்டத்துக்கு மூளையாக ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இருந்துள்ளார். இதன் பின்னணியில், "நிழல் உலக தாதா' தாவூத் இப்ராகிம் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, மும்பையில் ஸ்ரீசாந்த், அன்கித் சவான், சண்டிலா ஆகியோரை டில்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மொத்தம், 14 பேரை,மோசடி மற்றும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.
பிரிமியர் கிரிக்கெட் தொடர் துவங்கிய நாள் முதல், டில்லி சிறப்பு பிரிவு போலீசார் வீரர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமான, 70 தொலைபேசி அழைப்புகளின் உரையாடலை வைத்து, ஸ்ரீசாந்த், சவான், சண்டிலாவை பிடித்துள்ளனர்.இதுகுறித்து, ஆதாரங்களை வெளியிட்டு, டில்லி போலீஷ் கமிஷனர் நீரஜ் குமார் கூறியது:சூதாட்டம் குறித்து தகவல்களை பெற, வீரர்கள் மற்றும் புக்கிகள் இடையிலான, 100 மணி நேரத்துக்கும் அதிகமான போன் அழைப்புகள், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டன. புக்கிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் அதிகளவு ரன்களை விட்டுக்கொடுத்தனர். "டவலை' இடுப்பில் வைத்துக் கொள்வது, "பீல்டிங்' நிறுத்துவது போல தாமதம் செய்வது என, பலமுறைகளில் புக்கிகளுக்கு, "சிக்னல்' கொடுத்தனர்.போட்டி இடைவேளையின் போது, சிக்னல் எதுவும் தருகின்றனரா என, கண்காணிக்க போலீசார், குறிப்பிட்ட போட்டிகளின் போது மைதானத்துக்கு சென்று கவனித்தனர்.
கடைசியில் எல்லாம் சரியாக நடந்ததும், கைது செய்தோம்.மே 5ல் நடந்த போட்டியில் "பிக்சிங்' செய்ய சண்டிலாவுக்கு ரூ. 40 லட்சம் பேசப்பட்டது.
ஏற்கனவே ஒத்துக் கொண்டபடி, 14 ரன்கள் விட்டுத் தந்தார். ஆனால், குறிப்பிட்டபடி, புக்கியிடம், சிக்னல் தரவில்லை. இதனால், பணம் தரமுடியாது என்று புக்கிகள்வாதிட்டனர். கடைசியில் முன்பணமாக பெற்ற, 20 லட்சம் ரூபாயையும் திரும்பக் கொடுத்தார்.
பஞ்சாப் போட்டியில் முதல் ஓவரை ஸ்ரீசாந்த், சாதாரணமாக வீசினார். அடுத்த ஓவர் வீசும் போது, "டவலை' தன் இடுப்பில் வைத்து, புக்கிகளுக்கு சிக்னல் தந்தார். தவிர, களத்தில் பயிற்சி செய்வது போல நேரத்தை வீணடித்து, புக்கிகள் மற்றவர்களுடன், "பிக்சிங்' செய்ய நேரம் ஏற்படுத்தித் தந்தார்.மும்பை போட்டியில், சண்டிலா விளையாடவில்லை. இருப்பினும், அன்கித் சவானை இதில் ஈடுபடுத்தினார். 13 அல்லது அதற்கு மேல் ரன்கள் கொடுப்பதாக சம்மதித்த சவான், இதற்காக தன் கையில் கட்டியிருந்த, "பாண்டை' திருப்புவது போல, சைகை செய்து, "சிக்னல்' தந்தார்.இவ்விஷயத்தில், வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது.
கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா ஆகிய மூவரும்  ஐந்து நாட்கள்  காவலில் வைக்க ப்பட்டனர்.
கடந்த ஆண்டு நடந்த, ஐ.பி.எல்., தொடரில், ஐந்து வீரர்கள், 15 நாட்களுக்கு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதே போல, இந்த ஆண்டும், "ஸ்பாட் பிக்சிங்கில்' சிக்கியுள்ள, ஸ்ரீசாந்த், அன்கித் சவான், சண்டிலா ஆகியோரும், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும், ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்க, வாய்ப்பு உள்ளது. கோடி கணக்கானவர்கள்  தங்கள் மூளையை கழற்றி வைத்து விட்டு வெறித்தனமாக ரசிக்கும் இந்த கிரிக்கெட்  விளையாட்டில் இப்படி மோசம் செய்பவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
இவர்கள் வெற்றி பெற்றால் அரசு கோடிக்கணக்கில் வாரி வழங்குவதையும்.வீடுகள்,கார்கள் பரிசளிப்பதையும் உடனே தடை செய்ய வேண்டும். இது பொன்ற மோசடிக்காரர்கள் விளையாடவே கொடிகளில் பணம் பெறும் போது இது போன்ற மக்கள் வரிப்பணத்தில் பரிசுகள் அளிப்பது கண்டிக்கத்தக்கது.
 இந்த மோசடி விளையாட்டு கிரிக்கெட்டுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை ஹாக்கி,கபடி ,கால் பந்து போன்ற திறமை மிக்க விளையாட்டுகளை ஊக்கு விக்க பயன் படுத்தலாமே .

தகவல் உதவி&நன்றி :தினமலர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?