டி.எம்.செளந்தரராஜன்,



டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார்.
சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கால் தவறி விழுந்ததில், டி.எம்.எஸ்-க்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினார்.
சில நாள்களுக்கு முன்பு மீண்டும் டி.எம்.செளந்தரராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அவர்,  19-ஆம் தேதி வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாள்களில் அவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது.
 22-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் டி.எம்.எஸ். கலந்து கொண்டார்.
சென்னை மந்தைவெளியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் சில நாள்களாக டாக்டர்கள் அவரது வீட்டிற்கே வந்து சிகிச்சையளித்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் டி.எம்.எஸ்-க்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிற்பகல் 3.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
தனது வெண்கலக் குரலால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களை கட்டிப் போட்ட டி.எம்.செளந்தரராஜன் 1922-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.
 
1946-ஆம் ஆண்டில் "கிருஷ்ணவிஜயம்' என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து தனது முதல் பாடலைப் பாடினார் .
. அதன் பிறகு சில பாடல்களைப் பாடிய டி.எம்.எஸ்., 1954-ல் "தூக்கு தூக்கி' படத்தில் சிவாஜி கணேசனுக்காக பாடினார். சிவாஜி கணேசனே சொந்தமாக பாடியதைப் போன்ற பிரமிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது டி.எம்.எஸ்-ன் குரல்.
 மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற எம்.ஜி.ஆர்.கமல்ஹாசன், சிவாஜி, ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், என்.டி.ராமாராவ், ராஜ்குமார், நாகேஸ்வரராவ், ரவிசந்திரன், நாகேஷ், ரஞ்சன், ரஜினிகாந்த்,  உள்பட பல முன்னணி கதாநாயகர்களின் உதட்டசைவுக்கு உயிர் கொடுத்தவர் டி.எம்.செüந்தரராஜன்.
52 இசையமைப்பாளர்களின் இசையில் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
 அருணகிரிநாதர், பட்டினத்தார் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து நடிப்புத் துறையில் பிரவேசித்தார்.
ஆண்டுகள் பல கடந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களைப் பாடிய பெருமையைப் பெற்றவர் டி.எம்.எஸ்.
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்...', "அச்சம் என்பது மடமையடா', போன்ற காலத்தால் அழியாப் பாடல்களை பாடியுள்ளார்.

suran
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', "அழகென்ற சொல்லுக்கு முருகா...', போன்ற பாடல்கள்.
வயோதிகம் காரணமாக நீண்ட நாள்கள் பாடாமல் இருந்த டி.எம்.எஸ். 2010-ஆம் ஆண்டு செம்மொழிப் பாடலான, செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலில் முதல் இரு வரிகளைப் பாடினார்.
 5 மொழிகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக திரை இசைப் பாடல்களை பாடிய டி.எம்.எஸ்-க்கு 2003-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தது.
இதை தவிர கலைமாமணி விருது, மாநில அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுகள், திரைத்துறை விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.
அவருக்கு மனைவி சுமித்ரா, மகன்கள் பால்ராஜ், செல்வகுமார், மகள் மல்லிகா ஆகியோர் உள்ளனர்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?