முள்ளிவாய்க்கால் "

"முள்ளிவாய்க்கால் " தமிழின அழித்தொழிப்பு படுகொலை நினைவுநாள் .உலகின் பல இடங்களிலும் நினைவு கூறப்பட்டு துக்கம் கொண்டாடப்பட்டது.


இலங்கையின் இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவுதின நிகழ்வுகள் வடமாகாணத்தின் பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன.
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நேற்றைய தினமே தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்திவிட்டனராம்.
சென்ற ஆண்டு  அங்கு நடைபெற்ற சிங்களப்படையினரால் அஞ்சலி  தடுக்கப்பட்டது. தொடர்ந்து படையினருடைய நெருக்குதல்களுக்கும் மாணவர்களும் ,பேராசிரியர்களும்  ஆளாகியிருந்தனர்.
இதனால் இம்முறை ஒரு நாள் முன்னதாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்ளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றால், வன்முறைகள் நடக்கலாம்  என அஞ்சிய  சிங்கள மாணவர்கள் முன்னதாகவே பல்கலைக்கழகத்தைவிட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டனர் .
  இன்று அதிகாலை முதல் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் பெருளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
வீதித்தடைகள் போட்டு, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசியர்கள் தவிர்ந்த வேறு எவரும் உள்ளே செல்லாதவாறு படையினர் தடுத்து வருகின்றனாராம்.





வவுனியா சமளங்குளம் பகுதியில்  2010 ஆம் ஆண்டு வன்னிப்போரில் இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நடுக்கல் நேற்றிரவு காடையர்களால்  அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.  

------------------------------------------------------------------------------------------------------------------------------------
தாவூத்தின் மட்டையடி 

இந்தியாவில் தற்பொது நடந்த  கிரிக்கெட் சூதாட்டத்தையும் அதைத்தொடர்ந்து  கைது செய்யப்பட்டவர்களுக்குள்ள  தொடர்புகளையும் பார்க்கும்  போது, அவற்றின்  அடிப்படை அனைத்தும் தாவூத் கும்பலை நோக்கியே திரும்புவதாக தெரிகிறது.இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்ட புகார்கள் எழுந்த போது இதுகுறித்து நிருபர்களிடம் பேட்டியளித்த டில்லி மாநகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார்,
" இந்த சூதாட்டங்களுக்கான மூளை வெளிநாட்டில் இருப்பதாக"
 தெரிவித்தார்.

அவரின் அந்த வார்த்தை இப்பிரச்னையில் மும்பை நிழலுலக தாதாக்களின் கைவரிசையும், அதன் பின்னணியில் தாவூத் இப்ராகிமின் கூட்டமும் இருப்பதை உறுதிப்படுத்துவது போல் இருந்தது.
 நீரஜ் குமார் தனது பேட்டியின் போது, கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக தாங்கள் விசாரணையை துவக்கிய போது, தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, மும்பை நிழலுலக தாதாக்கள் இந்திய புக்கிகளுடன் இணைந்து ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததாகவும், கிரிக்கெட் சூதாட்டத்தில் மூளையாக தாங்கள் கருதுபவர் துபாய் தொலை பேசி எண்ணை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.


நீரஜ்குமாரின் இந்த பேச்சு, இந்த விவகாரத்தின் பின்னணியில் தாவூத் இருப்பதை உறுதி செய்வது போல் இருந்தது.
 எனினும் இவ்விவகாரத்தில் தாவூத் இல்லை என நீரஜ்குமார் அப்போது  தெரிவித்தார்.
ஆனால் தற்போது நடந்து வரும் விசாரணையின் தகவல்கள் சந்தேகங்களை அதிக ப்படுத்துகிறது.
 ஏனெனில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 10 புக்கிகளில் 3 பேர் தாவூத் கும்பல் அதிகம் செயல்படும் பாகிஸ்தான் மற்றும் துபாய்க்கு போன் செய்திருப்பது, இதில் தாவூத் கும்பல் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்வது போல் உள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஜித் சண்டிலாவின் வக்கீல் தனக்கு தாவூத் கும்பலிடமிருந்து மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகங்களுக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
ஏனெனில் கடந்த காலங்களில் கிரிக்கெட் சூதாட்டங்களில் தாவூத் கும்பல் மிகப்பெரிய அளவில் நடத்தி வந்துள்ளன.
சூதாட்ட கும்பலை முழுமையாக மேற்பார்வையிடுவது தாவூத்தின் சகோதரர் அனீஸ் தாவூத் என கூறப்படுகிறது.
தாவூத் கும்பலைச் சேர்ந்த சோட்டா சகீல் உதவியுடன் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த சூதாட்ட வலை பரவியிருந்தது. இவர்களின் முக்கிய கூட்டாளிகளாக சுனில் துபாய் மற்றும் டாக்டர் கராச்சிவாலா ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் தான் இந்திய புக்கிகளுக்கும், அனீஸ் தாவூதுக்கும் இடையே மீடியேட்டராக செயல்பட்டவர்கள்.
 சுனில் துபாய்க்கு கீழே, டிக்கு, ஜூபிடர், ஜூனியர் கோல்கட்டா மற்றும் ரமேஷ் வியாஸ் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர்.


இவர்களில் டிக்கு டில்லி போலீசாராலும், ரமேஷ் வியாஸ் மும்பை போலீசாராலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டவர்களையும் அவர்களது பின்னணியையும் பார்க்கும் போது

 இதில் நிச்சயம் தாவூத் கும்பலின் கைவரிசை இருக்கும் என்பதை மறுக்க இயலா து .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?