"அய்யா தெரியாதையா"

"கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது "
--என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.

இந்த விவாதத்தின் போது,  ஆங்கில வழியில் பயிலும் மாணவ-மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ-மாணவியர் தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது எண்ணம் ஆகும்.

எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.  இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.

எனவே, அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார். 
ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர் இருக்கிறார்
அவருக்கு தன் துறை சார்ந்த அனைத்து நடப்புகளுக்கும் பொறுப்பு இருக்கிறது புதிய திட்டங்களை அறிவிக்கும் கடமை உண்டு.
ஆனால் என்ன நடக்கிறது?
அந்தந்த துறை அமைச்சருக்கே தெரியுமோ தெரியாதோ பல புதிய அறிவிப்புகளை முதல்வரே சட்டசபை விதி 110ன் கீழ் அனைத்து துறையின் சார்பாக படிக்கிறார்.
அதுவும் "என் தலைமையின் கீழுள்ள"
"என் அரசு" என்று வரிக்கு வரி சொல்கிறார்
அப்படியிருக்க தனக்கு தெரியாமலே உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு வந்தது என சொல்வதுபொருத்தமாக தெரிகிறதா?

இந்த அம்மையாருக்கு தெரியாமலேயே யாரோ ஒருத்தர் , தேர்தல் சமயத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள். இதே அம்மையாருக்கு தெரியாமல் யாரோ ஒருத்தர், சென்னை - அண்ணா நகர் - நினைவு வளைவை உடைக்க பார்த்தார்கள். இப்போ கூட ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஆங்கிலத்தை புகுத்தப்பார்த்தார்கள். எல்லா சமயங்களிலும் அம்மையார் திடீர் திடீரென்று விழித்துக்கொள்வதால் ... நல்ல வேளை... தமிழகம் தப்பித்துக்கொள்கிறது.

ஆனால் இப்படி அடிக்கடி நடக்கிறதே.
 அந்த யாரோ ஒருவர் யார். ?
  இவர் டான்சியில் தான் போட்ட கையெழுத்தை தனது இல்லை என்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

பேஸ்புக் தள பயன்பாடு இலவசம்

நோக்கியா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து, பேஸ்புக் தளப் பயன்பாட்டினை இலவசமாக வழங்குகின்றன. நோக்கியாவின் ஷா 501 மொபைல் போன் வாங்குவோருக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது.
பேஸ்புக் தளம் பயன்படுத்துவதற்கான, அப்ளிகஷன் புரோகிராமினை இலவசமாக நோக்கியா 501 மொபைல் போனில் நோக்கியா தருகிறது.
 Foursquare, LinkedIn, Nimbuzz, Twitter ஆகியவற்றுக்கும் அப்ளிகேஷன்கள் இந்த போனில் தரப்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில், ஏர்டெல் நிறுவனம், தங்களின் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் தளத்தை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதி கொடுத்தது. ரிலையன்ஸ் மாதம் ரூ. 16 பெற்றுக் கொண்டு, பேஸ்புக் தளத் தொடர்பினை வழங்கியது. முதல் முறையாக, நோக்கியா போன்ற மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகையினைத் தருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்பிரிக்காவிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இங்கு, வரும் ஜூன் மாதம் வர்த்தக ரீதியாக வெளியாக இருக்கும், நோக்கியா ஆ
ஷா 501 போனுடன் இந்த சலுகைக் கட்டாயமாகக் கிடைக்கும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------
மூளையில் இரத்தக் கசிவு
-------------------------------------------------------
ஏற்படுவதால் வரும் வாத நோய் வந்து நடமாட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நபர்களுக்கு குருத்து உயிரணுக்களைக் கொடுத்து ஸ்கொட்லாந்தில் செய்யப்பட்ட பரிசோதனை முறை சிகிச்சையில் அவர்கள் குணமடைவதற்கான சிறு அறிகுறிகள் தென்படுகின்றன.
மனிதக் கருவிலிருந்து எடுக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை இந்த நோயாளிகளின் மூளையில் செலுத்தி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களது உடல் அசைவுகளிலும், விழாமல் நிற்பதிலும், சுற்றியிருப்பதை உணர்ந்துகொள்வதிலும் முன்னேற்றங்கள் தென்படுவதாகவும், இந்த சிகிச்சையால் பாதகமான மாற்றம் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை என்றும் ஆய்வு காட்டுகிறது.
இந்த முன்னேற்றங்களைக் கண்டு தாம் வியந்துபோயுள்ளதாக பரிசோதனை மேற்கொண்ட எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த சிகிச்சை முறையின் தீர்க்கமான முடிவாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது என்று இவர்கள் கூறுகின்றனர்.
நோயாளிகளுக்கு குருத்து அணுக்களைக் கொண்டு சிகிச்சை வழங்குவது தொடர்பில் உலகில் நடந்துவரும் முதல் சில ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------
குடிப்பழக்கத்திற்கு 
அடிமையானவர்களை மீட்க புதிய மருந்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "மருந்தை உட்கொள்வதின் மூலம் 61 சதவீதம் வரை மது அருந்தும் பழக்கம் கட்டுப்படுத்தப்படும் " என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மது அருந்துபவர்களின் உடல் நிலை மோசமடைவது மட்டுமின்றி, ஏராளமான விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நிகழ்கின்றன.

குடிகளால் ஏற்படும் விபரீதங்களை தடுப்பது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின், இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு, தன் ஆராய்ச்சியின் பயனாய், புதிய மருந்து ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.


இது தொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இந்த மருந்து, இங்கிலாந்து அரசின் ஒப்புதலுடன், விற்பனைக்கு வந்துள்ளது. மாத்திரை வடிவில் வெளியிடப்பட்டுள்ள இதற்கு, "செலின்க்ரோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், ஒரு நாளைக்கு, ஒரு மாத்திரை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை மது அருந்துவதற்கான பழக்கத்தில் இருந்து விடுபடலாம். இந்த மருந்தை உட்கொள்வதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது" என்று கூறப்பட்டுள்ளது.

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?