விடுதலைப்புலிகள்


விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி திரட்டும் கட்டமைப்பு 2012 ஆம் ஆண்டில் தொடர்ந்தும் செயற்பட்டு வந்திருக்கிறது என்று அமெரிக்க அரசுத்துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான  அறிக்கை கூறியுள்ளது.
suran
அதேவேளை, இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்தவில்லை.
 அகதி முகாம்களில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களைக் கொண்டு செல்வதில் அந்த அமைப்பு தொடர்ந்தும் ஈடுபடுவதாக அமெரிக்க அறிக்கை கூறியுள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு நிதிக் கட்டமைப்பு தொடர்ந்தும் நிலைபெற்று இருப்பதாவுகம் அதனை உடைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினாலும், ஏனைய சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முழுமையாக வெற்றிபெறவில்லை .
சர்வதேச ரீதியிலான ஆட்கடத்தல் விவகாரத்தைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கட்டமைப்பு ரீதியாக அதில் தொடர்பு இருப்பதாக  தகவல் கிடையாது .
அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் தனிப்பட்ட வகையில் அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------

தலைவலியை குறைக்க.......,

 ---------------------------------------------------------------------------------------
தலைவலிக்கு நெற்றியில் தைலம் தடவிக்கொண்டு சூடு பறக்கத் தேய்த்தால் தலைவலி போய்விட்டதைப் போல் தோன்றும். ஆனால் போகாது. இதற்குப் பதிலாக வலது கையின் கட்டைவிரலை மேலிருந்து கீழாக பிடித்தபடி 14 முறை அழுத்தியும் பக்கவாட்டில் 14 முறை அழுத்தியும் விட்டால் படிப்படியாக தலைவலி குறையும்.
இந்த அழுத்தத்துக்குப் பெயர் அக்குபிரஷர், இந்த வகையான அழுத்தங்களை நமது கைகளிலும் கால்களிலும் உண்டாக்குவதின் மூலம் நாள்பட்ட ஆஸ்துமா, சர்க்கரை நோய், எலும்பு சம்பந்தமான பிரச்னைகள், கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் அனைத்திற்கும் மருந்தில்லா வைத்தியமாகும். பக்க விளைவுகள் இல்லாத வைத்திய முறையாகும். இந்த அக்குபிரஷரை தலைவலி ஏற்படும் போது செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?