சீனாவால் காணாமல்



 போன நிறுவனங்கள்.
-----------------------------------------------------------------

இந்தியாவின் மொத்த இறக்கு மதியில், சீனாவின் பங்களிப்பு, 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தயாரிப்பு துறை, வளர்ச்சியின்றி,தேக்க நிலையில் உள்ளது. இதை, சீன ஏற்றுமதியாளர்கள் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
2008-09 முதல் 2011-12 வரையிலான நான்கு நிதியாண்டு களில், இத்தகைய பொருட்கள், பிற நாடுகளை விட, சீனாவில் இருந்து மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதியில், மேற்கண்ட பொருட்களின் பங்களிப்பு, 54 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், இத்தகவலை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்,மேற்கண்ட எட்டு துறைகளை சார்ந்த பொருட்களை தயாரிப்பதால், அவை, இதர நாடுகளை விட, சீனாவின் கடுமையானபோட்டியை சந்தித்து வருகின்றன.
வண்ண பொடிகள்ரசாயனங்கள் பிரிவில், வண்ணப் பொடிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.ஹோலி பண்டிகையின்போது, வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசூவதும், தெளிப்பான்கள் மூலம், வண்ணங்களை பீய்ச்சி அடித்து மகிழ்வதும் வாடிக்கை.
ரங்கோலிகோல வகைகள்போடவும் வண்ணப் பொடிகள் பயன்படுகின்றன.இந்த வண்ணப் பொடிகளும், வண்ணங்களை பீய்ச்”ம் சாதனங் களும் மிகவும் மலிவான விலையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன. இதனால், இவ்வகை தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கும்மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தெளிப்பான்கள் இவ்வகை பொருட்களை தயாரிக்கும் 1,500க்கும்மேற்பட்ட வட இந்திய நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
வட இந்தியாவில் தற்@பாது விற்பனையாகும் 100க்கு 95 வண்ணத் தெளிப்பான்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக உள்ளன.
இவ்வகை சாதனங்களை தயாரித்து வந்த பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இந்த வகையில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர்வேலை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
 சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை பொருட்களால், உள்நாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், இயந்திரம் மற்றும்  சாதனங்கள், ரசாயனம், கண்ணாடி, செராமிக் உள்ளிட்ட எட்டு வகை பொருட்களை தயாரிக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் இடர்பாட்டிற்கு உள்ளாகி உள்ளன.
இதேபோல், செராமிக் பொருட்களை தயாரிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்
களும், சீன பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், இந்தியாவின் மொத்த செராமிக் பொருட்களின் இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு, 64 சதவீதம், அதாவது, 2,700கோடி ரூபாய்(49.70கோடி டாலர்) என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்களிப்பு, முறையே, 7 மற்றும் 4 சதவீதமாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளில், சீன செராமிக் பொருட்களின் இறக்கு மதி, 8 சதவீதத்தில் இருந்து, 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.
செராமிக் தொழில் இதன் எதிரொலியாக, இந்தியாவில் செராமிக் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்வேறு சிறு நிறுவனங்கள் காணாமல்போய்விட்டன.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------
வடக்கை வாட்டும் வெள்ளம்.
 1ம் தேதி கேரளாவில் துவங்கிய  தென் மேற்கு பருவமழை, இப்போது வட மாநிலங்களில், கோர தாண்டவமாடி வருகிறது.

உத்தர்கண்ட், இமாச்சல், உ.பி., டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, பேய் மழை பெய்து வருகிறது.

மக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், முடங்கி கிடக்கின்றனர். உத்தர்கண்ட், இமாச்சல் மாநிலங்களில் பெய்த மழை காரணமாக, பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. கங்கை, யமுனை உள்ளிட்ட ஆறுகளில், வெள்ள நீர், அபாய அளவை தாண்டி, கரை புரண்டோடுவதால், கரையோரங்களில் இருந்த குடியிருப்பு பகுதிகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
ஆறுகளின் மேல் கட்டப்பட்டிருந்த பாலங்களும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாநிலங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.
கேதர்நாத் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலியாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 150 யை தாண்டியுள்ளதாக உத்தர்கண்ட் முதன்மை செயலாளர் ஓம் பிரகாஷ் கூறியுள்ளார்.
ஆனால் சரியான எண்ணிக்கையை தற்போது கூற முடியாது. சமோலி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை என கூறினார்.


உத்தர்கண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவும், இதே கருத்தை கூறினார். கேதர்நாத் செல்லும் சாலையை சீரமைக்க ஒராண்டாகும் எனக்கூறிய பகுகுணா, இந்த வெள்ளத்தை இமாலயன் சுனாமி என பெயர் வைத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. வெள்ளத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
 பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் விநியோகம் செய்து வருவதாகவும் கூறினார்.

மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்தர்கண்ட் மாநிலத்தை பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிட்டார். இதன் பின்னர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங்
" வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தர்கண்ட் மாநிலத்தில் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.
அந்த மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூ.145 கோடி ஒதுக்கப்படுகிறது. வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், வீடிழந்தோருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
 இன்னும் பலர் சிக்கியுள்ளனர். வெள்ள சேதம் மனதை உருக்குவதாக உள்ளது. நிலமையை சமாளிக்க மத்திய மாநில அரசுகளின் அனைத்து மீட்பு படைகளும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீட்கப்படுவதுடன், அந்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்"
- என கூறினார்.

கடுமையான மழை காரணமாக யமுனையில் நதியில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. யமுனை நதியில் 207.12 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் ஓடுகிறது. இதனையடுத்து மீட்பு பணிகளில் ஈடுபட ராணுவம் ஈ டு படுத்தப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்திலிருந்து 81 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ளம் இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அதிகாரிகள் கூறினார்.
யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, நதிக்கரையில் அமைந்துள்ள கார்கி முன்டு. உஸ்மான்பூர் புஸ்தா மற்றும் ஷகத்பூர் கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய டில்லியிலிருந்து கிழக்கு டில்லியை இணைக்கும் யமுனா பாலம் மூடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


                                  "ஆண்டவனையே  அடித்து செல்லும் வெள்ளம்.".........!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?