இன்று உலக மக்கள்தொகை தினம்.





1987, ஜூலை 11ல் உலகின் மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 11ம் தேதி, மக்கள்தொகை தினத்தை ஐ.நா., உருவாக்கியது.
suran
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் சீர்கேடு, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம், மக்கள்தொகை உயர்வு. ஆண்டுதோறும் வேகமாக உயரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகள், அதைக் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் ஆண்டுதோறும் 18 வயதுக்கும் கீழே திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சமாக உள்ளது. மறுபுறம் 32 லட்சம் பேருக்கு பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு நடக்கிறது. இளம் வயது திருமணம் காரணமாக, கர்ப்ப கால இறப்பும் அதிகரிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட திருமணங்களை, அறவே ஒழிப்பதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். தனிமனித கட்டுப்பாடும் இதில் அவசியம். 

உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது.
தற்போது 713 கோடியாக உயர்ந்துள்ளது. 

2050ல் இந்த எண்ணிக்கை 955 கோடியாகவும், 2100ல் 1085 கோடியாகவும் உயரும்.

இந்திய மக்கள்தொகை, 1950ல் 38 கோடியாக இருந்தது.
suran
 2011 கணக்கின் படி, 121 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை, 2050ம் ஆண்டில் 162 கோடியாக அதிகரிக்கும் எனவும், அப்போது இந்தியா தான் உலக மக்கள் தொகையில் முதலிடத்தை பெறும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மாறாக தற்போது 139 கோடி மக்கள்தொகையை கொண்டு, முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை, 2050ல், 138 கோடியாக நிலைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுகிறது.
அனைத்து துறைகளிலும் முன்னேறிய சீனாவை, மக்கள்தொகையில் முந்துகிற சாதனை யை இந்தியா படைக்க உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?