இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவெல்லாம் ..,விண்டோஸ் 8.1.?

படம்
வீடியோ சேட் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜ் தொகுப்பான ஸ்கைப், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தொகுப்புடன் இணைந்து தரப்படுகிறது. தற்போது ஏறத்தாழ, 30 கோடி பேர் ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து மைக்ரோசாப்ட் தருகிறது.   பயனாளர்கள், எப்போதும் தங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கும் இனிய அனுபவத்தினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனைத் தருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 8ல் இயங்கிய ஸ்கைப் குறித்து பல பயனாளர்கள் அவர்களின் பின்னூட்டக் கருத்துக்களைத் தந்துள்ளதாகவும், அவை அனைத்தும் புதிய ஸ்கைப் தொகுப்பின் வடிவமைப்பில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.   அக்டோபர் 18 அன்று, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8.1 தொகுப்பினை வெளியிடுகிறது. ஆனால், இணையத்திலிருந்து அக்டோபர் 17 முதலே டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் ஸ்டோரில், டிஜிட்டல் பார்மட்டிலும், கடைகளில் சிடி யாகவும் இது கிடைக்கும். முதல் முதலாகத் தான் வெளியிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (விண்டோஸ் 8) பல வகையான முழுமையான மாற்றங்களை அதிரடியாக மேற்கொண

நினைக்கவே பகீரென்கிறதே!.

படம்
நாள் முழுவதும் மின்வெட்டு; அதைத் தாங்க முடியாத ஒருவன் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கிடம் சொன்னானாம்: ""ஐயா, ஏழெட்டு மணி நேரமா "பவர்' இல்லை; இருக்க முடியலை''. மன்மோகன் சிங் சொன்னாராம்: ""எனக்கு ஏழெட்டு ஆண்டுகளாகவே "பவர்' இல்லை; இருக்க முடியாமலா போயிருச்சு?'' தலைமையமைச்சரின் நிலைக்கு இன்று இந்திய ரூபாயும் வந்துவிட்டது. அதற்கும் "பவர்' குறைந்துவிட்டது. அரசின் நிதி தொடர்பான பொருளாதாரத்தை பேரளவுப் பொருளாதாரம் என்று கூறுவார்கள். அது கடந்த இரு வாரங்களுக்குள்ளாக பேரழிவுப் பொருளாதாரமாக காங்கிரஸ் கூட்டணி அரசின் கைங்கர்யத்தால் மாறிக் கொண்டிருப்பது இந்தியாவைப் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைமையமைச்சரும் நிதியமைச்சரும் விழுந்து விட்ட ரூபாய்க்கு முட்டுக் கொடுக்க நாள் ஒன்றுக்கு மூன்று தடவை ஆலோசனை நடத்துகிறார்களாம். வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்கலாம் என்றிருந்தது ஒரு தூரத்துக் கனவு. விடுதலை அடைந்து 65 ஆண்டுகளுக்குள் ரூபாய் 65 மடங்கு விழுந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் எழுபதைத்

இந்திய[ ரூ/- ] வீழ்ச்சி -----------------------------------------

படம்
உலக வங்கியில் பணி புரிந்தவர்கள்.உலக நாட்டண்மை அமெரிக்காவின் சொம்புகள்.மன்மோகன் சிங்,ப.சிதம்பரம்  மற்றும் அமெரிக்க அடிவருடிகள் புதிய பொருளாதார சிற்பிகள் சோனியா,ராகுல் காந்தி இவர்களின் பொண்ணான ஆட்சிகாலத்தில்தான் இதுவரை இல்லா அளவு இந்திய பணம் பாதாளத்தில் வீழ்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை தடுக்க இருப்பதாக பொருளாதார மாமேதைகள் இன்னமும் அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருக்கிறார்கள் . எற்றுமதி குறைவு.இறக்குமதி அதிகம்.பங்கு சந்தையில் அந்நிய முதலீடு அனைத்து துறைகளிலும் அன்னியர் என்ற [அமெரிக்கர்]பணம் பங்கு .இவைகள் இந்தியாவில் மடை  திறந்த வெள்ளமாக வரும் போதே இது போன்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு சீரழியும் நிலை வரும் என்று சுரனில் கூட அவ்வப்போது செய்திகள் வெளியிட்டுள்ளோம்.அது வந்து கொண்டிருக்கிறது.வந்து விட்டது. பங்கு சந்தையில் டாலர்களில் முதலீடு செய்யும் அன்னியர் தங்கள் பணத்தை லாபத்துடன் விலக்கிக்கொள்ளும் போது இப்படியான நெருக்கடி-பொருளாதார சரிவு கண்டிப்பாக வரத்தானே செய்யும்.இதை நான்காம் வகுப்பு கணக்கு மாணவன் கூட சொல்லி விடுவான்.இது நமது பொருளாதார பு லி ளி களு

ஜெயலலிதா அரசு பொய் வழக்கு?

படம்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது! வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினியிடம் இருந்து 2010 ஏப்ரல் மாதம் [20] செல்போனை பறிமுதல் செய்ததாகவும் அரசுப் பணியாளர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி புகார் அளித்தார். இந்தவழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6ஆஜர்படுத்தபட்டார் நளினி. அப்போது, ”20 வருடங்களுக்கு மேலாக நான் சிறையில் இருக்கிறேன். என்னை யார் யார் பார்க்க வருகிறார்கள் என்பது பொலிஸுக்குத் தெரியும். அவர்களை மீறி எப்படி செல்போன் என்னிடம் வரும்? பொய்வழக்குப் போட்டிருக்கிறார்கள். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்க வேண்டாம். கோர்ட்டில் வந்து பேசுகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார். கடந்த 19-ம் திகதி மீண்டும் ஆஜரானார். நளினியிடம் இருந்து செல்போன் கைப்பற்றிய போது பணியில் இருந்த சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி உட்பட 11 பேரிடம் நீதிபதி விசாரித்தார். நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ”இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச

ராணுவத்தையும் தனியாரிடம்.....,

படம்
இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத் தைச மாளிக்கவே இந்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில் புதியதிருகுவலியாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக போலன்பை கிராமத் தலைவர் அளித்த புகாரையடுத்து உள்ளூர் போலீசார் எல்லைப் பகுதி அருகே சென்று பார்த்தனர். அப்போது கூடாரம் அமைப்பதற்காக மியான்மர் ராணுவ வீரர்கள் தரையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த அத்துமீறல் தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். பின் வழமை போல்  மியான்மரிடம் பணிவாக பேசி அவர்களை வெளியெ போகச்செய்ததாம். இத

நிகழ்வுகள்,

படம்
25/08  முக்கிய நிகழ்வுகள்:- * 1803- யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. * 1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது. * 1912 - சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1920 - போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13-ல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. * 1933 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். * 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது. * 1955 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின. * 1981 - வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகஅருகில் சென்றது. * 1989 - வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் அருகில் சென்றது. * 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது. * 2003 - மும்பையில் நடைபெற்ற இரண்டு கார் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்ட

“காணாமல் போய் விட்டன”

படம்
 நிலக்கரிச் சுரங்கங்களுக்கான உரிமங்கள் முறைகேடுஒதுக் கீடு விவகாரத்திலோ தோண்டத்தோண்ட விவ காரங்களாகவே வருகின்றன. முறைகேடு ஒதுக்கீடுகள் தொ டர்பான முக்கிய கோப்புகள் “காணாமல் போய் விட்டன” . நிலக்கரித் துறை அமைச்சரை விட்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வைத்து, எதிர்க்கட்சிகள் அதை ஏற்க மறுத்த நிலையில் இப்போது மத்திய அரசு பிடிவாதத்தைக் கைவிட்டுள்ளது. இப்பிரச்சனை குறித்த விவாதங்களின்போது பிரதமர் தலையிட்டு பதிலளிப்பார் என்று அரசு ஒப்புக்கொண்டுள்ளது.  இதை முதலிலேயே செய்திருந்தால் இந்தப் பிரச்சனையில் நாடாளு மன்றம் இத்தனை நாட்கள் முடக்கப்பட்ட நிலைமை ஏற்பட்டிருக்காது. பிரதமர் மன் மோகன் நிலக்கரித்துறை அமைச்சகப் பொறுப் பையும் ஏற்றிருந்த 2006 முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒப்புதல் அளிக் கப்பட்ட உரிமங்கள் தொடர்பான கோப்பு கள்  மாயமாகிவிட்டன என்பதால் தான் பிரச்சனையே  ஆகவேதான் நாடாளு மன்றத்தில் அவரே பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், கோப்புகள் எதுவும் காணாமல் போகவில்லை, இடம் மாறியிருக்கக்கூடும், ஒரு சாதாரணப் பிரச்சனையை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்