"அதிர்ச்சி"கள்

அதிர்ச்சி-1
---------------
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத பல துறைகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை பெறாமல் போன காலி இடம் 89 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இது வெறும் எண்ணிக்கையாக எடுத்துக் கொண்டால், ஆண்டு தோறும் அதிகரித்து வரும் எண்ணிக்கையாகவே கூற வேண்டும்.
ஆனால், பல கல்லூரிகளில் ஒரு துறையில் ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த துறை ஏதோ வெளியில் தெரியாத, அதிகம் பிரபலமில்லாத துறையாகக் கூட இல்லை. எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ஐடி போன்ற மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் துறைகளாகும்.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சுமார் 37 கல்லூரிகளில்  எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அதேப்போல 30 கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்பம் எனப்படும் ஐடி துறையில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.
அதேப்போல ஏராளமான கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் ஒரு மாணவர் கூட சேர்க்கை பெறாமல் உள்ள நிலையும் இருக்கிறது.
கல்லூரியைத் துவக்கி பல ஆண்டுகளாகி, புகழ்பெற்ற நிறுவனங்கள் பெரும்பாலானவை மாணவ சேர்க்கையை சரியான முறையில் நடத்திவிட்டன. ஆனால், சமீபத்தில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளும், அதிகம் அறியப்படாமல் உள்ள கல்லூரிகளும்  தான் காலியிடங்களை அதிகம் கொண்டிருக்கின்றன. இதில் பல துறைகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றாலோ அல்லது ஒன்று அல்லது இரண்டு மாணவர் மட்டுமே சேர்ந்திருந்தாலோ அந்த துறையின் நிலை என்னவாகும்.
இது மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரில் ஒரு சிலரே கலந்தாய்வுக்கு வராமல் இருப்பார்கள். இது முதலில் ஒன்று இரண்டு என துவங்கி இறுதியில் 500 வரை கூட ஆகும்.
ஆனால், இந்த ஆண்டு, அழைக்கப்பட்டோரில் வராதவர்களின் எண்ணிக்கை முதல் நாளில் இருந்தே நூற்றுக்கும் அதிகமாக இருந்தது. இறுதி நாட்களில் இது 3 ஆயிரத்தை எட்டியது மிகப்பெரிய விஷயமாகக் கருதப்பட்டது.
முன்பெல்லாம் பிளஸ் 2 முடித்தவர்கள் நேராக பொறியியல் சேர்ந்துவிடுவார்கள். ஆனால், தற்போது மாணவர்கள் சிந்தித்து, உரிய துறையை தேர்வு செய்கிறார்கள். ஊடகங்களின் வாயிலாக கல்வித் துறையில் விரிந்து பரந்து இருக்கும் படிப்புகளை பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. பொறியியல் படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், இவர்களது கவனம் தற்போது வேறு நல்ல துறைகளை நாடிச் செல்கிறது.
பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் பல ஆண்டுகளாக இருக்கும் நிலையில், ஆண்டு தோறும் பொறியியல் கல்லூரிகளைத் துவக்க ஏஐசிடிஇ அனுமதி வழங்குவதும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி வழங்குவதும், காலியிடங்கள் அதிகரிக்க மேலும் சில காரணங்களாகும்.
இந்த நிலையில், அதிகம் பிரபலமாகாத கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
 வளாகத் தேர்வு இருக்கும் கல்லூரிகளாகப் பார்த்து சேரும் மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு இல்லாத கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் வெளியே வந்து வேலை தேடும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல.
இந்த நிலையில், மேலும் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை ஏஐடிசிஇ தான் நிறுத்தி வைக்க வேண்டும் .
suran


-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிர்ச்சி-2
---------
காலை வாரும் பங்கு சந்தை.

எப்போதும் “அந்நிய முதலீடு தேவை,மக்கள் எல்லோரும் பங்கு சந்தையில் பணத்தை போடுங்கள்.அரசு ஊழியர் ஓய்வூதியத்தை பங்கு சந்தையில் போடுவோம் “ என்று வாய்க்கு வாய் சொல்லும் காங்கிரசு அரசு கொஞ்சம் இந்த செய்தியை பார்க்கலாமே?
இது போன்று நடப்பது மன்மோகன் சிங் கூட்டத்துக்கு தெரியாதது அல்ல.
ஆனாலும் அவர்கள் பங்கு சந்தையை ஊக்குவிப்பதும்,அந்நிய முதலீட்டை கோருவதும்,பொதுத்துறை நிறுவனத்தை பங்குகள் விற்பதின் மூலம் தனியாருக்கு தாரை வார்ப்பதும் ,  விலைவாசிகளை உயர்த்தி விடும்-பணவீக்கத்தை உருவாக்கும் என்று தெரிந்தே அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்தி விடுவதும் இந்தியாவை ஒரு வழியாகக வெண்டும் என்ற எண்ணம்தான்.
அதுதானே அவ்ர்களின் முதலாளி அமெரிக்காவின் கட்டளையாகத்தான் செய்கிறார்கள்.
பங்கு விற்பனை மூலம், பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் திரட்டிய, 87 நிறுவனங்கள் திடீரென்று மாயமாகி விட்டன.
மாயமான, 87 நிறுவனங்கள் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிறுவனங்களின் இயக்குனர் களை கண்டுபிடிக்க, தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
மாயமான நிறுவனங்கள், நிறுவனர்கள், இயக்குனர்கள் மீது, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, முதலீடு செய்ய தூண்டியதாக, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பங்கு வெளியீட்டில் இறங்கி, முதலீடுகளை திரட்டும் ஒரு நிறுவனம், அதன் ஆண்டு நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட இதர ஆவணங்களை அளிக்காமல் இருந்தாலோ, அலுவலகம் அல்லது அதன் இயக்குனர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, அந்த நிறுவனம், "மாயமான நிறுவனங்கள்' என்ற பிரிவில் சேர்க்கப்படும்.
இது போன்ற நிறுவனங்கள் பெருகுவதை தடுக்க, பங்கு வெளியீட்டில் இறங்கும் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையை ஆராய்ந்து, அவை எவ்வாறு நிதியை செலவிடுகின்றன என்பதை கண்காணிக்குமாறு, கம்பெனிகள் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் பணத்துடன் மாயமான, 87 நிறுவனங்களில், 26 நிறுவனங்கள், குஜராத்தை சேர்ந்தவை. ஆந்திராவில், 13 நிறுவனங்களும், தமிழகத்தில், 10 நிறுவனங்களும் காணாமல் போய் விட்டன.இந்த வரிசையில், மகாராஷ்டிரா (9), டில்லி (5), மேற்கு வங்கம் (5), மத்திய பிரதேசம் (4), பீகார் (4), சண்டிகர் (2) ஆகியவை உள்ளன. 
--------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?