"அனைத்தையும் காணோம்?"

நிலக்கரி ஊழல் 
 முக்கியக் கோப்புகள் அனைத்தையும் காணோம்!
 
கோப்புகளுக்கு பதிலாக மீண்டும் பட்டியல்?


ரூ1.86 லட்சம் கோடி அளவிற்கு மக்கள் பணம் சூறையாடப்பட் டுள்ள நிலக்கரிப் படுகை ஊழல் விவகாரத்தில் பெரும் நிறுவனங்க ளின் மின் திட்டங்கள் தொடர் பான கோப்புகளும் மாயமாகியுள் ளன.
ரிலையன்ஸ்பவர், டாடா ஸ்பான்ஜ்அண்ட் அயர்ன், ரதி ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ஆகிவற்றிற்கான நிலக்கரி ஒதுக்கீடு குறித்த கோப்புகள் மாயமாகி இருப்பதால் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நிலக் கரிப் படுகைகள் தனியார் கம்பெனி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
suran
இந்த ஒதுக்கீட்டின் போது ரூ1.86 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ள தாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) நாடாளுமன்றத்தில் சமர்ப் பித்த அறிக்கையில் அரசுக்கு ஏற் பட்ட இந்த இழப்பு விவரம் குறிப் பிடப்பட்டிருந்தது. இந்த மெகா ஊழல் நடந்த போது, நிலக்கரித் துறை, பிரதமர் மன்மோகன் சிங் வசம் இருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்த ஊழல் வழக்கை மத்திய குற்றப்புலனாய்வுக்கழகம் (சி.பி.ஐ) விசாரணை செய்து வருகிறது. சிபி ஐயிலும் நிலக்கரித்துறை அமைச் சகம் மேற்படி ஒதுக்கீடு தொடர் பான குறிப்பிட்ட சில கோப்பு களை மட்டும் அளித்தது. இந்த கோப்புகளில் பெரும் நிறுவனங் களுக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாய மாகி இருந்த விவரம் வெளியான தும் அதிர்ச்சி ஏற்பட்டது.இதனால் ஆளும் அரசின் மீது மேலும் சந்தேகம் வலுத்தது. மாய மாகிப்போன கோப்புகள் எங்கே இருக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த வழக்குத்தொடர்பாக தேவைப்படும் கோப்புகளை 2 வார காலத்திற்குள் அளிக்க வேண் டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இந்த கெடுவைத் தொடர்ந்து நிலக்கரித்துறை அமைச்சகம் கோப்புகள் மற்றும் ஆவணங்களை அளித்தது.சிபிஐக்கு தர வேண்டிய கோப் புகள் பட்டியலை அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகனவதி செப் டம்பர் 2ம் தேதியன்று நிலக்கரி அமைச்சகத்திடம் அளித்தார்.
இதையடுத்து மாயமாகிப்போன கோப்புகளை கண்டுபிடிக்க கூடு தல் செயலாளர் (நிலக்கரித்துறை) மற்றும் எஸ்.கே.ஸ்ரீவத்சவா தலை மையிலான கமிட்டி அமைக்கப் பட்டது. இந்த குழு மாயமாகிப்போன கோப்புகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் நடத்தியது. உருக்கு மற் றும் மின்சாரம் மற்றும் பிரதமர் அலுவலகம் வரையிலான கோப்பு களைத் தேடும் பணி நடந்தது. மேலும் தொழிற்கொள்கை மற் றும் மேம்பாடு துறையிலும் தேடு தல் பணி நடைபெற்றது.
 மத்தியப்பிரதேசம் சாசன் நக ரில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு செய்தது தொடர் பான கோப்புகள் உள்பட முக்கிய கோப்புகளை சி.பி.ஐ கேட்டது.
எப்போது பெரு மின் திட்ட மான ரிலையன்ஸ் திட்டம் செயல் படுத்தப்பட்டது 3 படுகைகளில் எப்போது நிலக்கரி எடுக்கும் பணி துவங்கியது;
சாசன் மின் திட்டத் திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட படு கையில் இருந்து அதே மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித் ராங்கியில் உள்ள ரிலையன்ஸ் திட் டத்திற்கும் நிலக்கரி பயன்படுத்தப் பட்டது போன்ற விவரங்களை சிபிஐ கேட்டிருந்தது. ஆனால் இந்த கோப்புகள் மாயமாகி இருந்தன.
அதேபோன்று டாடா ஸ்பான்ஜ் அண்ட் அயர்ன் லிமிடெட்டிற் கான ராதிகாபூர் கிழக்கு நிலக்கரிப் படுகை மற்றும் எஸ்.சி.ஏ.டபிள்யூ நிறுவனத்திற்கான படுகை தொடர் பான கோப்புகளும் காணவில்லை.எம்ஆர் அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்திற்கு பந்தர் நிலக்கரி படு கையை ஒதுக்கீடு செய்தது தொடர் பாக காங்கிரஸ் எம்பி விஜய் தார்தா அளித்த பரிந்துரை தொடர்பான கோப் பும் காணாமல் போய் உள்ளது.
suran
நிலக்கரி ஊழல் வழக்கில் கோப் புகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத்தொடரில் மிகப்பெ ரும் பிரச்சனை எழுந்தது.
வேறு வழியின்றி நாடாளுமன்றத்திற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இன்னும் ஒரு வார காலத்திற் குள் எப்படியேனும் கோப்புகளை கண்டுபிடித்து தந்துவிடுவோம் என்று உறுதியளித்தார்.
 ஆனால்" பெரும் நிறுவனங்களின் முறை கேடுகள் சம்பந்தப்பட்டுள்ள கோப்புகள் அனைத்தையும் காண வில்லை" என்பது உறுதியாகியுள்ள நிலையில்,
மீண்டும் அதை உறு திப்படுத்தி காணாமல் போன கோப்புகளின் பட்டியலை புத னன்று நிலக்கரி அமைச்சகம் சிபி ஐக்கு அனுப்பியுள்ளது.
பிரதமர் கூறியபடி கோப்புகள் வரவில்லை; எந்தெந்த கோப்பு களை காணவில்லை என்று மீண் டும் பட்டியலே வந்திருப்பது சிபிஐ யை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 இதைத்தொடர்ந்து கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் சிபிஐ வசம் மனு அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அம லாக்கப்படவுள்ளது.
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?