வரவே வராத கடன்



---------------------------------------------------------------------------------------------------------------------------இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று, அதை முறையாக திரும்ப கட்டாமல் ஏமாற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் மோசமான கடன் மற்றும் வாராக்கடன் தொகையை பார்த்தால் 2010ம் ஆண்டு ரூ.59,927 கோடியும், 2011ம் ஆண்டு ரூ.74,664 கோடியும், 2012ம் ஆண்டு ரூ.1,17,000 கோடியும், இந்த ஆண்டு ரூ.1,64,461 கோடியும் என இந்த தொகை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. 

இந்த ஆண்டு பொதுத்துறை, தனியார் மற்றும் அன்னிய வங்கிகள் என மொத்தமாக வாராக்கடன்களை கணக்கிட்டு பார்த்தால் ரூ.1,94,000 கோடியாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் புதிய வாராக் கடன்களின் தொகை ரூ.3,15,465 கோடி.

suran
 ஒவ்வொரு வங்கியிலும் கடன் பெற்று ஏமாற்றும் முதல் 50 கடனாளிகள் பட்டியலை இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.. இந்த பட்டியலில் முதலிடத்தில் கிங்பிஷ்சர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உள்ளது.
ரூ.2,673 கோடி பணத்தை திரும்ப செலுத்தவில்லை.

இதேபோன்று வின்செம் டயமண்ட் அன்ட் ஜூவல்லரி நிறுவனம் ரூ.2,660 கோடியும், எலக்ட்ரோதெர்ம் இந்தியா லிமிடெட் நிறுவனம் ரூ.2,211 கோடியும், ஸ்டெர்லிங் பயோ டெக் லிமிடெட் ரூ.1,732 கோடியும், நேஷனல் அக்ரிகல்சுரல் கோ ஆப்ரேட்டிவ் நிறுவனம் ரூ.862 கோடியும், டெக்கான் குரோனிக்கல் ஹோல்டிங் நிறுவனம் ரூ.700 கோடியும் பணத்தை திரும்ப செலுத்தாமல் உள்ளன.
சில ஆயிரங்கள் கடனை  வாங்கி விட்டு செலுத்த வகையின்றி  செலுத்தாமல் 
இருப்பவர்கள் சொத்தை பிடுங்க்கிக்கொண்டும்,அவர்கள் படத்தை பத்திரிக்கைகளில் விளம்பரமாக போட்டும் அசிங்கப்படுத்தும் வங்க்கீகள் இந்த பணமுதலைகளை பணத்தை வைத்துக் கொண்டே திறம்ப செலுத்தாமல் ஏமாற்றும் கயவர்களை கண்டு கொள்வதில்லை.
இவர்களை மக்கள் மத்தியில் விளம்பரப் படுத்துவதும் இல்லை.அத்துடன் போகாமல் இது போன்ற முதலைகள் பற்றியும் இவர்கள் அடுத்த வங்கி செலுத்தாமல் கோடிக் கணக்கில் பணத்தை முழங்கியது தெரிந்தும் மீண்டும் கோடிகளில் பணத்தை கொடுப்பதும் பின்னர் அதை மத்தய அரசின் உதவியுடன் வாராக் கடன் கணக்கில் சேர்த்து தள்ளுபடியாக்கி விடுவதும் தொடர்கிறது.
ஆனால்  ஏழைகள் வீட்டுப் பிள்ளைகள் மேற்படிப்புக்கு கல்விக் கடன் கேட்டால் மட்டும் இவர்களின் காதுகள் கேளாமல் பொய் விடும்.கடன் மனு தள்ளுபடியாகி விடும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற ஆண்டில் இதே மாதம் [டிசம்பர் -2012]

உலக நடப்பு 



டிச., 4: பிலிப்பைன்சில் வீசிய "போபா' என்ற சூறாவளி புயலால், 300 பேர் பலி.
டிச., 9: பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடில்டன் குறித்து, ஆஸி., ரேடியோவில் தவறான தகவல் ஒலிபரப்பானது தொடர்பாக, இந்திய நர்ஸ் டெசிந்தா தற்கொலை.
டிச., 15: பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் 5 பேர் உள்பட 8 பேர் பலி.
டிச., 20: "மிஸ் யுனிவர்ஸ் 2012' அழகியாக, அமெரிக்காவின் ஒலிவியா கல்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அழகி ஷில்பா சிங் 16வது இடம்.
டிச., 17: ஜப்பான் பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான ஹின்சோ அபே வெற்றி பெற்றார். பிரதமராக இருந்த யோஷி ஹூகோ தோல்வி.
டிச., 21: "மாயன் காலண்டர்' நிறைவு, சூரிய புயல் பூமியை தாக்கும் என்பதை காரணம் காட்டி உலகம் அழியும் என்ற கருத்து பரப்பப்பட்டது. எதுவும் நடக்கவில்லை.
டிச., 23: இத்தாலி பிரதமர் மரியோ மாண்டி, ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பார்லிமென்ட் கலைக்கப்படுவதாக அதிபர் ஜார்ஜியோ அறிவிப்பு.
டிச., 26: கஜகஸ்தானில் நடந்த விமான விபத்தில் 27 பேர் பலி.



இந்திய நடப்பு 

டிச., 5: "சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு (எப்.டி.ஐ.,) மசோதா எதிர்க்கட்சிகள் மற்றும் வணிகர்களின் எதிர்ப்பை மீறி பார்லிமென்டில் தாக்கல்.
டிச., 15: இந்தியா வந்த பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், பிரமதர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.
டிச., 24: ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், அரசுமுறை பயணமாக இந்தியா வருகை.
.தமிழக நடப்பு:

டிச., 3: நடுக்கடலில் மீன் பிடித்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், இலங்கை கடற்படையால் கைது, பின் விடுதலை.
.
டிச., 9: மெரீனா கடற்கரையில் ரூ.8 கோடி செலவில், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.,சமாதி திறப்பு..
டிச., 10: சென்னை பெருங்குடியில் பஸ் மீது லாரி மோதியதில், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலி.
டிச., 13: ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 21,920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை  வழங்கள்..
டிச., 13: பரமக்குடியில் தமிழகத்தின் முதல் சோலார் மின்சாரப் பூங்கா, அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து.
டிச., 15: சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை, திருவனந்தபுரத்திற்கு துரந்தோ (இடைநில்லா) ரயில் சேவை துவக்கம்..
டிச., 17: மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளின் மூன்று நாள் மாநாடு,ஆரம்பம்.
டிச., 20: பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ கணவர் மகாதேவன், சென்னை அடையாறு ஆற்றில் தற்கொலை.
டிச., 21: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய்.இக்பால், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம். நீதிபதியாக தர்மாராவ் தற்காலிகமாக நியமனம்.
டிச., 22: 2012 சாகித்ய அகாடமி விருதுக்கு திண்டுக்கல் செல்வராஜ் எழுதிய "தோல்'  நாவல் தேர்வு.
டிச., 25: சேலம் அருகே மேச்சேரி என்ற இடத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி.

----------------------------------------------------------------------------------------------------------------------------மேற்கண்டவைகள் 2012-இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் .
2012 இல் உலகம் அழியப்போவதாக ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு திரி ந்தது.
மாயன் நாட்காட்டியில் உள்ளது.கிறித்தவ விவிலியத்தில் சொல்லப் பட்டிருக்கிறது,இன்னமும் பல மத,தீர்க்கதரிசன வார்த்தைகள் உள்ளன என்று
உலக அளவில் உலக அழிவு பரபரப்பாக பேசப்பட்டது.ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.ஆனால் 2012 இல் அந்த ஆண்டின் 365 நாட்கள்தான் அழிந்து 2013 ஆண்டு பிறந்ததெயொழிய  உலக அழிவு மட்டும் நிகழவில்லை.
 
-------------------------------------------------------------------------------------------------------------------------
படிமம்:LippenStudium3.JPG
 

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?