ஆதரவுமில்லை!அலையுமில்லை!!.

டந்து முடிந்த தேர்தல் பற்றி பல விமர்சனங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.
நம் பங்குக்கு நாமும் சொல்லி வைப்போம்.
மூன்று மாநிலங்களில் பாஜக.ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது.
டெல்லியில் இதுவரை இல்லா அளவு பாஜக இடங்களை கைப்பற்றீருந்தாலும் ஆட்சி அமைக்க  வலு காணாது.அங்கு ஆம் ஆத்மி பாஜக ஆட்சியமைக்க பச்சைக் கொடி காட்டினாலும் பாஜக அமைக்க முன் வரவில்லை.அக்கட்சி எடுத்த முடிவு புத்தி சாலித்தனமானது .தனது இடங்களை விட அதிகமான இடங்களை எதிர் கட்சிகள் இரண்டும் வைத்திருக்க நிம்மதியாக ஆட்சி செய்ய இயலாது .
ஒரு தீர்மானத்தையும் இரு கட்சிகளின் ஆதரவின்றி நிறைவேற்றவும் முடியாது.தலைக்கு மேல் கத்தியை வைத்துக் கொண்டு முதல்வர் நாற்காலியில் உட்காருவது சரிவராது.
suran

மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக வென்றதற்கு இந்தியா எங்கும் மோதிக்கொண்டிருக்கும் மோடி ஆதரவு அலை தான் காரணம் என்று மக்களவை தொகுதியை மனதில் வைத்து ஒரு எண்ணம் ஊடகங்கள் மூலம் பரப்பப் படுகிறது.
அப்படி ஒன்றும் இல்லை.
மோடி ஆதரவு அலை என்பதை விட காங்கிரசின் மீதான அதிருப்தி அலை எனக் குறிப்பிடுவதே சரியாகும்.
ராஜஸ்தான் பாஜக வலுவான மாநிலங்களில் ஒன்றுதான்.அங்கு காங்கிரசும் -பாஜக வும் கேரளா போல் மாறி ,மாறி ஆட்சியமைத்துக் கொண்டிருக்கின்றன.
இப்போது பாஜக சுற்று .அவ்வளவுதான்.
மத்திய பிரதேசம் பாஜக தான் வலு.அதுதான் தேர்தலுக்கு முன்னர் ஆண்டு கொண்டிருந்தது.ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி இல்லாத நிலையில் தொடர்ந்து மூன்றாம் முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சத்தீ ஸ்கரில் பாஜக தான் முன்பும் ஆண்டது ம.பி போல் இங்கும் அதிருப்தி இல்லா நிலையில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ஆக மோடி அலையில் ஒன்றும் புதிதாக பாஜக அள்ளி வாரிக்கொள்ள வில்லை.
ம.பி.,சத்தீஸ்கர்  போன்ற மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துள்ளது.ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
 இந்தியா முழுக்க பரவலாக உள்ள மத்திய காங்கிரசு ஆட்சிமீதான அதிருப்திதான்  டெல்லியில் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது.அங்கு பாஜக முழுமையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.நேற்று கட்சி ஆரம்பித்த கேஜ்ரிவால் 28 இடங்களை அதுவும் பாஜக வை விட 3 இடங்களையே குறைவாக பெற்றுள்ளார்.காங்கிரசு மீதான அதிருப்தியின் விளைவுதான் ஷீலா  தீட்சித் தோல்வியும்.
suran
மோடி அலை என்றால் அந்த 28 இடங்களும் பாஜக வுக்கு அல்லவா கிடைத்திருக்க வே ண்டும்.? இரண்டுமல்லாமல்  மாற்று கட்சிக்கு அதுவும் முளைத்து இரட்டை இலை கூட விடாத ஆம் ஆத்மிக்கு போன காரணம் .மக்கள் பாஜக,காங்கிரசை விட மாற்று சக்தியை தேட ஆரம்பித்துள்ளனர்  என்பதுதான் .
நோட்டா வில் பதிவான நான்கு லட்சம் வாக்குகளும் அதைத்தான் காட்டுகின்றன.
மோடி அலை என்று அலைவோருக்கு காங்கிரசின் அடி ஒரு பக்க பலமாக இருந்தாலும் மோடி அலை என்பது இன்றுவரை ஊடகங்களால் உருவாக்கப் பட்ட கானல் நீர்தான்.பரவலாக தெரிந்தாலும் உண்மையில் இல்லை.அதாவது இருக்கு ஆனால் இல்லை.இந்த இருக்கு ஊடகங்களில் மட்டும்தான் என்று அர்த்தம்.
ஆனால் காங்கிரசின் மீதான மக்களின் அதிருப்தி வரும் தேர்தல்களில் காங்கிரசுக்கு தற்பொதைய மாற்றான பாஜகவுக்கு  வாக்குகளாக வருமென்பதில் சந்தேகம் இல்லை.வாஜ்பாய் பிரதமராக வரவில்லையா அது போன்ற சராசரி நிகழ்வாகத்தான் இது அமையும்.மோடி அலை அதை பயன் படுத்திக்கொண்டு திரியும் ஒரு கானல் நீர்.அவ்வளவுதான்.

ற்காடு எதிர்பார்த்த முடிவுதான்.
அதிகார,பண,ஆள் பலம் உள்ள ஒரு கூட்டத்தை வெல்ல இயலாது என்பதை திருமங்கலத்தில் இருந்து பார்த்து வருகிறோம்.
இந்த வெற்றியை தனது ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என ஜெயலலிதா சொல்லியுள்ளார்.
என்ன,என்ன சாதனைகள் என்று அவரால் பட்டியலிட முடியாததுதான் இப்போதைய நிலை.
வாக்குக்கு 2000 ரூபாய்.79 ஆயிரம் திடீர் வாக்காளர்கள் .அவர்கள் படத்துடன் திடீர் குடும்ப அட்டை.அந்த முகவரியில் வீடுகளே இல்லாத நிலை.

ஆனால் வாக்களிக்க மட்டும் வாகனங் களில் அணி,அணியாக வந்து வாக்களிப்பு.
வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வரக்கூடாது என்று எதிர்த்தவர்கள் மீதே .அதே குற்ற சாட்டில் அவர்கள் மீதே வழக்கு .


2000 கொடுத்ததுமட்டுமின்றி வாக்களிப்புக்கு முதல்நாள் மேலும் 500 ரூபாயுடன் வீடு வீடாக சென்று கொடுத்து சாமிகளின் படங்கள் மீது சத்தியம் வாங்கப்பட்டுள்ளது.
மாற்றி வாக்களித்தால்; சாமி கண்ணை குத்திவிடும் பயத்தில் வாக்குகள் அனைத்தும் இலைக்கே.
ஆரம்பத்தில் இருந்தே அதிமுக மாவட்ட செயலாளர் போல் மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார் குற்ற சாட்டுகள் எழுப்பப் பட்டும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை .வாட்டாட்சியர்,காவல் துறை வாகன ங்களே பணம் ,ஆடைகள் வழங்க பயன் படுத்தப்பட்டுள்ளன.அதற்கான ஆதாரங்கள் பார்வையாளரிடம் கொடுத்தும்,அவரே சில இடங்களில் நேரில் பார்த்தும் தேர்தல் ஆணையம் வெறும் கண்டனத்துடன் தனது பணியை முடித்துக் கொண்டு விட்டது.
இத்தனை பல்முனை தாக்குதல்களிலும் மாறன் 62 ஆயிரம் வாக்குகளைப்பெற்றது -காப்புத் தொகையை திரும்ப பெற்றது சாதனைதான்.
அவர் பெற்ற ஒவ்வொரு வாக்கும் பலமடங்கு அதிக வலு கொண்டது.
அது தனது வலுவான எதிர்ப்பு வாக்குகள் என்பதை ஜெயலலிதா கவனத்தி ல் கொள்ள வேண்டும்.
இதை போன்ற ஆளுங்கட்சியாக திமுக நெருக்கடிகள் கொடுத்த போது அதிமுக பென்னாகரத்தில் தனது காப்பு த்தொகையை பறி கொடுத்ததையும் .ஆனால் அதை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் திமுக அடைந்த மாபெரும் தோல்வியையும் கருணாநிதி தனது எதிர் கட்சி பதவியை கூட விஜய்காந்த் கட்சியிடம் பறி கொடுத்ததையும்  நினைவில்  கொள்ள வேண்டும் .
ஏற்காடு இடைத்தேர்தல் மினிலாரி, 2250 சேலைகளை அதிகாரிகளிடம்   திமுகவினர் பிடித்து கொடுத்தனர்

கடசி -ஆட்சி  சாதனைகளால் கிடைத்த வெற்றியல்ல இது .
அமைச்சர்கள் அனைவரும் கொண்ட 67 தளபதிகள் மகா கூட்டம்.
ஒருவர் வெறும் 100 வாக்குகளை மட்டும் கவனத்தில் கொண்டு அதை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட வே ண்டும் என்று திட்டமிட்டு அதிகார பலம்-பண பலம் மூலம் விழுந்ததுதான் இந்த வாக்குகள்.
அதால்  பெறப்பட்டதுதான் வெற்றிக்கனி என்ற உண்மை வெளிப்படையாக உள்ளது.
பென்னாகரத்தில் அதிமுக இதேபோல் சூழலில் மூன்றாவதாக பாமகவுக்கு பின்னால் வந்தது.காப்புத் தொகையை கூட இழந்து விட்டது.ஆனால் இன்று அதே வரலாறு திரும்பியதில் திமுக காப்புத்தொகையை மீட்டு  மீசையில் மண் ஒட்டாமல் களத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளது.அது ஆட்சியின் மீது இருக்கும் மக்களின் வெறுப்பின் வெளிப்பாடுதான்.
பணத்தையும் வாங்கி அதையும் மீறிய வெறுப்புதான்  திமுகவுக்கு கிடைத்த வாக்குகள்.
அடுத்து சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியையும் ஏற்காடு அளவு கவனிக்க முடியாது.அப்போது ஆட்சி சாதனை வாக்குகளாக மாறும் என்றும் நினைக்க முடியாது.
விலை கொடுத்து வாங்கிய வெற்றிக்கு ஏற்காடு மக்களுக்கு நன்றி சொல்லியுள்ளார் ஜெயலலிதா.
அவர் உண்மையில் நன்றி சொல்ல வேண்டியவர்கள் பணத்தை அள்ளி இறைத்து பனியாற்றிய அமைச்சர்கள் ,முறைகேடுகளை ஊக்கப்படுத்திய சேலம் மாவட்ட ஆட்சியர் மகரம்,முறைகேடுகளுக்கு  பாதுகாப்பாக இருந்து புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்கை பதிவு செய்த காவல்துறை,அனைத்துக்கும் மேலாக கைகளை கட்டிக்கொண்டு திமுக கொடுத்த புகார்களை எல்லாம் வாங்கி தனது அலுவலகத்தையே குப்பை மேடாக்கிக் கொண்டு பின்னர் பணிவுடன் கண்டனங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் ஆகியோர்களுக்கு தான்.
முதலில் ஜெயலலிதா இவர்களுக்கு தனியே நன்றி தெரிவித்து அறிக்கை விட வே ண்டும்.
நன்றி மறப்பது நன்றன்று.






 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?