அந்த 49 நாட்கள்...!

டெல்லி முதல் அமைச்சராக இருந்த ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில், கட்சி தொடங்கிய 3-வது மாதத்திலேயே, மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல் அமைச்சர் ஆகி சாதனை படைத்தவர், அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே.
கடந்த டிசம்பர்  28-ம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்றதும், தனது வாக்குறுதியின் படி மின் கட்டணம் குறைப்பு, அதிக அளவு தண்ணீர் சப்ளை போன்ற நடவடிக்கைகளை பெற்று சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட சாதனையாளர், முதல் அமைச்சராக பதவி ஏற்ற 49நாளில் பதவி விலகி இருக்கிறார் என்றால், அதில் ஏதோ உள்ளான நோக்கு இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில்தான், யூனியன் பிரதேசமான டெல்லி மாநிலத்தின் காவல்துறை இருக்கிறது.  இது தெரிந்துதான் கெஜ்ரிவால், முதல் அமைச்சராகி இருந்துள்ளார்.   முதல் அமைச்சரான பின்பும், மத்திய அரசையும், டெல்லி காவல்துறையையும்  எதிர்த்து நடுரோட்டில் இறங்கி போராட்டம் நடத்திய கெஜ்ரிவால் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இப்படியாக முதல் அமைச்சரான பின்பும், எதிர்க்கட்சி போல கெஜ்ரிவால் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார்.
suransukumaran
சில நாட்களுக்கு முன், ஊழலை ஒழிப்பதற்காக  “ஜன் லோக்பால்  மசோதாவை” நிறைவேற்றப் போவதாக கெஜ்ரிவால்  பகிரங்கமாக அறிவித்தார்.  பொது இடத்தில் சட்ட பேரவையை கூட்டி, இந்த மசோதாவை நிறைவேற்றப்போவதாக அறிவித்து இருந்தார்.  அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் என்ன? என்று, அவரது ஆட்சிக்கு ஆதரவு அளி்த்த காங்கிரசுக்கு மட்டும் அல்ல, அவரது கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு கூட கெஜ்ரிவால் தெரிவிக்க வில்லை.
யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்தில் இருக்கும் டெல்லி மாநில அரசு உருவாக்கும்  எந்த ஒரு மசோதாவும், அது மாநில ஆளுனருக்கு அனுப்பப்பட்டு, அதனை அவர் மத்திய உள்துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றால்தான், குறிப்பிட்ட மசோதாவை சட்ட பேரவையில் தாக்கல் செய்ய முடியும் என்பதுதான்  நடைமுறை.
இந்த நிலையில் கெஜ்ரிவாலின் அரசு உருவாக்கிய  “ஜன் லோக்பால் ” மசோதாவுக்கு மத்திய சட்டத்துறை ஒப்புதல் அளிக்க வில்லை.  என்றாலும், ஜன் லோக் பால் மசோதாவை, டெல்லி சட்டபேரவையில் நிறைவேற்றப்போவதாக, கெஜ்ரிவால் அறிவித்தார்.
இதன்படி டெல்லி சட்டசபை கூட்டத்தில், ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரதீய ஜனதா, காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் இந்த மசோதாவை மத்திய அரசின் அனுமதி இன்றி, டெல்லி சட்டசபையில் நிறைவேற்றக்கூடாது என்றும், அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க கூடாது  என்றும் குறிப்பிட்டு, ஆளுநர் நஜீப் ஜங் அவசர கடிதத்தை , சபாநாயகருக்கு அனுப்பினார்.
ஆனால் ஆளுநரின் கடிதத்துக்கு மதிப்பு கொடுக்காத சபாநாயகர், ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யவும், அதன்மீது விவாதம் நடத்தவும் அனுமதி வழங்கி விட்டார். இந்த நடைமுறையை, பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து எதிர்த்தனர்.
suran
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர்  ஹர்ஷ் வர்த்தன், ஆளுநரின் அறிவுரையை மீறி , இந்த மசோதாவை தாக்கல் செய்திருக்க கூடாது என்றும், இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் இந்த மசோதாவை சபையில் நிறைவேற்றலாமா? அல்லது வேண்டாமா? என்பது பற்றி சபையில் ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். இதில் மசோதாவை நிறை வேற்றக்கூடாது என்பதற்கு 42 உறுப்பினர்களும், தாக்கல் செய்யலாம் என்று 27 உறுப்பினர்களும்  வாக்களித்தனர். இதனால், ஜன் லோக்பால் மசோதா, டெல்லி சட்டசபையில் நிறைவேற வில்லை.
அரசு கொண்டு வந்த மசோதா, சட்டசபையில் நிறைவேறாததால், முதல் அமைச்சர் பதவியில்  கெஜ்ரிவால் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கெஜ்ரிவால் பதவி விலகினார்.
சட்ட பேரவையை கலைத்து மீண்டும் தேர்தல் நடத்தவும், ஆளுநருக்கு டெல்லி அமைச்சரவை பரி்ந்துரை செய்துள்ளது. இதனால், ஆட்சி அமைத்து 49 நாட்களில் கெஜ்ரிவாலின் அரசு கவிழ்ந்து விட்டது. டெல்லி அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை. சட்டப் பேரவையைக் கலைக்காமல் குடியரசுத் தலைவரின் ஆட்சியை மட்டும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மீதும், மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மீதும் டெல்லி அரசு வழக்கு பதிவு செய்ததால்,  காங்கிரஸ் எங்களை வஞ்சம் தீர்த்து விட்டது என்று, கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
suran
28 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கொண்டிருந்த கெஜ்ரிவால்,  காங்கிரஸ் அளித்த ஆதரவினால் முதல்வர் பதவியை ஏற்றது, எப்போதுமே ஆபத்து தான் என்று அப்போதே ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அது உண்மை என்பது  இப்போது நிரூபிக்கப் பட்டுள்ளது.  காங்கிரசார், தங்கள் அரசியல் நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டனர். ஆனால் முதல்வர் பதவியில் இருந்த 49 நாட்களும்  கெஜ்ரிவால்    போராட்டம் ,உண்ணாவிரதம்  என்றுதான் பதவி காலத்தை கடத்தியுள்ளார்.
அவர் சொல்லிவருவது நாட்டிற்கு இப்போதைய கண்டிப்பான தேவைகள்தான் என்றாலும் அதை அவர் செய்யும் -செய்யத் துடிக்கும் வழி முறைகள் சரியானது அல்ல.அல்லது இன்றைய சட்ட நடைமுறைகளுக்கு சரிவராதவைஎனலாம்.
அவர் தான் செய்யத் துடிப்பதை அழகாக நிதானமாக இந்திய மக்கள் சாசனத்திற்கு உட்பட்டு செய்யலாம்.ஆனால் அப்படி செய்யக் கூடாது என்றே அவர்  படபடப்புடன் தவறான அணுகு முறைகள் மூலம் செய்து அனைத்தும் நந்தவனத்து ஆண்டி கதையில் வரும் மண் தோண்டி ஆக உடைத்து விட்டார்.அதற்கும் அவர்தான் முழுக்க காரணம் என்பது வேடிக்கையான  காரணமாகி  உள்ளது.
கையில் கிடைத்த அதிகாரத்தை வைத்து தனது கொள்கைகளை செயல்படுத்த தெரியாதவரை நம்பி இனியும் நாற்காலியை மக்கள் தருவார்களா?அப்படி தந்தால் போராட்டங்கள் நடத்துவது மட்டும் தான் தனது நற்பணி என்று செயல் படும் ஆம் ஆத்மிக்கள் ஒழுங்காக அதை இனியும் பயன் படுத்திக் கொள்வார்களா?சின்னமாக துடைப்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு கொடி  இல்லாமல் தேசியக் கொடியை பயன்படுத்துவது இனியும் நடைமுறைக்கு ஒத்து வருமா?வருங்காலத்தில் அதை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமா?
நல்லவராக இருந்தால் மட்டும் போதாது.செயல்படுத்தும் வல்லவராகவும் இருக்க வேண்டியது கட்டாயம்.
அதைத்தான் முதல்வரான கேஜ்ரிவாலின் அந்த  49 நாட்கள் ஆட்சி சொல்லித் தரும் பாடம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டற்ற களஞ்சியமாக இருக்கும்  Wikipedia இணையத்தளம்  இலட்சக்கணக்கான கட்டுரைகளை தன் தளத்தில்  கொண்டுள்ளது.

இணையத்தளத்தில் காணப்படும் இக்கட்டுரைகளை புத்தக வடிவில் அச்சிட்டு வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 1,000 பதிப்புக்களாக வெளியிடவுள்ள Pedia Press ஆனது இதற்கு 50,000 டாலர்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கின்றது.

இதற்கு தேவையான நிதியினை சேர்க்கும் பொருட்டு Indiegogo எனும் இணையத்தளத்தின் மூலம்  நிதி சேர்க்க  ஆரம்பித்துள்ளது.

------------------------------------------------------------------------------------------
"தவிர்க்க கூடாத 

காலை உணவு..!"


காலை உணவை தவிர்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு  உண்டு. அதற்கு எத்தனையோ காரணங்களை சொல்லுவார்கள்.
 வீட்டுவேலைப் பளு, சுவாமிக்கு பூஜை செய்யாமல் சாப்பிடுவதில்லை, காலை நேர பரபரப்பு போன்ற காரணங்களால் பெண்களில் பலரும், அலுவலகம், வியாபார விஷயமாக அவசரமாகச் செல்லும்போது ஆண்களும், அவசர அவசரமாக எழுந்து பள்ளிக்குப் புறப்படும் குழந்தைகளில் பலரும், நோய் காரணமாக முதியோர்களில் சிலரும் காலை உணவைத் தவிர்க்கின்றனர்.
suran
இதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைப்பதற்காக சிலரும் காலை உணவு சாப்பிடுவதையே தவிர்க்கின்றனர். இதனால், வயிற்றில் சுரக்கும் "ஹைட்ரோ குளோரிக்' அமிலம் வயிறு, குடல் பகுதிகளில் உள்ள திசுக்களை பாதிக்கத் தொடங்கி, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்தான் வருமே தவிர, உடல் எடை குறையாது.
வயிற்றில் உள்ள இரைப்பைக்குத் தேவையான உணவை குறிப்பிட்ட நேரங்களில் கொடுக்க வேண்டும். இல்லையெனில், இரைப்பை சுருங்கத் தொடங்கிவிடும்.
ஒருநேரம் பட்டினி கிடந்து, மற்றொரு நேரம் சேர்த்து சாப்பிடலாம் என நினைப்பதும் தவறு. இந்த தவறை வெளியூர்களில் தங்கி படிக்கும், பணிபுரியும் ஆண்களில் பலர் செய்கின்றனர். கால தாமதமாக தூங்கி எழுந்து நேரடியாக மதிய உணவுக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
மருத்துவர்கள், மருந்து சாப்பிடும்போது மூன்று, நான்கு வேளை என குறிப்பிடுவதுபோன்று, நாமும் உணவு சாப்பிடுவதில் கடைபிடித்தால் அஜீரணக் கோளாறு நோய்களிலிருந்து தப்பலாம்.
இடையிடையே நொறுக்குத்தீனி என்ற பெயரில் கிடைப்பதெல்லாம் சாப்பிடுவதும், சுகாதாரமற்ற எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களைச் சாப்பிடுவதால் உணவுக் குழாயில் எரிச்சல் ஏற்படுவதுடன், நோய் தாக்குதலுக்கான ஆரம்ப நிலையை உருவாக்குகிறது.
அண்மையில், "இந்தியர்களின் காலை உணவு பழக்கம்' என்ற தலைப்பில் கெலாக்ஸ் நிறுவனம் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையில் 3,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் காலை உணவைத் தவிர்ப்பதாகவும், நாடு முழுவதும் 72 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவாக உள்ள காலை உணவைச் சாப்பிடுவதாகவும் தெரியவந்தது. மேலும், பெண்களிடம் ஊட்டச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடுவதோடு, காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் அதிகம் காணப்படுவதாகத் தெரிவித்தனர்.
suran
ஊட்டச்சத்து குறைவான காலை உணவை சாப்பிடுவதில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு சாப்பிடுவதில் தில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும், சென்னை மூன்றாவது இடத்திலும் (38 சதவீதம் பேர்) உள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவைச் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை பெரும்பாலானோர் அலட்சியப்படுத்துவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
உடலுக்கு எப்படி ஓய்வு தேவையோ? அதேபோல் நமது இரைப்பைக்கும் ஓய்வு தேவை. அதற்காக பட்டினி கிடக்க வேண்டியதில்லை. இரவு நேரத்தில் குறைவாக சாப்பிட்டு, இரைப்பைக்கு ஓய்வு கொடுப்போம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?