"இந்தியா" வறட்சி வருகை.....!

suran

இந்தியாவில் மோடி அலை வீசுகிறது.[வீசுகிறதுக்கு இன்னமும் ஓர் அர்த்தம் உள்ளது.]

மோடி பிரதமாரானால் இந்தியாவை தூக்கி உலகிலேயே முதலிடத்துக்கு கொண்டுவந்து வைத்து விடுவார் என்றெல்லாம் இந்த சில நாட்களாக கேட்டு காதுகளே அடைத்து விட்டது.

இப்போது இந்தியா எதிர் கொண்டுள்ள சோதனையை மோடி தனது மோடி வித்தை மூலம் சரி செய்து விடுவாரா?

சரி.இந்தியா இப்போது எதிர் கொண்டுள்ள இயற்கை சிக்கல் என்ன என்று முதலில் பார்த்து விடலாம்.

இந்தியாவை மீண்டும் எல்-நினோ தாக்கும் அபாயம் உள்ளதாகவும், அதனால் விவசாயம் பாதிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் ஆழ்கடலில் வெப்பநிலை அதிகரித்து, அதன் விளைவாக தென் ஆசிய நாடுகளில் மழை இல்லாமல் வறண்டு விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வு எல்-நினோ என்று அழைக்கப்படுகிறது.
suran

இந்த எல்-நினோ ஏற்கனவே, இந்தியாவில் கடந்த 2002 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது.
மேலும் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்-நினோவின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு விலைவாசி விஷம் போல் ஏறியது.
அப்போது நமது அரசுகள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

அதேபோல், இந்த 2014 -ஆண்டும் இந்தியாவில் எல்-நினோ உருவாகும்  அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய் துள்ளது.

இதுகுறித்து விடுத்துள்ள எச்சரிக்கையில், ''கடந்த காலங்களில் ஏற்பட்ட எல்-நினோவின் காரணமாக எவ்வளவு வெப்பநிலை நிலவியதோ அதே வெப்பநிலை இந்த ஆண்டும் நிலவும்.
அதன் காரணமாக மழை குறைவாக பெய்யும். குறிப்பாக தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களான ஜுன் முதல் செப்டம்பர் மாத காலங்களில் பசிபிக் கடற்கரையோர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

எல்-நினோவின் காரணமாக வழக்கமாக பெய்யும் மழையளவை விட இந்த ஆண்டு 23 சதவிகிதம் மழை குறைவாக பெய்யும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டு மொத்த விவசாயமும் மழை பொழிவை நம்பியிருக்கும் சூழலில் மழையளவு குறையும் என்பதால் விவசாயிகளை மிகவும் பாதிக்கும் எனத் தெரிகிறது.
சென்ற ஆண்டே மழையின் அளவு தமிழத்தில் குறைந்து விட்டது .அதனால் ஆங்காங்கே குடி நீர் பிரச்னை தலை தூக்கி மக்களை காலிக் குடங்களுடன் தெருவில் இறங்கி போராட வைத்துள்ளது.குடிநீர் விநியோகத்தில் நிர்வாக முறைகேடுகள் ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் பாதிப்பும் உள்ளது.
அது இந்தியா முழுக்க வறட்சி பாதிப்பும் -மழையளவு குறைவும் என்றால்
மக்கள் பாடு ?
யார் மோடி வித்தையும் இயற்கையின் முன் எடுபடாது!
suran






-------------------------------------------------------------------------------------------------------------------------









ஆ.ராசா-தயாளு அம்மாள் -கனி மொழி!

மூவர் மீதும் குற்றப் பத்திரிகை!

இந்தியாவில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தி.மு.க. கட்சியின் தலைவர் மு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது மத்திய அமலாக்கப் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
suran

2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி வரை நிதி வழங்கியுள்ளது என்று சிபிஐ எழுப்பிய சர்ச்சைக்கு கலைஞர் தொலைகாட்சி தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், டி. பி. குரூப் நிறுவனமான சினியூக் பிலிம்ஸிடமிருந்து பங்குகள் பரிவர்த்தனைக்காக 214 கோடி ரூபாய் முன்பணமாகப் பெறப்பட்டதாகவும், ஆனால் பங்கு விலையை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகை, வட்டியுடன் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும், அது வருமான வரித்துறைக்கும் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கனிமொழி
கனிமொழி

அத்தோடு அந்தப் பணம் லஞ்சமாகப் பெறப்பட்டது இல்லை என்றும், கடன் தொகையாக பெறப்பட்டது என்றும் கூறி அதற்கு தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ள மத்திய அமலாக்கப் பிரிவு, ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடர்பில் ஏப்ரல் 30ம் தேதி அன்று நடைபெறும் விசாரணையின் போது சிறப்பு நீதிமன்றம் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த டி பி ரியால்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்வான் டெலிகாம், முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயனடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து 214 கோடி ரூபாயை வேறு நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு அந்நிறுவனம் வழங்கியதாகவும் புகார் கூறப்பட்டது. இதே வழக்கில் கலைஞர் டிவியின் நிர்வாகிகள் ராஜேந்திரன், அமிர்தம் ஆகியோர் ஏற்கனவே சாட்சியம் அளித்துவிட்டனர்.

கலைஞர் தொலைகாட்சியில் 60% பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாளையும் சாட்சியாக வழக்கில் இணைத்து இருந்தனர். இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தை காரணம் காட்டி நீதிமன்றம் சென்ற தயாளு அம்மாளை, உச்சநீதிமன்றம் டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதன் பின்னர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளை விசாரித்து சாட்சியத்தை பதிவு செய்தார்.

தயாளு அம்மாள்
தயாளு அம்மாள்

கடந்த 2011ம் ஆண்டில் நவம்பர் மாதம் துவங்கிய இந்த வழக்கின் விசாரணையில், சிபிஐ தரப்பில் சமர்பிக்கப்பட்ட இரண்டு குற்றப்பத்திரிக்கைகளில் 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெயர்கள் உட்பட 17 பேரின் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து தற்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

ஏற்கனவே ஏ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரின் வாக்குமூலம் பதிவு செய்ய இருந்த தினத்தின் போது, கிட்டத்தட்ட 824 பக்கங்களில் உள்ள 1,718 கேள்விகளுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கோரியதை அடுத்து சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சாய்னி இந்த வாக்குமூலங்களை பதிவு செய்யும் தினத்தை மே மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால் கேள்விகள் அடங்கிய கோப்புகள் நான்கு மாதங்களுக்கு முன்னரே அவர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டன என்பதையும் நீதிபதி அப்போது சுட்டிக்காட்டினார்.
suran

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது, கிரிமினல் சதித்திட்டம், மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், லஞ்சம் பெறுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------------------------------------------------

 

suran
 மே 9ல் வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது;
: மாணவர்கள், மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல், www.tnresults.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம்.
\நான்காவதாக, www.dge1.tn.nic.in, என்ற இணையத்திலும், "ஸ்மார்ட் போன்' மூலம், முடிவைப் பார்க்கலாம்.

இணையதளத்தில் பார்க்க, தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும்.
 தேர்வு முடிவை, மதிப்பெண்களுடன், 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம்.
 இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.
  மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு முன், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கூடாது. மாவட்டங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம். மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு, நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம்.

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?