தோழர் உமாநாத்

தமிழகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர். உமா நாத். 1921 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதியன்று ராம்நாத் ஷெனாய்-நேத்ராவதி தம்பதியின் கடைசிப் புதல்வனாகப் பிறந்தார். பெற்றோர், ஐந்து சகோதரிகள் , ஒரு சகோதரர் என ஒன்பது பேர் கொண்ட குடும்பம் அது! உணவு தானிய வியாபாரம் செய்து வந்த தந்தையார் அதில் ஏற்பட்ட நஷ்டத்தினால் துவண்டு போனார். சிறிது காலத்திற்குப் பின் காலமானார். தாயாரோ குடும்ப கவலையினால் பக்தியில் மூழ்கிப் போனார்.உமாநாத்தின் இளமைக் காலம் முழுவதும் துயரம் நிறைந்ததாகவிருந்தது. கண்ணனூரிலிருந்த மாமா வீடு, ராஜமகேந்திரபுரத்திலிருந்த மூன்றாவது சகோதரியின் வீடு, தலைச்சேரியிலிருந்த மூத்த சகோதரியின் வீடு என அவர் அலைய வேண்டியிருந்தது.

மூத்த சகோதரியின் கணவர் கோழிக்கோட்டிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டபின் உமாநாத் தும் அந்தக் குடும்பத்துடன் அங்கே சென்றார். மூத்த சகோதரியின் மூத்த மகன் திவாகர். கம்யூனிஸ்ட் கட்சி சார்பு மாணவர் சம்மேளன உறுப்பினர். அவர் மூலம்தான் உமாநாத் முதன்முறையாக மார்க்சியம் குறித்து அறிந்து கொண்டார்.மூத்த சகோதரர் கேசவராவிற்கு காப் பீட்டுக்கழக முகவர் வேலை கிடைத்ததால் அவர் குடும்பத்துடன் வெஸ்ட்ஹில் என்ற இடத்திற்கு குடி பெயர்ந்தார். மார்க்சியத் தாக்கம்உமாநாத்தும் அவருடன் தங்கிப் படித்தார். பள்ளிப்படிப்பை முடித்த உமா நாத் கோழிக்கோட்டிலிருந்த கிறிஸ்தவ கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். பல நாட்கள் மதியத்தில் பட் டினி. கல்லூரி முதல்வர் இதை அறிந்து கல்லூரி விடுதியில் அவருக்கு இலவச மதிய உணவு கிடைக்க வழி செய்தார்.அந்தக் கல்லூரியில் மாணவர் சங்கம் பலமாகவிருந்தது. அது உமாநாத்தையும் ஈர்த்தது. மார்க்சியத் தாக்கம் அவரை ஆட்கொண்டது. 1938 ஆம் ஆண்டில் இன்றைய மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மங்கட பள்ளிப்புரம் என்ற இடத்தில் அரசியல் வகுப்பு ஒன்றை கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி நடத்தியது. ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த வகுப்பில் உமாநாத்தும் கலந்து கொண்டார்.
suran
இந்த வகுப்புகளை இ.எம்.எஸ், நம்பூதிரிபாத், கிருஷ்ணபிள்ளை, சுப்ரமணிய சர்மா போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் நடத்தினர். இதில் கலந்து கொண்ட மாண வர்களான வி.பி.சிந்தன், இம்பிச்சி பாவா, என்.இ.பலராம், ராமச்சந்திரநெடுங்காடி போன்றோர் பின்னாட்களில் உமாநாத் போன்று பிரபல கம்யூனிஸ்ட் தலை வர்களானார்கள். இந்த வகுப்பானது கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் உமாநாத் நெருங்கிப் பழக வாய்ப்பளித்தது.இச்சமயத்தில் உமாநாத், வெஸ்ட்ஹில் கிராம காங்கிரஸ் கமிட்டியின் பொருளாள ரானார்.இதன் பின்னர் 1939 ஆம் ஆண்டில் கோட்டக்கல் நகரில் நடைபெற்ற காங்கி ரஸ் கமிட்டியின் மாநாட்டின் போது கம்யூ னிஸ்ட் கட்சி தயாரித்திருந்த ஏகாதிபத்திய - எதிர்ப்பு சட்ட விரோத பிரசுரத்தை உமாநாத்தும், வி.பி.சிந்தனும் ரகசியமாக விநியோகித்தனர்.இண்டர் மீடியட் வகுப்பில் தேறிய உமாநாத் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்புக் காகச் சேர்ந்தார். சுப்ரமணிய சர்மாவின் அறிமுகக் கடிதத்துடன் வந்த அவர், பல்கலைக்கழகத்திலிருந்த கம்யூனிஸ்ட் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கே.முத்தையா அந்தக்குழுவின் செயலாளராவார்.
அங்கேயும் உமாநாத் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி இருந்தது.அச்சமயத்தில் சென்னையிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைமையிடமிருந்து முத்தையாவிற்கு கடிதம் ஒன்று வந்தது. சென்னையிலுள்ள தலைமறைவு மையத்திலிருந்து வேலை செய்யவும், தமிழ்நாடு முழுவதும் தகவல்கள் கொண்டு செல்லவும் கூடிய “கூரியர்” ஒருவர் தேவை என அதில் கேட்கப்பட்டிருந்தது. முத்தையா இது குறித்து உமாநாத்திடம் கேட்கவும், அவர் அதற்குச் சம்மதித்தார். கல் லூரிப் படிப்பைக் கைவிட்டு சென்னை சென்றார்.
சென்னை சதி வழக்கு
அவர் சென்னை தியாகராய நகரி லிருந்த கட்சியின் தலைமறைவு மையத் தில் பி.ராமமூர்த்தியுடன் சேர்ந்து செயல் பட்டார். சைக்ளோ இயந்திரத்தில் பிரதிகள் எடுப்பது, மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வது போன்ற வேலைகளை அவர் செய்தார். இதே போன்று பெரம்பூரில் மற்றொரு தலைமறைவு மையம் செயல் பட்டது. அங்கே மோகன் குமாரமங்கலம், சி.எஸ்.சுப்ரமணியம், அனுமந்தராவ், சுப்ரமணியசர்மா, கேரளியன் போன்றோர் இருந்தனர்.1940 ஆம் ஆண்டில் ஒரு நாள் இவ்விரு தலைமறைவு மையங்களையும் காவல்துறையினர் கண்டு பிடித்து அனைவரையும் கைது செய்தனர்.
சென்னை கம்யூனிஸ்ட் சதி வழக்கு என்ற பெயரில் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர்.விசாரணை முடிவில் பி.ராம மூர்த்திக்கு 4 ஆண்டுகால சிறைத்தண்ட னையும், உமாநாத்திற்கு இரண்டரை ஆண்டு தண்டனையும், இதரர்களுக்கு வெவ்வேறு கால அளவு தண்டனைகளும் விதிக்கப்பட்டன. இவர்களில் உமாநாத் தான் வயதில் மிகவும் இளையவர்.இருவருக்கும் “சி” வகுப்பு தரப்பட்டது. மூவருக்கு “ஏ” வகுப்பு தரப்பட்டது. உமா நாத்தும், ராமமூர்த்தியும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டனர்.1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத் தில் இரண்டாம் உலகயுத்தத்தில் ஏற்பட்ட திருப்பத்தைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீக்கப்பட்டு கம்யூனிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறை மீண்ட உமாநாத் மாணவர் சங்கத்தை பலப்படுத்தும் பணியில் இறங்கினார்.சில மாதங்களுக்குப் பிறகு கட்சித்தலைமை அவரை கோவை பஞ்சாலைத் தொழிலாளரிடையே பணியாற்றும் பொருட்டு கோவைக்கு அனுப்பியது.கோவையில் அவர், கே.ரமணி, எஸ்.கிருஷ்ணன், கண்ணாகுட்டி, பி.கே.ராமசாமி, ஆர்.கே.கண்ணன் போன்றோருடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியையும் , பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தையும் பலப்படுத்தும் பணியில் இறங்கினார்.தொழிலாளி வர்க்கத்தினரிடையில் இடையறாது பாடுபட்டதானது அவருக்கு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது என்பதுடன் அவரை பிரபலமடையவும் செய்தது.

1946 ஆம் வருட ஸ்டேன்ஸ் மில் போராட்டத்திற்குப் பிறகு உமாநாத் தலைமறைவானார். ஆனால் சில நாள் கழித்து பிடிபட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு நாள் அதிகாலையில் கண்ணாகுட்டியும், உமாநாத்தும் கோவை சிறையிலிருந்து தப்பினர். பல இடங்களில் தங்கி, இரவில் பயணம் செய்து அவர் கோழிக்கோட்டிற்கு வந்தார். பல வருடங்களுக்குப்பின், முதன் முறையாக அவர் வீட்டிற்குச் சென்று தாயாரைக் கண்டார். இதுதான் அவருடைய கடைசி சந்திப்பு.
மத்தியக்குழு அலுவலகம்
அங்கிருந்து பம்பாய்க்குச் சென்ற உமாநாத், கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் பணியாற்றினார்.1948ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. எனவே, தமிழ்நாடு கமிட்டி கேட்டுக் கொண்டதற்கிணங்க கட்சித்தலைமை உமாநாத்தை கோவைக்கு அனுப்பியது. ஆனால் வரும் வழியில் அவருக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டதால் மூன்று மாத காலம் சென்னையில் தலைமறை வாகயிருந்து சிகிச்சை பெற்றார். பின்னர் திருச்சிக்கு அனுப்பப்பட்டார். 1949 ஆம் ஆண்டில் ரயில்வே வேலை நிறுத்தம் தோல்வியடைந்தபின், உமாநாத் சென்னை பல்லாவரத்திலிருந்த தலை மறைவு மையத்திற்கு வந்தார்.
அங்கே எம்.கல்யாணசுந்தரம், பாப்பா, அவரது தாயார் லட்சுமி, பி.எம்.சுப்பிரமணியம், ஜி.ஆளவந்தார் மற்றும் எம்.பாண்டியன் உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர். சில மாதங்களுக்குப் பின் காவல்துறையினர் அந்த இடத்தைக் கண்டுபிடித்து அனை வரையும் கைது செய்தனர். தப்ப முயன்ற உமாநாத்திற்கு காலில் பலத்த அடி.கைதான அனைவரும் சைதாப்பேட் டை கிளைச்சிறைச்சாலையில் அடைக்கப் பட்டனர். சிறையில் அனைவரும் கடுமை யாகத் தாக்கப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் உண்ணாவிரதம் தொடங்கினர். பின்னர் அனைவரும் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அங்கும் உண்ணாவிரதம் தொடர்ந்ததால் உண்ணாவிரதத்தின் 24வது நாளில் அன்னை லட்சுமி மரணமடைந்தார்.
திருச்சி சதி வழக்கு
இதற்கிடையில் பாரிஸ்டர்கள் வி.ஜி. ராவும், ஏ.ராமச்சந்திரனும், இப்பிரச்சனை மீது அரசுடன் பேசினர். இதன் விளைவாக 24 மணி நேரமும் சிறை கொட்டடிக்குள் பூட்டி வைப்பது நிறுத்தப்பட்டது. 26வது நாள் உண்ணாவிரதம் முடிவுற்றது. 1951 ஆம் ஆண்டில் கட்சி மீதிருந்த தடை நீக்கப்பட்டது. ஆனால் திருச்சி சதிவழக்கில் உமாநாத் சேர்க்கப்பட்டிருந்ததால் அவர் விடுதலை செய்யப்படவில்லை. திருச்சி சதிவழக்கில் அவர்தண்டிக்கப்பட்டார். 1954 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று உமாநாத்தும், இதர தோழர்களும் விடுதலையாயினர். அக்டோபர் 9ம் நாள் உமாநாத்- பாப்பா திருமணம் பொன்மலையில் நடைபெற்றது.
இத்தம்பதியினருக்கு லெட்சுமி நேத்ராவதி, வாசுகி, நிர்மலா ராணி என்ற மூன்று மகள்கள் பிறந்தனர்.1952-63 கால கட்டத்தில் உமாநாத் புதுக்கோட்டை காவிரி மில் தொழிலாளிகளின் பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். வேலைப்பளுவை எதிர்த்து உறுதிமிக்க போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார். திருச்சி பீடித் தொழிலாளர் போராட்டங்களுக்கு வழிகாட்டினார். நமன சமுத்திரம் மில் தொழிலாளர்களுக்காக 10 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். 11 வது நாளில் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிவுற்றது. பின்னர்,பழிவாங்கப்பட்ட 160 தொழிலாளி களுக்கும் வேலை கிடைத்தது.
நாடாளுமன்றத்தில்...
1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் திமுக- கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. இத்தேர்தலில் உமாநாத், புதுக்கோட்டை நாடாளு மன்றத்தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவ்வாண்டின் இறுதியில் இந்தியா-சீனா எல்லை மோதலையொட்டி நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் உமாநாத்தும் ஒருவர். 1963 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார்.1964 ஆம் ஆண்டில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியில் பிளவேற்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது உமாநாத்தும், பாப்பாவும் தங்களை அதில் இணைத்துக் கொண்டனர்.
suran
அவ்வாண்டின் இறுதியில் நாடு முழுவதிலும் 1000க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது, உமாநாத்தும், பாப்பாவும் கைது செய்யப்பட்டனர். உமாநாத் கடலூர் மத்திய சிறையிலும், பாப்பா வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். 16 மாத காலத்திற்குப்பின் இருவரும் விடுதலையாயினர்.1967 ஆம் ஆண்டில் உமாநாத், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக புதுக் கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுவின் கொறடாவாகச் செயல்பட்டார். ஆங்கிலத்தில் சிறப்பாகப் பேசும் உமாநாத் மக்க ளவையின் பிரபலமான உறுப்பினர்களுள் ஒருவராக விளங்கினார்.1966-1990 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 24 ஆண்டு காலத்தில் அவர் பல சங்கங்களுக்குத் தலைமை தாங்கினார்.
புதுக்கோட்டை காவேரி மில், கரூர் மில், பேட்டை வாய்த்தலை சர்க்கரை ஆலை திருச்சி சிம்கோ மீட்டர் தொழிற்சாலை, கரூர் நெசவுத்தொழில், பீடித் தொழில், புகளூர் சர்க்கரை ஆலை, டால்மியாபுரம் சிமிண்ட் ஆலை போன்றவற்றிலுள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை உமாநாத் தலைமை தாங்கி நடத்தினார். திருச்சி பாரத் மிகு மின் நிலைய தொழிலாளர் சங்கத்தின் தலைவராகயிருந்தார்.
சட்டமன்றத்தில்...
1977ம் ஆண்டில் நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உமாநாத், சட்டமன்றத்திலும், தனது முத்திரையைப் பொறித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழுவின் உபதலைவராகவும் செயல்பட்டார். 1980ம் ஆண்டு நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து மீண்டும் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.ஒன்றாகயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பின ராகச் செயல்பட்ட உமாநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினராகவும், 1978 ஆம் ஆண்டிலிருந்து கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் 1991 ஆம் ஆண்டிலிருந்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.
கோவையில் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 19வது அகில இந்திய மாநாட்டில் வரவேற்புக்குழுத்தலைவராக செயல்பட் டார். அதே காங்கிரசில் அவர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மூத்த புதல்வி டாக்டர் லட்சுமி நேத்ராவதி புற்று நோயால் காலமானார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது துணைவியார் பாப்பா உமாநாத் காலமானார்.2012ம் ஆண்டில் கோழிக்கோட்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் அவர் மத்தியக்குழு சிறப்பு அழைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் இறுதிக்காலம் வரை தன் கடைசிப் புதல்வி வழக்கறிஞர் நிர்மலா ராணியின் பராமரிப்பில் இருந்து வந்தார். சிஐடியுவின் தமிழ் மாநில பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் பல ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.
சிஐடியுவின் அகில இந்திய அமைப்பிலும் பல பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பில் பலநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.தொழிலாளி வர்க்க லட்சியத்திற்காக 7 ஆண்டு சிறைவாழ்வையும், 4 ஆண்டு தலைமறைவு வாழ்வையும் அவர் சந்தித்துள்ளார் என்பதே அவரது பெருமைக்குச் சான்றாகும்!

நன்றி:தீக்கதிர். .

suran

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?