இணைய முதல்வர்கள்

நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர். 
இவர்களில் சிலர், முக்கிய சில திருப்பங்களை இணைய வளர்ச்சியில் ஏற்படுத்தி பங்காற்றியுள்ளனர். 
அவர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் இங்கு காணலாம்.
1. மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreesen):
 Mosaic என்னும் பிரவுசரை உருவாக்கியவர். முதல் நிலையில், இணையத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றதில், இந்த பிரவுசருக்கு இடம் உண்டு. பின்னால், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற இணைய பிரவுசரை உருவாக்குவதில் இவர் அதிகம் துணை புரிந்தார். 1990 ஆம் ஆண்டுவாக்கில், இணையப் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்த போது, இந்த பிரவுசரின் இடமும் முதல் இடத்தில் இருந்தது. 
2. விண்ட் செர்ப் (Vint Cerf): 
இணையத்தை உருவாக்கிய தந்தை என, Bob Kahnஎன்பவரோடு சேர்த்து அழைக்கப்படுபவர் விண்ட் செர்ப். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணி அதிகம் உதவியது. இவர் அமைத்த MCI mail சிஸ்டம் தான் இன்றைய மின் அஞ்சல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது. இணைய பெயர்களை வரையறை செய்திடும் ICANN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers என்னும் அமைப்பினை உருவாக்கிய முன்னோடி இவர்.
suran
3. இராபர்ட் பாப் கான் (Robert “Bob” Kahn): 
இவருடைய தோழரும் உடன் பணியாற்றியவருமான விண்ட் செர்ப் போல இவரும் இணையத்தை உருவாக்கிய தந்தை என அழைக்கப்படுகிறார். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணியும் அதிகம் உதவியது. இவர் ஆய்வுகளை மேற்கொள்ள உதவியாக Corporation for National Research Initiatives (CNRI) என்னும் அமைப்பினை உருவாக்கினார். இந்த அமைப்பு நெட்வொர்க் தொழில் நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்தியது. 
4. லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் (Larry Page and Sergey Brin): 
ஆய்வுத் திட்டமாக முதலில் கூகுள் என்ற ஒன்றைத் தொடங்கியவர்கள் இவர்கள். அப்போது ஸ்டான்போர்ட் பல்கலையில் மாணவர்கள். இவர்கள் உருவாக்கிய கூகுள் கட்டமைப்பு இணையப் பயனாளர்கள் தகவலைத் தேடி அறிவதில் புதிய வழிகளை மாற்றிக் காட்டியது. இன்று Google.com என்பது இணையத்தின் மாறா நிலை தளமாக இயங்கி வருகிறது. 
5. ஜிம் கிம்சி (Jim Kimsey): 
இணைய சேவை வழங்குவதில் உலகிற்கே முன்னோடியாக விளங்கும் AOL நிறுவனத்தை நிறுவி, அதன் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றியவர். ஒரு சமயம், இந்நிறுவனத்தின் இணைய சேவையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. இணையத்தில் ஒருவருக் கொருவர் நேரடியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் internet chat மற்றும் instant messaging இவர் நிறுவனத்தால் பிரபலமாகியது. மேலும், தங்களுக்கேற்ற வகையில் இணைய தளத்தினை உருவாக்கிய வழிகளும் இவர் தந்தவையே. 
6. ஹெடி லமார் (Hedy Lamarr)
இவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த நடிகை. 1930 முதல் 1950 வரை பிரபல நடிகையாக இருந்தவர். இவர் ஜார்ஜ் அன் தெய்ல் (George Antheil) என்பவருடன் இணைந்து அலைவரிசையைத் தாண்டி தகவல்கள் அனுப்பும் முறையைக் கண்டறிந்தார். அதுவே பின்னாளில், வயர் இணைப்பு இல்லாத இணையத்திற்கு அடிகோலியது. 
7. ஜெப் பெஸோஸ் (Jeff Bezos): 
அமேஸான் நிறுவனத்தை உருவாக்கிய அதன் தலைமை நிர்வாகி. இணைய வழி வர்த்தகத்தினைக் கொண்டு வந்து இன்று பல நாடுகளில் அதனையே நடைமுறையாகக் கொண்டு வந்தவர். இணைய வர்த்தகத்தில் நம்பிக்கை வைத்திடும் பழக்கத்தினை இவரது நிறுவனம் மக்களிடையே விதைத்து ஊன்றியது. இணையம் வழி மக்கள் எதனையும் வாங்கலாம் என்ற சித்தாந்தத்தை மக்கள் நம்பும்படி வளர்த்தது இந்த நிறுவனம் தான். 
8. ரே டாம்லின்சன் (Ray Tomlinson): 
suran

1970 ஆம் ஆண்டுகளில், ARPANET என்னும் மின் அஞ்சல் கட்டமைப்பினை உருவாக்குவதில் பெரிதும் உதவியவர். பயனாளரையும், அவருக்கான சர்வர் கம்ப்யூட்டரையும் "÷” என்ற அடையாளம் இட்டு வேறுபடுத்தி அஞ்சல் முகவரி யினை முதல் முதலில் அமைத்துப் பயன்படுத்தியவர் இவரே. 
9. இலன் மஸ்க் (Elon Musk):
 X.com என்ற நிதி சார்ந்த இணைய தளத்தின் தலைவர் இவரே. Confinity என்ற நிறுவனத்தை வாங்கி, பின்னாளில் Paypal என்னும் இணைய நிதி நிறுவனத்தை உருவாகியவர் இவர். இதில் இவருக்கு Max Levch in, Peter Thiel, Luke Nosek, மற்றும் Ken Howery. ஆகியோர் துணைபுரிந்தனர். 
10. டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee): 
இன்றைய இணையத்தை அதன் தொடக்க நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி, மாற்றங்களை அறிமுகப்படுத்தியவர்கள் பலர். இதில் world wide web என்ற கட்டமைப்பினை உருவாக்கிய டீம் பெர்னர்ஸ் லீ என்பவருக்குச் சிறப்பான இடம் உண்டு. இணையத்தில் டேட்டா பரிமாற்றத்திற்கான அடிப்படை வழிமுறையான Hypertext Transfer Protocol (HTTP) என்பதனை உருவாக்கித் தந்தவர் இவர்.
Click Here

suran

suran





suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?