2ஜி,ஊழல். மன்மோகன் சிங் குக்கு பொறுப்பு.



இந்த ஊழல்களை அம்பலப்படுத்திய போது மத்திய கணக்கு தணிக்கையாளராக இருந்தவர் வினோத் ராய். பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், ஒரு கணக்காளன் மட்டும் அல்ல என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தில் இந்த இரு ஊழல்கள் குறித்து அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் மன்மோகன் சிங் மீது குறை கூறி இருக்கிறார்.இந்த புத்தகம் இம்மாத்தில் விைரைவில் வெளிவர உள்ளது.இந்நிலையில், வினோத் ராய், அளித்த பேட்டியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு இந்த இரு விவகாரங்களில் தனக்குள்ள பொறுப்பில் இருந்து தப்பிக்க மன்மோகன் சிங்குக்கு எந்த வழியும் கிடையாது. 
2ஜி ஒதுக்கீடு தொடர்பாக ராசா எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் மன்மோகன் சிங் பதில் எழுதி இருக்கிறார்.
நான் எழுதிய கடிதத்துக்கு மன்மோகன் சிங்கிடம் இருந்து ஒரு பதில் கூட கிடையாது. ஒரு சமயம் நான் அவரை சந்தித்த போது, என்னிடம் இருந்து நீங்கள் பதிலை எதிர்பார்க்க மாட்டீர்கள் என கருதுகிறேன் என்றார். 
அந்த சமயத்தில் அவர் ராசாவுக்கு ஒரு நாளைக்கு இருமுறை பதில் அளித்தார். அப்படி இருக்கும் போது, எடுக்கப்பட்ட முடிவுகளில் அவர் எப்படி பொறுப்பாளி ஆகாமல் இருக்க முடியும்? எப்படி அவருக்கு தெரியாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க கூடும்.ராசா கூறியபடி மன்மோகன் சிங் அறிவுரைபடியேதான் இந்த 2ஜி ஏலம் நடந்துள்ளது.
மன்மொகன் சிங் நிதி ரீதியாக மட்டுமல்லாமல், அறிவுப்பூர்வமாகவும், செய்யும் பணியிலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். 
அரசியல் சாசனப்படி உறுதிமொழி ஏற்றதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட முடியாது. அதுதான் அவருக்கு மிகுந்த கவலையாகிவிட்டது.
மன்மோகன்சிங், நினைத்திருத்திருந்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசாவின் செயல்பாடுகளை  தடுத்து நிறுத்தியிருக்க முடியும் .
"அரசுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கணக்கு தணிக்கை துறை மதிப்பீடு செய்த முறை தவறானது" என்று நவம்பர் 16-ந் தேதி மன்மோகன் சிங் என்னிடம் கூறினார். 
அதற்கு நான் அவரிடம், 'சார் எங்கள் மதிப்பீடு சரியான முறையில் செய்யப்பட்டதுதான், அது நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முறைதான்எ"ன்று பதில் அளித்தேன்.
இவ்வாறு வினோத் ராய் கூறினார்.
இந்த விஷயத்தில் பிரணாப் முகர்ஜியின் தரப்பில் இருந்து ஒன்றிரண்டு அறிக்கைகள் வெளியானதை தவிர வேறு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்றாலும் மத்திய கணக்கு தணிக்கை குழுவுக்கு எதிர்க் கட்சி ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.
அந்த அறிக்கையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற தொகை இடம் பெறாமல் இருந்திருந்தால் உங்களில் எத்தனை பேர் அந்த அறிக்கையை கவனத்தில் கொண்டு இருப்பீர்கள்? நான் எச்சரிக்கை மணி அடிக்க விரும்பி அதை செய்து முடித்ததாக கூறினார்.
save image
நிலக்கரி ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு குறித்தும் மன்மோகன்சிங்கிற்கும் தெரியும்.இது குறித்து அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்தும் மன்மோகன்சிங், அவரை அலட்சியபடுத்தினார்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் 2-3 பிரச்னைகளை கொண்டு சென்றேன்.அவர் உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுத்தார் என்றார் வினோத் ராய்.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு மன்மோகன் சிங் பொறுப்பு என முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் குற்றம்சாட்டியிருக்கிறார்.ராசா தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.இதேபோல், பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் நிலக்கரி இலாகா பொறுப்பையும் கவனித்த போது, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதற்கும் மன்மோகன் சிங்கின் நிர்வாகமே பொறுப்பு " என்றும் அந்த குழு தனது அறிக்கையில் கூறி இருந்தது.
ஆனால் இந்த ஊழல்களில் ஆ.ராசா மட்டுமே சிக்க வைக்கப் பட்டுள்ளார்.
வினோத் ராய் வெளியிடும் இந்த புத்தகம் 2ஜி வழக்கின் போக்கை மாற்றும் என்று தெரிகிறது.ஏற்கனவே சி.பி.ஐ இயக்குனர் வேறு மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.இப்போது மன்மோகன் சிங்.அடுத்து ப.சிதம்பரம்,சோனியா என்று வரிசையில் வருவார்களா?
2ஜி ஊழலில் மலை முழுங்கி மகாதேவன்கள் கண்டு கொள்ளப்படாமல் இருக்க கையை நக்கியவன் போன்றவர்கள் தான் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் என்பதுதான் வினோத் ராய் புத்தகத்தின் பொழிப்புரை.
திட்டமிட்டே ராசா,போன்ற திமுக கூட்டணிக் கட்சினரை காங்கிரசார் மாட்டிவிட்டுள்ளனர்.
ஆனால் கெட்டிக்காரன் புளுகே எட்டு நாட்களுக்குத்தான்  தாக்குப்பிடிக்கும் என்பது மீண்டும் நிருபணம் ஆகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?