கங்கையும் பாவமும்.

இந்தியாவின் 23 வது பணக்காரர்?

சன் தொலைக்காட்சி உரிமையாளர் கலாநிதி மாறன் தான் இன்று  இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் நிறுவன தலைவராக இருக்கிறார்.சொத்து மதிப்பில் இந்திய அளவில் 23வது பனக்காரர்.
இந்திய கார்ப்பரேட்டுகளிலேயே அதிக அளவில் ஊதியம் பெறுபவர்கள் சன் குழுமத்தின் செயல் தலைவர் கலாநிதி மாறன் மற்றும்செயல் இயக்குநரான அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகிய இருவருமாவார்கள் என்று தெரிய வந்திருக்கிறது
.2013-14ஆம் ஆண்டில் அவர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் 59.89 கோடி ரூபாயாகும். 
இதில்அவர்களுடைய அனைத்துவிதமான படிகள் மற்றும் சலுகைகளும் இதில் அடக்கம்.சன் குழுமத்தின் 2013-14ஆம் ஆண்டு ஆண்டறிக்கையின்படி, எக்சிகியூடிவ் சேர்மனான கலாநிதி மாறன், 13.1 கோடி சம்பளமாகப் பெற்றார். சலுகைகள் மற்றும் இதர படிகள் என்கிற விதத்தில் 46.7 கோடி ரூபாய்பெற்றார். இதே அளவிற்கான தொகைகளை காவேரி கலாநிதியும் எக்சிகியூடிவ் இயக்குநர் என்ற முறையில்பெற்றார்.
 2012-13ஆம் ஆண்டில் கணவனும் மனைவியும் ஒருங்கிணைந்து 112.4 கோடி ரூபாய் எடுத்துக் கொண்டனர்.இதற்கு முந்தைய ஆண்டில் இவர்கள் இவ்வாறு 114 கோடி ரூபாய் எடுத்துக்கொண்டுள்ளனர்.
போர்ப்ஸ்’ இதழின்படி கலாநிதி மாறனின் நிகர சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.
 இந்தியாவின் 23ஆவது பணக்காரராக அவர் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது சன் குழுமத்தின் கீழ் 33 தொலைக்காட்சி அலைவரிசைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 
இந்தியாவில்உள்ள 9 கோடியே 50 லட்சம் குடும்பங்களுக்கு அவை நாள்தோறும் சென்று அடைகின்றன.சன் குழுமத்தின் சார்பில் இவையன்றி சன் டைரக்ட் என்னும் வீடுகளுக்கு நேரடி தொலைக்காட்சி இணைப்பு, 45எப்.எம். ரேடியோ நிலையங்கள், இரு நாளேடுகள், ஆறு பத்திரிகைகள் உள்ளன.
 சென்ற ஆண்டு மாறன் ஹைதராபாத் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் உரிமையை விலைக்கு வாங்கி அதனை சன் ரைசர்ஸ் என்று மாற்றினார்.ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திலும் சன் குழுமத்திற்கு அதிகப் பங்குகள் உண்டு.
----------------------------------------------------------------------------------------------------------------

கங்கையும் பாவமும்.
-------------------------------------
த்ங்கள் பாவத்தை கரைக்க கங்கையில் மூழ்கி எழுந்தவர்கள் கங்கையை மாசு படுத்திய பாவத்திற்கு எங்கு போய் மூழுகுவார்கள்.
புண்ணிய நதி என்று ஆண் டாண்டு காலமாக இந்து மதத் தைச் சார்ந்த கோடானு கோடி இந்தி யர்கள் நம்பி வந்த நதியின் இன்றைய அலங்கோலத்தை மத்திய அரசு வழக்குரைஞர் ரஞ்சித்குமார் உச்ச நீதிமன்றத் தில் தெரிவித்த தகவல் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. பெண்களை வாழ்க்கையில் எப்படி வரிக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் நதிகளையெல்லாம் பெண்கள் பெயரால் அழைத்து நிஜ வாழ்க்கையில் பெண்களை கொடுமைப்படுத்துவது போல் நதிகளையும் கேவலமாக நடத்துகிறார்கள் என்பதற்கு கங்கை ஒரு உதாரணம்தான்.
எப்போதாவது சில நாட்கள் தண்ணீர் வரும் வைகைமுதல் என்றும் தண்ணீர் ஓடும் கங்கை வரை அனைத்து நதிகளை யும் அரசும், முதலாளித்துவ வர்க்க மும் நாசமாக்கி வருகின்றனர்.
 பகீரதனின் முயற்சியால் கங்கை கைலாயத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அது பூமியில் இறங்கும் போது அதன் வேகத்தை பூமி தாங்காது என்பதால் சிவன் அதைத் தன் தலையில் தாங்கி தன் ஜடாமுடி வழியாக நளினமாக வழிய விட்டார் என்பது  கங்கை நதியைப் பற்றிய கதை.
 ஆனால் அந்த தெய்வீக நதியின் இன்றைய நிலை தெய்வங்களின் மேல் நம்பிக்கை வைத்தி ருப்பவர்களை நாணித் தலை குனிய வைக்கிறது. கங்கை தனது உற்பத்தி இடமான கோமுகியில் இருந்து வங்கக்கடலில் கலக்கும் வரை ஓடும் நதி மனிதர்கள் குளிக்கக் கூட தகுதியற்றது என்று அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
கங்கையின் கரையில் ஏராளமான நகரங்கள் இருந்த போதும் வார ணாசியும், அலகாபாத்தும் இந்து மதத்தின் மேல் நம்பிக்கை வைத் திருப்பவர்களுக்கு மிகவும் முக்கிய மான நகரங்களாகும். கங்கையைத் தூய்மைப்படுத்துவது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பேசிய அரசு வழக்குரைஞர் ரஞ்சித் குமார் அலகாபாத் தில் குளிப்பதில் தனக்கு சிரமம் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
 அங்குகங்கை மாசுபட்டும், அழுக்கடைந் தும் இருந்ததால் தான் சங்கமத்தில் குளிக்கவில்லை என்று கூறி யுள்ளார். தண்ணீரின் உயிரிய உயிர்வளி தேவை ((BOD - Biochemical Demand Oxygen)) ஒரு லிட்டருக்கு 3 மில்லிகிராமுக்கு அதிகமாக இருந்தால் அந்த நீர் குளிப்பதற்கு தகுதியற்றது ஆகிறது.
 கங்கை செல்லும் வழியில் இந்த அளவு அதிகமாக, 6.4 மில்லிகிராம் / ஒரு லிட்டர் இருப்பது அலகா பாத்தில்தான் என்று அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன
இந்த பிஓடி அளவு வாரணாசியில் 3.4 , கான்பூரில் 4.5 , கன்னோஜில் 3.9 எனவும் குறைந்த பட்ச அளவை விட அதிகமாக உள்ளது. இதே நிலைமை பீகார், மேற்கு வங்கம் மாநிலங்களிலும் கங்கையில் காணப்படுகிறது. குளிப்பதற்கு கங்கை நீர் தகுதியற்றது என்றால் அதை எப்படி குடிப்பது? கங்கை செல்லும் வழியில் குடிநீருக்கு கங்கையில் இருந்துதான் நீர் எடுக் கப்படுகிறது.
 1985ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி கங்கையில் நாள் தோறும் 134கோடி லிட்டர்சாக்கடை உள்ளிட்ட தொழிற்சாலைக் கழிவுகள் சங்கமிக்கின் றன. இது 1993ம் ஆண்டில் 253.8 கோடி லிட்டராக உயர்ந் துள்ளது.
கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்களில் குறிப்பாக கான்பூரில் உள்ள தொழிற் சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கங்கையில் கலக்க விடுகின்றன. அவற்றின் மீது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடவடிக்கை எடுக்க முடிய வில்லை என்று வாரியத்தின் வழக்கறிஞர் விஜய் பஞ்சவானி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 வாரியம் தனது இயலாமையை வெளிப்படுத்துகிறதா என்று அமர் வாயம் அவரிடம் வினா எழுப்பியது. கங்கைக் கரை ஒரு சுடுகாடாக பயன்படுத்தப்படுவதாலும் அது மாசடைகிறது என்று மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
கங்கை உற்பத்தியாகும் கங் கோத்ரி அல்லது கோமுகியில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவு வரையான கங்கை நதியின் ஒரு பகுதியை சுற்றுச்சூழல் உணர்வு மண்டலம் ஆக 2013 டிசம்பரில் அறிவித்தது. ஆனால் இதுவரை அது தொடர்பான ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை என்று வழக்கு தொடுத்த எம்.சி.மேத்தா உச்சநீதி மன்றத்தில் குறிப்பிட்டார். கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து நான்கு கடமைகளை தன் முன் வைத்துள்ளது. 
கங்கையில் தடை யில்லா நீரோட்டம், தெளிவான நீரோட்டம், கங்கையை ஒரு இயற்கை உயிரியல் அமைப்பாக அங்கீகரிப்பது , அதையடுத்து விலங்கியல் அமைப்புக்கு கொடுக்கும்அத்தனை தகுதி களையும் அதற்கு அளிப்பது ஆகியவை யாகும்.
உள்நாட்டு கழிவுநீர் அகற்றும் பணியை போர்க்கால அடிப் படையில் நடத்தி கங்கைக்கரை நகரங்கள் அனைத்திலும் போது மான கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவ வேண்டும் என்று அவர் ரஞ்சித்குமார் கூறி னார். நீதிமன்றத்தில் கங்கை தூய்மைப்படுத்துவது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்
.இந்த வாதங்களைக் கேட்ட பின்னர் கங்கையை சுத்தப்படுத்த 200 ஆண்டுகள் தேவைப்படும் என்று அமர்வாயம்  கூறியதுதான் இன்றைய உண்மை நிலை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
சுரன் 11092014

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?