பவானி சிங்கிற்கு இப்போதும் நீதிபதியின் பாராட்டு?

 ராம் ஜெத்மலானி போன்ற வழக்கறிஞர்களின் வாதங்களுக்குப் பின், 
நீதிபதி சந்திரசேகரா பிறப்பித்த உத்தரவு:
‘ஜெயலலிதா உட்பட, நான்கு பேரின் ஜாமின் மனு மீது நடந்த முதல்கட்ட விசாரணையின் போது, 'குற்றவாளிகளை வெளியே விட்டால் சாட்சிகளை கலைப்பர். வழக்கின் போக்கு திசைமாறி விடும்' என, அரசு வழக்கறிஞர் பவானி சிங் கூறினார்.
ஆனால் அவரே தற்போது, ஜாமின் வழங்க ஆட்சேபனை இல்லை என தெரிவிப்பது, முற்றிலும் உள்நோக்கம் கொண்டதாகவும் சந்தேகத்தை தருவதாகவும் உள்ளது. 
முதல் நாள் ஒரு அரசு வழக்குரைஞர்அவ்வாறு கூறிவிட்டு, தற்போது நேர்மாறாக மாற்றி கூறுவது வேடிக்கையாக-வேதனையாக உள்ளது.

இந்த ஊழல் வழக்கை, நீதிமன்றம் தீவிரமாக கருதுகிறது. பெரிய அளவில்முறைகேடு நடந்துள்ளது; ஊழல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.ஊழல் என்பது, நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலான மோசமான குற்றம். ஊழல் குற்றவாளிகளை, சாதாரண குற்றவாளிகளாக எண்ண முடியாது. ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர்களுக்கு, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஜாமின் தராமல் தள்ளுபடி செய்துள்ளன.
லாலு பிரசாத் யாதவ் பற்றி, இங்கே குறிப்பிடப்பட்டது. அவர், 10 மாதங்கள் சிறையில் இருந்த பின், உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார் என்பதை மறந்து விடக்கூடாது.தண்டனை பெற்றவர்களுக்கு, இந்த நீதிமன்றத்தில் ஜாமின் அளிக்க முடியாது. 
மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு நீதிபதி சந்திரசேகரா உத்தரவிட்டுள்ளார்.
இனி அடுத்ததாக  ஜெயலலிதா தரப்பு என்ன செய்யும்?
கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு, உச்ச நீதிமன்றம் தான் ஜாமின் வழங்கியது. தற்போது, சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு, கர்நாடகா உயர் நீதிமன்றம், ஜாமின் மறுத்துள்ளதால், உச்ச நீதிமன்றத்தை தான், நால்வரும் நாட வேண்டும். 
ராம்ஜெத்மாலினி உச்ச நீதிமன்றத்தில் ”குற்றவாளிக்கு உடல் நிலை பாதிப்பு என்று கூறினால் இடைக்கால தடை உத்திரவு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.அதையே கூறி ஜெயாவை வெளியில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதிமுகவினருக்கு “இனி வருங்காலங்களிலாவது தீர்ப்பு முழுமையாக வெளிவந்து அதிகாரப்பூர்வமாக தெரிந்த பின்னர் வெடி,இனிப்பு விவகார்ங்களை வைத்துக்கொள்ளுங்கள்.
சிறையில் தங்கள் தலைவர் அடைக்கப்பட்டதற்கும்,பிணை மறுக்கப் பட்டதற்கும் வெடித்து,இனிப்பு வழங்கி பின் அழுது புரண்ட தொண்டர்கள் என்ற புகழ் உலகிலேயே அதிமுகவினருக்குத்தான் உரித்தானது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
'வாட்ஸ்ஆப்’ 
பயன்படுத்துவதால் வரும்
சிக்கல்களை
 தவிர்ப்பது எப்படி?
மூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் 'வாட்ஸ்ஆப்' எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. 
'வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே... இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்... இதோ பதில் .
தெரிந்தவரோ, தெரியாதவரோ... உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்... அவர்களால் உங்கள் 'வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் 'வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.
பிரச்னைகளைத் தவிர்க்க, 'வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது,  பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், 'லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். 'ப்ளாக்' (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்... போயே போச்!
தெரிந்தவர்களோடு மட்டும் 'வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.
இதோ ஒரு செய்தி.:
‘வாட்ஸ் அப்Õ மூலம் பிரசவக் காட்சியை பரப்பிய சம்பவத்தில் 3 அரசு டாக்டர்கள் போலீசில் சரணடைந்தனர். கண்ணூர் மாவட்டம் பையனூரைச் சேர்ந்த 30 வயதான ஒரு இளம்பெண்ணுக்கு பையனூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த பிரசவக் காட்சிகள் ‘வாட்ஸ் அப்Õ மூலம் பரவியது. இது குறித்து பையனூர் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். பிரசவ அறையில் இருந்த டாக்டர்களான மதுகுமார், சுனில் மற்றும் மனோஜ் தான் இதற்கு காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் புகாரில் கூறி உள்ளார்.பையனூர் போலீசார் 3 டாக்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரும் தலைமறைவானார்கள். முன் ஜாமீன் கோரி இவர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று டாக்டர்கள் மதுகுமார், சுனில் மற்றும் மனோஜ் ஆகியோர் பையனூர் போலீசில் சரணடைந்தனர்.
ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதி லிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான 'நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொண்டால், 'ஆபத்துதவி'யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அப்போது இருப்பது இன்டர்நெட் வசதி இல்லாத இடமாக இருந்தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்துவிடும்.
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.zayaninfotech.security
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?