டிசம்பர் மாதம்,

முக்கிய தினங்கள்


 1 எய்ட்ஸ் தினம்.
 2 உலக மாசுத் தடுப்பு நாள்
 2 உலக அடிமைத் தொழிலாளர் 
 ஒழிப்பு தினம்.
 3 மாற்றுத் திறனாளிகள் தினம்.
 4 தேசிய கடற்படை தினம்.
 7 கொடிநாள்.
 10 மனித உரிமைகள் தினம்.
 14 எரிபொருள் சிக்கன நாள்.
 18 சிறுபான்மையினர் உரிமை தினம்.
 24 தேசிய நுகர்வோர் தினம்.
 
முக்கிய நிகழ்வுகள்

 1 1956 கன்யாகுமரி பகுதி  தமிழ் நாட்டுடன் இணைந்தது.
 1 1965  எல்லைக் காவல் படை ஆரம்பமானது.
 1 1963 நாகாலாந்து இந்தியாவுடன் இணைந்தது.
 2 1976 ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 4 1934 இந்தியாவில் விமான தபால் சேவை 
 ஆரம்பமானது.
 4 1996 அமெரிக்காவின் "பாத் ஃபைண்டர்' விண்கலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு 
 விண்ணில் செலுத்தப்பட்டது.
 
 5 1896 கன்னிமாரா நூலகம் துவக்கப்பட்டது.
 6 1889 மதுரை ஏ.வி. மேம்பாலம் திறந்து 
 வைக்கப்பட்டது.
 6 2006 "நாசா'வின் கண்டுபிடிப்பு! செவ்வாய் கிரகத்தில் நீர்மம் இருக்கிறது!
 7 1792 இந்தியாவின் கிழக்கிந்தியக் காவல் துறை 
 ஆரம்பமானது.
 7 1946 ஐ.நா.சபையின் சின்னம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 8 1997 நியூசிலாந்தில் முதல் பெண் பிரதமராக "ஜென்னி சிப்லே' தேர்வானார்.
 9 1946 இந்திய அரசியல் அமைப்புக் குழு 
 சச்சிதானந்தா தலைமையில் நடந்தது. அதில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

  12 1961 "கோவா-போர்ச்சுகல் காலனி'யை ராணுவ 
 நடவடிக்கை மூலம் இந்தியா கைப்பற்றியது. 

 15 1988 இந்திய பார்லிமெண்டில் 21லிருந்து 18
 வயதாக ஓட்டுரிமை மசோதா சட்டமானது.
 17 1903 ரைட் சகோதரர்களின் முயற்சியில் ஆகாய விமானம் முதன் முறையாக வானில் 
 வெற்றிகரமாக பறந்தது.
 17 1946 தமிழ் வளர்ச்சிக் கழகம் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தொடங்கப்பட்டது.
 18 1973 ரஷ்யாவின் துணைக்கோள் சந்திரனில் 
 இறங்கியது.
 21 1968 அமெரிக்கா அப்போலோ-8, 
 விண்வெளி மூலம் சந்திரனுக்கு 
 மனிதனை அனுப்பிவெற்றி பெற்றது.
 22 1851 இந்தியாவில் முதல் சரக்கு ரயில் 
 உத்தராஞ்சலில் துவக்கி 
 வைக்கப்பட்டது.
 22 1964 தனஷ்கோடியில் மணிக்கு 250மைல் வேகத்தில் புயல் 
 22 2012 ஒடிஸô சந்திப்பூர் கடல் பகுதியில் 2ஆவது நாளாக அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக  இயக்கப்பட்டது.
 
 26 2004 சுனாமி! இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் 2லட்சத்திற்கும் மேலானோர் பலியாயினர். நில  நடுக்கம் 9.00 ரிக்டர். கோடிக்கணக்கில் சேதம்!
 27 1945 சர்வதேச நிதி நிறுவனம் ஆரம்பமானது.
 28 1895 முதன் முதலில் லூயி பிரின்ஸ் சகோதரர்களால் முழு சினிமா உருவானது. 
 
 29 1965 இந்தியாவில் "விஜயந்த் டாங்க்' அறிமுகப்படுத்தப்பட்டது.
 30 1975 அமெரிக்காவின் விண்கலம் காசினி வியாழனைக் கடந்தது.

பிரபலங்களின் பிறந்த தினங்கள்

 3 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.
 5 1901 வால்ட் டிஸ்னி. டிஸ்னி லேண்ட் ஆரம்பத் தலைவர்,பிரபல மிக்கி மவுஸ் கேரக்டரை 
 உருவாக்கியவர், படத்தயாரிப்பாளர்.
  11 1882 பாரதியார். புரட்சிக் கவிஞர். சுதந்திரப் போராட்டவீரர், பத்திரிக்கை ஆசிரியர்.

  17 1797 ஜோசஃப் ஹென்றி. மின் காந்த 
 பயன்பாட்டைக் கண்ட விஞ்ஞானி.

 18 1913 வில்லி ஃப்ராண்ட் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்,மேற்கு ஜெர்மனி சான்ஸிலர்.
 18 1932 தீபம் நா.பார்த்தசாரதி. சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.
 18 1878 ஸ்டாலின். ரஷ்யப் புரட்சியாளர், அதிபர்.
 
 22 1887 எஸ். ராமானுஜம். கணிதமேதை. 
 
 26 1899 உத்தம் சிங். ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குக் காரணமான 
 ஜெனரல் டயரை கொன்றவர். 
 26 1893 மா.சே.துங். முன்னாள் சீனப் பிரதமர்.
 26 1924 நல்லக்கண்ணு. தமிழக வலது கம்யூனிஸ்ட் 
 கட்சியின் தலைவர்.
 27 1822 லூயி பாஸ்டர். வெறிநாய்க் கடிக்கு 

 மருந்து கண்ட விஞ்ஞானி.
  
நினைவு தினங்கள்

 1 1990 விஜயலட்சுமி பண்டிட். நேருஜியின் தங்கை, முதல் பெண் தூதுவர்.
 2 1933 எஸ்.ஜி.கிட்டப்பா. பாடகர், நாடக சினிமா கலைஞர், கே.பி.சுந்தராம்பாள் கணவர். 
 
 5 2013 நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்கா 
 சுதந்திரப் போராட்ட வீரர், அதிபர்.

 13 1987 நா.பார்த்தசாரதி. "தீபம்' பத்திரிக்கையின் 
 ஆசிரியர். சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.

.
 17 1928 பாப்பா உமாநாத். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவி. 

 19 2013 வி.சுவாமிநாத ஆத்ரேயா. எழுத்தாளர்.

 24 1987 எம்.ஜி.ராமச்சந்திரன். 

 24 1973 ஈ.வே.ரா.பெரியார்.
  30 1971 விக்ரம் சாராபாய். விண்வெளி 
 ஆராய்ச்சியாளர். 
 30 2013 கோ.நம்மாழ்வார். இயற்கை விவசாய 
 விஞ்ஞானி. விவசாய சீர்திருத்தவாதி.
 
சுதந்திர நாடுகள்

 1 டொமினியன் ரிபப்ளிக், போர்ச்சுகல், ஐஸ்லாந்து.
 2 யுனைடட் அரேபியன் எமிரேட்ஸ்.
 6 பின்லாந்து
 12 கென்யா
 16 கஜகஸ்தான்
 21 ஆர்மேனியா
 24 லிப்யா
 29 மங்கோலியா

============================================================================================================
இணையத்தளம் பெயர் வந்த விதம்?

இன்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்குத்தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும்? 

வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக
புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயற்கையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது, தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது. 

அப்போது டிம் பெர்னர்ஸ் லீ ( வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் சைக்கோ ஹிஸ்டரி என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார்.
வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்?

லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அவருக்கு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது இருந்த ஆர்வம்தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசிமோ பவுண்டேஷன் கதை வரிசையில், வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தொலைநோக்கிலான கற்பனையால் விவரித்திருப்பார். அதில் வரும்  பேராசிரியர் ஹாரி செல்டன், வரலாறு, சமூகவியல் மற்றும் கணிதத்தை கலந்து மக்களின் பழக்க வழக்கங்களை கணிக்கும் முறையை உருவாக்கியிருப்பார். இதைத்தான் சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருப்பார்.

லீயும் இதே பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவருடன் சேர்ந்து விவாதித்தவர்கள் வெப்சைட் என்ற பெயரையே வலியுறுத்தியிருக்கின்றனர். லீயும் அதை ஏற்றுக்கொள்ளவே, வெப்சைட் என்ற பெயர் இணையதளங்களுக்கு சூட்டப்பட்டது.

வலை என்னவாக உருவாகப்போகிறது என தெரியாத காலகட்டத்தில், இணைப்புகளை கொண்டிருக்கும் பக்கங்களுக்கு, டிம் பெர்னர்ஸ் லீ சைக்கோஹிஸ்டரி என பெயர் சூட்ட நினைத்ததை இன்று திரும்பி பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும்.

வெப்சைட் பெயர் சூட்டப்பட்ட விதம் பற்றிய இந்த சுவாரஸ்யமான பிளேஷ்பேக்கை, லீயின் சகாக்களில் ஒருவரான பிரிட்டன் பேராசிரியர் வெண்டி ஹால் சிநெட்.காம் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில்  பகிர்ந்து கொண்டுள்ளார்.

இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஹால், பிரிட்டனில் தொழில்நுடப்துறையில் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக கருதப்படுபவர். 2006ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீயுடன் இணைந்து இவர் வெப் சயின்ஸ் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.

வெப்சைட்டை வேறு பெயரில் யோசித்து பார்ப்பதே கூட அந்நியமாக தோன்றும் அளவுக்கு இந்த பெயரும் அதன் கருத்தாக்கமும் நமக்கு நெருக்கமாகிவிட்டது.


மார்க்ஸ்-ஏங்கல்ஸ் படம்தான்.மலையாள நாடு தெரு ஒன்றில் வரையப்பட்டது.

                                    சின்னப்  பிள்ளைத்தனமா இருக்கு?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?