லாபம் எனக்குநட்டம் நாட்டுக்கு



கிங்பிஷர் நிறுவனத்தைத் தொடர்ந்து தற் போது சன்குழும நிறுவனர் கலாநிதிமாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் தனது மூச்சை நிறுத்த துவங்கியிருக்கிறது.
ஏற்கனவே கிங்பிஷர் விமான நிறுவனம் திவாலானதில் அதன் உரிமையாளர் விஜய் மல்லையாவிற்கு எந்த நஷ்டமும் இல்லை. 
மாறாக அந்நிறுவனத்திற்கு கடன் அளித்த இந்திய பொதுத்துறை வங்கிகளுக்குத்தான் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பு.
 ஆனால் இன்றளவும் விஜய் மல்லையா எப்போதும் போல்மற்றதொழில்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அந்த பணத்தை பொதுத்துறை வங்கியில்சேமித்து வைத்த மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய இடத் திற்கு அரசு தள்ளப்பட்டிருக் கிறது.
தற்போது கிங்பிஷரின் வழியை அடியொற்றி ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் திவால் அறி விப்பை விரைவில் வெளியிட இருக்கிறது. 
கடந்த5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மொத்த கடன் அதன் சொத்து மதிப்பை விட ரூ.1459 கோடி அதிகமாக இருக்கிறது. 
இத்தகவலை அந்த நிறுவனத்தை கணக்கு தணிக்கை செய்த பத்லிபாய் தணிக்கை நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 
இந்த நிறுவனம் தொடர்ந்து மூழ்காமல் இதேநிலை தொடர வேண்டும் என்றாலும் உடனடியாகஆயிரம் கோடி ரூபாய் தேவை என ஆசிய பசிபிக்விமான போக்குவரத்து மையம் மதிப்பீடு செய் திருக்கிறது. 
இந்த நிலையிலும் அந்த நிறுவனம் திடீ ரென விமானப் பயணிகளுக்கு பல்வேறு சலுகைதிட்டங்களை அறிவித்தது.
 அதன்படி இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலிருந்தும் மற்றொரு இடத்திற்கு குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க முடியும் என்று அறிவித் தது. 
இதனை நம்பி ஏராளமானோர் முன்பணம்கட்டி பயணத்திற்கு பதிவு செய்திருக்கின்றனர். 
ஆனால் இந்த நிறுவனத் தின் அனைத்துசெயல்பாடுகளையும் கண்காணித்து வரும் விமானப் போக்குவரத்து இயக்கு நரகம் இதனையும் அனுமதித்துள்ளது.
ஆனால் இன்றைய நிலையோ முழுப்பணம் செலுத்தி முன்பதிவு செய்த விமானங்களை கூட இயக்க முடியாமல் பயணங்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதில் அடுத்தாண்டு பயணத்திற்கான பணம் கட்டியவர்களின் கதி என்னவாகும் ? 
இந்த நிலையிலேயே விமானங்களை தினசரி இயக்க அரசு ரூ. 2 ஆயிரம் கோடிகடனாக அளிக்க வேண்டும் என்று இந்த நிறுவனம் கோரியிருக்கிறது. இதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் தந்திரம். 
இதுவரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அரசு வங்கியில் கடனாக பெற்று எவ்வளவு பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது என்பது விரைவில் தெரியவரும். 
ஆனால் அதே நேரம் சன் குழுமத்தின் கீழ் 33 தொலைக்காட்சி சேனல்கள், 45 பண்பலை வானொலி, வாரப்பத்திரிகை, நாளிதழ், திரைப்பட தயாரிப்பு என பல தொழில்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் குழுமம்தான் ஆசியாவிலேயே லாபகரமான தொலைக்காட்சி குழுமம் என மீடியா பார்ட்னர்ஸ் ஏசியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 
அதாவது லாபம் தனக்குரியது. 
நஷ்டம் நாட்டிற்குரியது 
எனமக்கள் தலையில் கை வைப்பதுதான் தனியார் ,அந்நிய நிறுவனங்களின் தலியாய கொள்கை. 
இதனை தனியார் பணமுதலிகளுக்கு அப்படியே அமல்படுத்தி மக்களின் வரிப்பந்த்தை தருவதற்குத்தான் பாஜக,காங்கிரசு அரசுகளின் நவீன தாராளமயம் உள்ளது. 
இதைத்தான் கார்ப்பரேட்களின் பிரதிநிதிகளாய் உள்ள காங்கிரசும், பாஜகவும் அதானி,அம்பானி போன்ற நிறுவனங்களின் லாபம் குறையாமல் இருக்க செயல்பட்டு வந்தன.
மோடி அதானிக்கு 6000 கோடிகளை வங்கிகள் மூலம் தொழில் நடத்த ஏற்பாடு செய்தது பழைய செய்தி.அதே அதானி ஏற்கனவே வங்கிகளில் 13000 கோடிகளை கடனாக வாங்கிக்கொண்டு இன்றுவரை செலுத்தாமல் தொழில் நடத்தி வருவது தற்போது வரும் உண்மை செய்தி.
இன்று பெட்ரோல் விலை உலகமெங்கும் அதளபாதாளத்தில் இருந்தாலும் இந்தியாவில் மட்டும் மண்ணெண்ணை,டீசல்,சமையல் எரி வாயு விலை உயர்வு,தட்டுப்பாடு,மானியம் நிறுத்தம் என்று வாக்களித்த மக்களை கசக்கி பிழிகிறார்கள்.
காரணம் தங்களுக்கு தேர்தல் படி அளக்கும் பெருமாள்களுக்கு உண்டியலில் லாப ப்பணம் செலுத்தும் வேண்டுதலுக்குத்தான்.
======================================================================.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?