இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடி உதிர்தல் -முடி நரைத்தல்

படம்
--------------------------------------------------- அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி உதிர்தல் ,நரைத்தல் பிரச்னைஉண்டாகி ன்றது. இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள். உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்து போன உணவு, காரம், உப்பு, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளை விட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு, பசியில்லாத போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல், பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் போன்றவை இந்த தோஷ காரணிகளை அதிகரித்து, இளம் வயது முடி உதிர்வு பிரச்னை ஏற்படுகிறது. அதே போல் முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல், வாடிப்போன முகம், கண்களைச் சுற்றி கரு வளையம், தளர்ச்சியான தசைகள், உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு சேர்தல், மூட்டு வலி, முறையற்ற மாதவிடாய், சுறுசுறுப்ப

ஏன் இந்த முடிவு?

படம்
விளையாட்டு பிள்ளை அல்லது பிளே பாய் சசிதரூர் [57]இப்போதைய மனைவி திடீரென மரணமடைந்துள்ளார். டெல்லி ஐந்து நட்சத்திர விடுதியான 'லீலா பேலஸ்' என்ற விடுதியில் சுனந்தா புஷ்கர்,[56வயது ] 345எண்ணிட்ட அறையில்  மர்மமான முறையில் பிணமாகக் கிடந்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் 'மெர் தரார்' என்ற பெண்ணுடன் சசிதரூருக்கு தொடர்பிருப்பதாக சுனந்தா புஷ்கர் குற்றம் சாட்டியிருந்த வேளையில், சுனந்தா புஷ்கரின் இந்த மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காரணம் சசி தரூர் பின் பக்கம்தான். இந்தியாவின் ஐநாவுக்கான துணைச் செயலாளார்களில் ஒருவராக பல ஆண்டுகள் பணிபுரிந்த சசி  தரூர், துபாயைச் சேர்ந்த வர்த்தகரான சுனந்தா புஷ்கரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு முன்னதாக, அதே ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சசி  தரூர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சசி  தரூருக்கு தொடர்புடையதாக கூறப்பட்ட அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணியில், அன்றைய காலகட்

பணம் மட்டுமே குறி

படம்
இந்திய கடற்படைக்கு, புதிதாக நீர்மூழ்கி குண்டுகள் வாங்க,ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 1,800 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.  இந்த நீர்மூழ்கி குண்டுகளை,இத்தாலிய  'பின்மெக்கானிகா' நிறுவனத்தின் கிளை  நிறுவனமான 'ஒயிட்ஹெட் அலெனியா சிஸ்டெமி'யிடம் வாங்க முடிவு ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?இந்த பின் மெக்கனிக்காவின் இன்னொரு கிளை நிறுவனம்தான். அகஸ்டா வெஸ்ட் லாண்ட் ' வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த, 'பின்மெக்கானிக்கா' நிறுவனத்தின் கிளை  நிறுவனமான 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனத்திடம்தான்  மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்தது .  இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.இதனால் அந்த ஒப்பந்தமே  ரத்து செய்யப்பட்டது. அந்த ஊழலில் அசிங்கப்பட்டு போன காங்கிரசு ஆட்சியும் ராணுவ அமைச்சகமும் மீண்டும் அதே பின் மெக்கனிக்கா நிறுவனத்திடமே ஒப்பந்தம் போடுவதை பார்த்தால் இவர்களுக்கு வெட்கம்,மானம

அருகில் வரும் மரணம்

படம்
                     மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி யிலிருந்து ஜெயந்தி நடராஜன் விலகியபோது வரவிருக்கும் தேர்தலையொட்டி “கட்சிப் பணிகளைச் செய்வதற்காகவே” அவர் விடுவிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சொல்லிக் கொண்டது. ஆனால், பல உள் நாட்டு - வெளி நாட்டுப் பெரு நிறுவனங்களின் தொழில் திட்டங்கள் சுற்றுச் சூழலுக்கு இடையூறு செய்வதாக இருப்பதால் அவற்றுக்கு அவர் அனுமதி வழங்காமல் இருந்ததால், அந்த நிறுவனங் கள் அளித்த நிர்ப்பந்தம் காரணமாகவே அவரிட மிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்று ஊடகங்களில் ஊகச் செய்திகள் வந்தன. அது உண்மைதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது, அவரைத் தொடர்ந்து பொறுப் பேற்றுக் கொண்ட எம். வீரப்ப மொய்லி தெரிவித் துள்ள தகவல்.அவர் இந்த அமைச்சகத்திற்குப் பொறுப் பேற்றபிறகு கடந்த ஒரு மாதத்திற்குள் ஒன் றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70க்குமேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறாராம். ஜெயந்தி நடராஜனும் தன்னிடம் வந்த கோப்புகளை தாமதப் படுத்தியதற்கு சில உள்நோக்கம் இருந்ததாகக் கூற ப்பட்டாலும்  அவர் மாற்றம் பணமுதலைகளுக்கு கொண்டாட்டம்தான். சட்டப்படி முறையான நடை முறைகள் முடி வ

டுவிட் டரிவால்?

படம்
டுவிட்டரில் #YoKejriwalSoHonest இந்த பக்கம் போயிருக்கிறீர்களா? "கேஜ்ரிவால் மிகவும் நேர்மையானவர்" எனும் ஹாஷ்டேகுடன் இந்த நகைச்சுவை குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.  ஒவ்வொரு குறும்பதிவுகளும் ஒரு விதத்தில் கேஜ்ரிவாலின் நேர்மையை பற்றை கலாய்க்கும்  வகையில் அமைந்துள்ளன. படிக்க  சில குறும்பதிவுகள்: 'கேஜ்ரிவால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி விருந்துக்குக்கூட கட்டணம் வசூலித்தார்.' 'அவர் பள்ளி படிவத்தில் தன் தந்தை பெயரை எழுதுவதற்கு முன்னர் மரபணு பரிசோதனை செய்து கொண்டார்'. 'மனைவி நான் குண்டாக இருக்கிறேனா என்று கேட்டால் அவர் ஆம் என்றே பதில் சொல்வார்'. 'ட்ரு லைஸ் படத்தின் முதல் பாதியை மட்டுமே அவர் பார்த்தார்'. இவை எல்லாம் மாதிரிகள் மட்டுமே. இதே போல விதவிதமான முறையில் கேஜ்ரிவாலின் நேர்மையை கிண்டலடிக்கும் நகைச்சுவை குறும்பதிவுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன. இதன் பயனாக #YoKejriwalSoHonest ஹாஷ்டேக் ட்விட்டரில் சமீபத்தில் முன்னிலை இடத்தை பிடித்தது. பலரும் இந்த குறும்பதிவுகளை பார்த்து ரசித்து தங்கள் பங்கிற்கு புதிய கேஜ்ரிவா