இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொடரும் மின் வெட்டு காரணம் ?

படம்
தமிழகத்திற்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை.  ஆனால்  உற்பத்தியாவதோ 8 ஆயிரம்  மெகாவாட் மின்சாரம்தான். 4 ஆயிரம் மெகாவாட்  மின்சாரத்தை சரிகட்ட தனியார், வெளிமாநிலங்களில்  இருந்து மின்சாரம் பெறப்பட்டு  வருகிறது.  தமிழகத்தில் மொத்தம் 669 துணை மின்நிலையங்கள் உள் ளன. இதில் 400  கே.வி துணை மின்நிலையம் 14ம், 230 கே.வி துணை மின்நிலையம் 75ம், 110  கே.வி  துணை மின்நிலையம் 580ம் உள்ளன.  காற்றாலை, அனல்மின்நிலையம்,  நீர்மின்நிலையம், அணுமின்நிலையம் மூலம் தமிழகத்தில் மின்உற்பத்தி  செய்யப்பட்டு  வருகிறது. தமிழகத்தில் உள்ள வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி, நெய்வேலி   அனல்மின்நிலையங்கள் 5710 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.  கூடங்குளம், கல்பாக்கம்  அணுமின்நிலையம் மொத்தம் 1440 மெகாவாட் உற்பத்தி திறன்  கொண்டவை.  மேட்டூர், அமராவதி,  நீலகிரி, காட்டேறி, குண்டா, மோயாறு, பாபநாசம்,  வைகை, முல்லைப்பெரியார், கோதையாறு ஆகிய  நீர்மின்நிலையங்கள் சுமார் 1693  மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை, குமரி, நெல்லை, தூத்துக்குடி,  கோவை,  திருப்பூர் மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் மொத்தம் சுமார் 4 ஆயிரம்

இது நம்ம நாட்டு வைத்தியம்!

படம்
தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வர, சருமம் தங்கம் போல் மின்னும்.  பாசிப்பயிறு மாவை  வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு பிரச்னை சரியாகும்.  கிராம்பு, கற்பூரம், ஓமம் ஆகியவற்றை ஒரு சிட்டிகை வீதம் எடுத்து  பொடி செய்து வீக்கம் உள்ள ஈறுகளில் சிறிது நேரம் வைத்து வாய் கொப்பளிக்க, ஈறு வீக்கம் குறையும்.  அருகம்புல்லையும் மஞ்சளையும் சேர்த்து  அரைத்து படர்தாமரையில் பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும்.  உலர்ந்த ரோஜா இதழ்களுடன் பன்னீரையும் சந்தனத்தையும் அரைத்து முகத்தில் தடவ, சருமம் பொலிவு பெறும். கிராம்பை வெற்றிலையுடன்  சேர்த்துப் போட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.   வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்னியாக  சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.  வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண், இருமல் குணமாகும்.   வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து, தினமும் சிறிதளவு வெறும் வயிற்றில்  சாப்பிட உடல் எ

அந்த 49 நாட்கள்...!

படம்
டெல்லி முதல் அமைச்சராக இருந்த ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில், கட்சி தொடங்கிய 3-வது மாதத்திலேயே, மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல் அமைச்சர் ஆகி சாதனை படைத்தவர், அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே. கடந்த டிசம்பர்  28-ம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்றதும், தனது வாக்குறுதியின் படி மின் கட்டணம் குறைப்பு, அதிக அளவு தண்ணீர் சப்ளை போன்ற நடவடிக்கைகளை பெற்று சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட சாதனையாளர், முதல் அமைச்சராக பதவி ஏற்ற 49நாளில் பதவி விலகி இருக்கிறார் என்றால், அதில் ஏதோ உள்ளான நோக்கு இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில்தான், யூனியன் பிரதேசமான டெல்லி மாநிலத்தின் காவல்துறை இருக்கிறது.  இது தெரிந்துதான் கெஜ்ரிவால், முதல் அமைச்சராகி இருந்துள்ளார்.   முதல் அமைச்சரான பின்பும், மத்திய அரசையும், டெல்லி காவல்துறையையும்  எதிர்த்து நடுரோட்டில் இறங்கி போராட்டம் நடத்திய கெஜ்ரிவால் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இப்படியாக முதல் அமைச்சரான பின்பும், எதிர்க்கட்சி போல கெஜ்ர

மூடர் கூடம்?

படம்
    பேஸ்புக் காதல்?  உலகின் முன்னணி சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளை  பிப்ரவரி 4ல்,  கொண்டாடியது.  ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அறையில் சிறு அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம். 2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது. அந்த எளிய முயற்சி இன்று  உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து- டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்குகிறது.இதை அம்மாணவரே எதிர்பார்க்கவில்லை. இந் நிறுவனம், அன்று  ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது.  பத்தாண்டுகளுக்கு முன்பு அதனை  தொடங்கிய மா   ர்க் ஸக்கர் பெர்க் "Thefacebook” என  பெயரிட்டார்.  2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வக