10 ஆயிரம் கோடி பேரம்

பெட்ரோலியத் துறையில் இருந்து பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு பண பேரம் நடந்துள்ளதாக இந்த வழக்கில் கைதான முன்னாள் பத்திரிகையாளர் சைகியா என்பவர் திடுக் தகவலை வெளியிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் சைகியா.
பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று துவங்கவிருக்கும் நிலையில் இந்த முறைகேடு நடந்திருப்பது மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் ஊழல் குற்றச்சாட்டு இது. தில்லியில் உள்ள பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கு நிதித் துறை சார்பில் பட்ஜெட் திட்டம் தொடர்பான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணத்தில் இருக்கும் சாராம்சம் என்ன என்பதைஅறியும் விதமாக ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட பல்வேறு முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் தரகர்கள் மூலம் அரசின் ஆவணத்தை திருடியுள்ளன.
அமைச்சக ஊழியர்கள் சிலரின் துணையுடன் இந்த அதிர்ச்சிகர மான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லி சிறப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி இது வரை 12 பேரை கைது செய்துள்ளனர்.
இதில் மேற்படி ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோடிக்கணக்கில் பேரம்
போலீசாரிடம் சிக்கியுள்ள முன்னாள் பத்திரிகையாளர் சைகியா, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், இந்த முறைகேட்டில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை பேரம் பேசப்பட்டு கைமாறும் அளவிற்கு இருந்தது. இதனை தடுக்கவே தானும் இந்த விஷயத்தில் தலையிட்டதாக கூறியிருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் முன் கூட்டியே எச்சரிக்கவும் செய்தார். இது தொடர்பாக பல்வேறு அமைச்சகத்திற்கு ஒரு எச்சரிக்கை நோட்டீசும் அனுப்பியுள்ளார்.
இ தில் அமைச்சக ஆவணங்கள் விஷயத்தில்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என்றும், அமைச்சக அலுவலகங்க ளில் ரகசிய கேமரா அவசியம் என்றும்குறிப்பிட்டுள்ளார்.
இந்த எச்சரிக்கையையும் மீறி தற்போது பெட்ரோ லியத் துறையில் ஆவணங்கள் திருடு போயுள்ளன. இது போன்று நிலக்கரித் துறையிலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் சந்தேகப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட் டுள்ளது.
`பாஸ்வேர்டு’ தெரியாததால் பாதுகாப்புத்துறை தப்பித்தது.
திருடப் பட்ட மிக முக்கிய ஆவணங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுபவை.
1. தேசிய எரிவாயு தொகுப்பு குறித்து நிதி அமைச்சரின் பட்ஜெட் பேச்சுக்கான 2 பக்க குறிப்பு;
2. எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தினைச் சேர்ந்த விதேஷ் என்பவர் குறித்த ரகசியம் என்று குறிப்பிடப்பட்ட ஆவணங்கள்;
3. பிரதமரின் முதன்மைச் செயலர் நிபேந் திரா மிஸ்ராவின் கடிதம்;
4. பெட்ரோலிய அமைச்சகத்தின் எண்ணெய் தோண்டும் துறையின் ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டவை மற்றும் எரிவாயு குறித்த மாத அறிக்கை;
5. இலங்கையில் உள்ள வாய்ப்புகள் குறித்த குறிப்பு;
6. அவசரக்கூட்டம் குறித்த ஒரு நோட்டீஸ்; மற்றும்
7. நிலக்கரி மற்றும் எரிசக்தி அமைச்சகங் களிடம் திருடப்பட்ட ஆவணங்கள் என அனைத்தும் திருடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை ரகசியமாக பராமரிக்கப்படுபவை யாகும். இதுபோன்ற எண்ணற்ற ஆவணங்கள் பல காலமாக திருடப்பட்டு ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தரப்பட்டுள்ளன.
 சில கம்பெனிகள் சாஸ்திரி பவானிலுள்ள கீழ்நிலை ஊழியர் களையே இந்த சட்டவிரோதச் செயலுக்காக நியமித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு கம்பெனிகளின் மூத்த உயர் அதிகாரி களும் அடங்குவர்.
வெள்ளியன்று இரவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த சக்சேனா, ஜூப்லி எனர்ஜி கம்பெனியைச் சேர்ந்த சந்திரா, ரிலையன்ஸ் அடர்க் கம்பெனியைச் சேர்ந்தஆனந்த் , எஸ்ஸார் கம்பெனியைச் சோந்த வினஸ் மற்றும் காய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நாயக் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120(பி)(குற்றச்சதி,)
மற்றும் பிரிவு 411 (மோசடியான முறையில் திருடப்பட்ட பொருளை வாங்கும் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப் பட்டு தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
 இந்த வழக்கில் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஊழியர் லோகேஷ் என்பவர் தேடப் பட்டு வருகிறார்.
பாதுகாப்புத்துறை தப்பித்தது
பெட்ரோலிய அமைச்சகத்தில் கைதான ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ரகசிய ஆவணங்களை திருடவும் முயற்சித்துள் ளனர்.
விசாரணையில் அவர்கள், பாதுகாப்புத்துறையின் கணிப்பொறியின் ரகசிய கடவுச் சொல்லை கண்டறிய முடியவில்லை என்று கூறியுள் ளனர். இந்த கூற்று உண்மையா என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
 சந்தேகிக்கப்படும் தனியார் மின்சாரக் கம்பெனிகளின் உயர் அதி காரிகளின் தொலைபேசி உரையாடல்கள் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
இது வரை 100க்கும் மேற்பட்ட உரை யாடல்கள் பதிவு செய்யப்பட்டு அவை அலசி ஆராயப்பட்டு வருகின்றன.

இதுபோன்று ஆவணங்களை திருடுவது சர்வசாதாரணமான ஒன்று என பெருமுதலாளிகளின் அமைப்பான இந்திய தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.35 விழுக்காடு கார்ப்பரேட் கம்பெனிகள் ஆவணங்களை திருடுவதில் ஈடுபட்டு வருகின்றன.
பெட்ரோலிய அமைச்சகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து அமைச்சகத்திலிருந்தும் முக்கிய ஆவணங்களை திருடுவது பல பத்தாண்டுகளாகவே நடைபெற்று வருகிறது என இந்திய தொழிற்கூட்டமைப்பின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்தந்த அமைச்சகங்களின் ஊழியர்கள் மட்டுமல்ல,
அமைச்சகத்திலுள்ள உயர் அதிகாரிகளும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அந்தந்த அமைச்சகங்களின் சில குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரை மாதச் சம்பளம் போன்று கையூட்டைப் பெற்று வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

========================================================================
இந்தியாவை புரட்டிப்போட்டு ,வளர்ச்சியை கொண்டுவரப்போவதாக மோடி வித்தை மஸ்தானாக பேசி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தவர் மோடி .

இவரின் ஒன்பது மாத கால ஆட்சியில் இந்தியா எப்படி?

"இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி ஏற்பட்டு 9 மாதங்களாகியும்,
 தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளில் பெரும் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலை ஏமாற்றமளிக்கிறது."

 இந்தியாவின் எச்.டி.எப்.சி வங்கியின் தலைவர் தீபக் பரேக் கூறியுள்ளார்.
============================================================ 
உலகில் உள்ள ஏழை நாடுகளில் ஒன்று ஜிம்பாப்வே. 

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் 91-வது பிறந்தநாள் இன்று.
உலகில் உள்ள மிகவும் மூத்த  தலைவரான முகாபே, 35 ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தில் உள்ளார்.
இன்னும் ஒருவாரத்தில் தனது 91வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
ஜிம்பாப்வே எல்லையில் உள்ள விக்டோரியா அருவி அருகே, மிகவும் ஆடம்பரமான கொல்ஃப் மைதானம் ஒன்றில் பெரும் கொண்டாட்டம் ஒன்றை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் செலவில் இந்த கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன.
யானைகளும் எருமைகளும் மறிமான்களும் சிங்கம் ஒன்றும் பலியிடப்படவுள்ள இந்த திருவிழாவில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த கொண்டாட்டங்களுக்கு பொதுமக்களே பணம் செலவிடுவார்கள் என்று அரசு கூறி  வருகிறது..
தங்கள் அன்றாட கஞ்சி க்கே வழியில்லா மக்கள் எங்கிருந்து பணம் கொடுப்பார்கள் என்று எதிர் தரப்பினர் சொல்லிவருகின்றனர்.
==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?