இரு வல்லவர்கள் ,,,.

தாமஸ் ஆல்வா எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார்.
எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள்.
தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன். இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார்.
தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார்.
இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார்.
திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880-ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர்.
இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
 இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும்.
இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை.
இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார்.

========================================================================

முதன் முறை  முதல்வராக,

 நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் கலைஞர் கருணாநிதி.

இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.
கருணாநிதி, தனது பள்ளி பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார்.

பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13-வது வயதிலேயே சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அதன்பின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தை காட்டினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகத்தில் தலைமை தாங்கி நடத்தினார். 1957-ம் ஆண்டு திமுக சார்பில் குளித்தலையில் போட்டியிட்டு, முதன்முறையாக தனது சட்டமன்ற வரலாற்றை தொடங்கினார்.

1967-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.

கருணாநிதி திமுக பொருளாளராக கட்சியில் உயர்வு பெற்றார்.
அண்ணாத்துரையின் மறைவுக்கு பின்னர் 1969-ம் பிப்ரவரி மாதம் இதே தேதியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக திமுகவின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறையும் பதவி வகித்துள்ளார்.

=======================================================================

‘நரேந்திர மோடியின் தோல்வி’




தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றிபெற்றதையடுத்து, `ஆம் ஆத்மியின் வெற்றி நரேந்திர மோடியின் தோல்வி’ என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். “இது நரேந்திர மோடியின் தோல்வி. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்ததற்கு கிரண்பேடியை மட்டும் குறைகூறக்கூடாது. பிரதமர் மோடியின் மீதுநாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அரவிந்த் (கெஜ்ரிவால்) அரசை எப்படி நடத்த வேண்டும்என்பதை அறிவார். காரக்பூர் ஐஐடிபட்டம் பெற்றவர். மிகவும் திறமைசாலி, புத்திசாலி” என்று கூறிய அன்னாஹசாரே, கெஜ்ரிவாலுக்கு தனதுவாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.நில அபகரிப்பு தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் குறித்து பாஜகவைச் சாடியஅன்னா ஹசாரே,
“என்ன அவசரச்சட்டம் அது? வளமான வேளாண் நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுப்பது என்ன மாதிரியான அவசரச் சட்டம்? பாஜகவின் அனைத்து வாக்குறுதிகளும் ஒன்றுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட பிறகே புகழடைந்தார். அதனால்தான் அவருக்கு இப்போது இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. ஆகவே, முன்பு செய்ததவறுகளை கெஜ்ரிவால் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்” என்றும் கூறினார்.
மோடிக்கு எதிரான சுனாமி: உத்தவ் தாக்கரே
இந்நிலையில் ஆம் ஆத்மியின் வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வியைக் குறிப்பதாக அன்னா ஹசாரே குறிப்பிடுவதை ஒப்புக்கொண்டாக வேண்டும் என்றுபாஜகவின் முக்கியக் கூட்டாளிக் கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.மும்பையில் செய்தியாளர்களிடம் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, “ஜனநாயகத்தின் மிகப் பெரிய நாள் இன்று. இது வெறும் அலை அல்ல, மிகப் பெரிய சுனாமிதான் தில்லியில் வீசியுள்ளது.
ஆம் ஆத்மிக்கு மீண்டும் ஒரு முறை மக்கள் வாய்ப்பளித்துள்ளார்கள். மிகப் பெரிய வாய்ப்பு இது. இதனை அவர்கள் மீண்டும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.மக்கள் விரக்தியில் உள்ளனர். தில்லியில் ஆட்சி நடத்தி வருபவர்களுக்கு மக்கள் அளித்துள்ள எச்சரிக்கைதான் ஆம் ஆத்மியின்வெற்றி. அன்னா ஹசாரே கூறியதைப்போல ஆம் ஆத்மியின் வெற்றிகிரண் பேடி அடைந்த தோல்வியல்ல. இது பிரதமர் நரேந்திர மோடி அடைந்த தோல்வி” என்று கூறினார்.
அடுத்த தோல்வி பீகாரில்: நிதிஷ் குமார்
தில்லி தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் மீதான மக்களின் மதிப்பீடுகள் தான் என்றும், இதே நிலைதான் பீகாரிலும் தொடரும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ் குமார் “பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மீதான மதிப்பீடுகள்தான் தில்லி தேர்தல் முடிவுகளாக வந்துள்ளன. தில்லி நாட்டின் முக்கியமானஇடமாகும்.
நாட்டு மக்களின்மனநிலையை அது பிரதிபலித்துள்ளது. தில்லியில் அதிகமாக வசிக்கும் பீகார் மக்களும் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள். நவம்பர் மாதம் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, பாஜகவின் அடுத்த தோல்வி பீகார் மாநிலத்தில் தான்” என்று கூறினார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்விக்கு தான் தார்மீக பொறுப்பேற்பதாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்தார்.தில்லியில் அவரது வீட்டின் முன் கூடியிருந்த செய்தியாளர்களை கிரண் பேடி சந்தித்தார். அப்போது,“தேர்தல் களத்தில் எனக்கும், கெஜ்ரிவாலுக்கும் எதிரான போட்டியில் யாராவது ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்தவகையில் கெஜ்ரிவால் முழு மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால், தேர்தல் முடிவுகளை வைத்து நரேந்திர மோடி ஆட்சியை கணிக்கக் கூடாது.

தேர்தலில் ஒருகட்சி வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த கட்சியும் பொறுப்பு; ஆனால் அதேவேளையில் ஒருகட்சி தோல்வியுற்றால் பிரதானவேட்பாளரே பொறுப்பாகமுடியும். எனவே, இத் தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்“ என்று புதிய விளக்கம் அளித்துக் கொண்டார்.இத்தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கிரண்பேடி 2277 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்ஆத்மி வேட்பாளர் எஸ்.கே. மாக்காவிடம் தோல்வியடைந்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?