நான்கு மடங்கு வசூல்


இந்த  10 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் நிதி வசூல் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பொது தேர்தல் நடைபெறும் காலகட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் பெரும் கம்பெனிகளிடம் இருந்து தேர்தல் நன்கொடையாக நிதியை பெறுவது வழக்கம்.
 2004-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் பெற்ற தேர்தல் நன்கொடையின் மொத்த தொகை ரூ.223 கோடியே 80 லட்சம். 
2009-ம் ஆண்டில் இத் தொகை ரூ.854 கோடியே 89 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் ரூ. ஆயிரத்து 158 கோடியே 59 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 20104-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும் செலவழித்த தொகை குறித்து தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது.
இதன்படி பெற்ற நன்கொடை மற்றும் செலவழித்த தொகையில் பா.ஜ., முதலிடத்தையும்
காங்., -2-ம் இடம்,
 அதை தொடர்ந்து பிற கட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
 இதன்படி பா.ஜ,பெற்ற தொகை ரூ. 588 கோடியே 45 லட்சம் ஆகும்.
செலவழித்த தொகை ரூ.712 கோடியே 48லட்சம்,
காங்., கட்சி ரூ.350 கோடியே 39 லட்சம் பெற்று இரண்டாம் இடத்தையும், செலவழித்த வகையில் ரூ. 486 கோடியே 21 லட்சம் எனவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவ்வளவு பணத்தையும் கொடுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலா இருக்கும்?
அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத்தான் வென்ற மோடி கடுமையாக முயற்சித்து கடுமையான மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
வாக்குகளை விட பெரும் நிறுவனங்கள் தரும் நோட்டுகளுக்குத்தான் சக்தி அதிகம்.
தேசியவாத காங்கிரஸ் ரூ. 77 கோடியே 85 லட்சமும்,
 பகுஜன் சமாஜ்கட்சி ரூ.77 கோடியே 26 லட்சம் ரூபாயும்,
 இ.கம்யூ ரூ.9 கோடியே 52 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளது.
 செலவழித்த வகையில் தேசிய வாத காங்கிரஸ் ரூ. 64 கோடியே 48 லட்சம், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.30 கோடியே 6 லட்சம்,
இ.கம்யூ. கட்சி ரூ.6 கோடியே 72 லட்சம் ரூபாயும் செலவு செய்துள்ளதாக தேர்தல்ஆணையத்திடம்  அறி்க்கை செய்துள்ளன .
இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெரும் நிறுவனங்களில் நன்கொடைபெறாமல் உறுப்பினர்கள்,தொழிற்சங்கங்கள்,உண்டியல் மூலம் பொது மக்களிடம் பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளன.
இப்படி எல்லா கட்சிகளும் தேர்தல் நிதியாக கோடிகளில் குவிக்கவும் ,தேர்தல் செலவு என்று கால் வாசி செலவினை மட்டும் தாக்கல் செய்வதையும் அனுமதிக்கும் தேர்தல் ஆணையம் வாக்குக்கு 200,500 வாங்கும் மக்களை மட்டும் சிறையில் தள்ளுவதாக மிரட்டுவது சரியாகுமா?
==
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?